• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காங்கிரஸ் கட்சியை அழிக்கும் ராகுல் காந்தி -2

ஈரோடு சரவணன் by ஈரோடு சரவணன்
January 6, 2021
in அரசியல் செய்திகள், வரலாறு
0
காங்கிரஸ் கட்சியை அழிக்கும் ராகுல் காந்தி -2
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

             பாரத தேசத்தில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ்  கட்சி.  அகில இந்திய தலைவராக சீத்தராம் கேசரிக்கு பின்னர், நேரு குடும்பத்தைச் சார்ந்தவர்களை தவிர வேறு ஒருவரும் வரவில்லை.  பிரதமர் பதவிக்கு கூட ராகுல் காந்தியின் பெயரை மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்பதாக ஒரு கட்டளையே பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஆனால் காங்கிரஸ் கட்சியில் இதர பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் எவரும் கிடையாதா என்ற கேள்விக்கு பதில் கிடையாது.   பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த தலைவர்கள் புறகணிக்கப்பட்டார்கள்.  குஜராத்தில் பாரத் சிங் பார்மர் , கட்சியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் புறம் தள்ளப்படுவதாக கூறி கட்சியிலிருந்து வெளியேறினார்.  சதீஸ்கர் மாநிலத்தில் அஜித் ஜோகி ஓரம் கட்டப்பட்டார்,  பஞ்சாப் மாநிலத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்ட அஸ்வனி ஷிஹாரி சஸ்பென்ட் செய்யப்படாமல், கட்சியின் மாநில பிற்படுத்தப்பட்ட பிரிவின் துணைத் தலைவர் மஞ்சித் சிங் வின்ஸ்பால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  

                காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பல மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் தொடர்ந்து புறகணிக்கப்பட்டதாலும், அவமானப்படுத்தப்பட்டதாலும் பலர் வெளியேறினார்கள் என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்.   ஆந்திராவில் அனுமந்த ராவ்  விமான நிலையத்தில் அவமானப்படுத்தபட்ட சம்பவம்,  வி.பி.சிங் வெளியேறியது முதல் பல மாநில கட்சிகள் உருவாக காரணமாக இருந்த கட்சி காங்கிரஸ் கட்சி.  சீத்தாராம் கேசரி சற்றே வெளியேறிய போது, தலைவர் இருக்கையில் அமர்ந்து கொண்ட சோனியா, கேசரியை தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றியதை மறந்து விட்டு, காங்கிரஸ் கட்சியின் நேரு குடும்பத்தினர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்தாரார்களா? காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜகஜீவன் ராம், சந்திரசேகர், ராம் தன், மூப்பனார் போன்றவர்கள் வெளியேறிய காரணங்களை சற்றே ஆய்வு செய்தால் உண்மை நன்கு விளங்கும். 

                மேலும் மேற்படி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும் போது, காங்கிரஸ் கட்சி மக்களை ஒரு பேருந்தில் ஏற்றி, அதனை இயக்கும் அதிகாரத்தை அவர்களிடமே கொடுக்கிறது.  ஆனால் பா.ஜ.க.வோ அந்த அதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கொடுக்கிறது.  இந்த கருத்து மிகவும் மட்ட ரகமான கருத்தாகும்.  ஐம்பதாண்டு ஆட்சி செய்த காலத்தில், காங்கிரஸ் கட்சி செய்த இமாலய தவறுகள் எது என்பதை கவனிக்க வேண்டும்.  நேரு முதல் மன்மோகன் சிங் வரை ஆண்ட பிரதமர்கள் காலத்தில் நடந்த ஊழல்கள் எல்லாம் மக்களிடம் அதிகாரத்தை பெற்றுதான் செய்தார்களா?  எல்லையில் உள்ள நிலத்தை  அந்நியனுக்கு விட்டுக் கொடுத்த போது, மக்களிடம் அனுமதி பெற்றுதான் அதை செய்தார்களா? நேரு சீனாவிற்கு பல லட்சம் ச.கி.மீ தூரமான அக்ஸ்ய சின் பகுதியை விட்டு கொடுத்ததும், இந்திரா காந்தி கச்ச தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததும், நரசிம்ம ராவ் தீன்பீகா பகுதியை பங்களா தேஷ்க்கு விட்டு கொடுத்ததும் மக்களின் அனுமதியுடன் தான் தாரைவார்த்தார்களா?  இது மக்களை முட்டாளாக்கும் காரியமாகும். 

                   மோடியை எதிர்ப்பவர்களை தேச விரோதகளாகி கைது செய்யப்படுகிறார்கள்  என ஒரு புதிய குற்றச்சாட்டை வைக்கிறார் ராகுல் காந்தி. ஆனால் உண்மையில் ராகுல் காந்தி யாருக்கு வக்காலத்து வாங்கிறார் என்றால் அர்பன் நக்ஸல்களுக்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  ஏற்கனவே ப.சிதம்பரம் சுமத்திய குற்றச்சாட்டையே தற்போது ராகுல்காந்தி முன் வைக்கிறார்.      மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, மகாராஷ்ட்ராவில் ஐந்து மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருவாளர் ப.சிதம்பரம் நாகபுரியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதே அரசின் நோக்கம் என ஒரு புது விளக்கத்தை கொடுத்துள்ளார்.  இந்த விளக்கத்தை தற்போது ராகுல் காந்தி புதிதாக கருதி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கூறியிருக்கிறார்.   இந்த சாத்தான் ஓதுதிய வேதம், சுதந்திர நாட்டில் தீவிர இடதுசாரி கருத்துகளையோ அல்லது வலதுசாரி கருத்துக்களையோ கடைப்பிடிக்க மக்களுக்கு உரிமை உண்டு.  அதுதான் சுதந்திரத்தின் சாரம்சம்.  கருத்துக்களை கடைபிடிப்போரில் யாரேனும் வன்முறையில் ஈடுபட்டாலோ, வன்முறையை தூண்டினாலோ, வன்முறைக்கு உதவி செய்தாலோதான் குற்றமாகும்.  என திருவாய் மலர்ந்த ப.சி. தனதுஆட்சியில் என்ன செய்தார் என்பதையும் விளக்கியிருக்க வேண்டும்.   கைது செய்யப்பட்டவர்கள் ஏழு பேர்கள் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறந்து விட்டு ப.சி சொல்லாடல் புரிந்ததை, ராகுல் காந்தி  தற்போது சொல்லாடல் செய்கிறார். 

                திருவாளர் ராகுல் காந்திக்கு சில கேள்விகளை எழுப்ப வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் வன்முறையில் முழு நம்பிக்கை வைத்துள்ள மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா இல்லையா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  2012-ம் வருடம் 128 அமைப்புகள்,  மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருக்கிறது, மேற்படி அமைப்புகள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உளவுத் துறை தங்களது  அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்  வசம் ஓப்படைத்தது. உளவுத் துறை குறிப்பிட்டுள்ள  அமைப்புகளின் முக்கியமான பணி, மாவோயிஸ்ட்களுக்கு நிதி வசூலிப்பது, தவறான கருத்துக்களை பரப்புவது, மாவோயிஸ்ட்களுக்கு சட்ட உதவி புரிவது என்பது ராகுல் காந்திக்கு  தெரியுமா அல்லது தெரியாதா ?  உளவுத் துறை கொடுத்த அறிக்கையை மத்திய கேபினட் அமைச்சாராக இருந்த சிதம்பரம் படிக்கவில்லையா?  அது பற்றி ராகுல் காந்தியிடம் ப.சி கூறவில்லையா?

                கைது செய்யப்பட்டவர்கள் இடதுசாரி அறிவு ஜீவிகள் என இப்போது ஒப்பாரி வைக்கும் ராகுல் காந்தி ,  மன்மோகன் சிங் ஆட்சியில் தடை செய்யப்பட வேண்டும் என உளவு துறை கொடுத்த அமைப்புகள்,   People’s Union of Democratic Rights.  Revolutionary Democratic Front,    Indian Association of People’s Lawyers  , Committee for the Release of Political Prisoners ,  Visthapan Virodhi Jan Vikas  Andolan,   Committee for Protection of Democratic Rights ,  Republican Panthers என்பதை தற்போது நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இருப்பவர்கள் என்பதை ப.சி மறுக்கிறா?    மன்மோகன் சிங் ஆட்சியில் பல முறை  கைது செய்யப்பட்டவர்கள் இவர்கள் என்பதையும் மறுக்கிறாரா?  மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திராவில் இவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்பதையும் நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். 

                மக்கள் சிவில் உரிமை கழகம், யாருக்காக வாதாடுகிறது என்பதை பார்க்க வேண்டும்.  31.5.2018-ல் சத்தீஸ்கர் காவல் துறையினர் மாவோயிஸ்ட் பிரச்சார பொறுப்பாளர் அபாய்  தேவதாஸ் நாயக் என்பவரை கைது செய்தார்கள்.  கைது செய்து 12 நாட்கள் கழித்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியதை எதிர்த்து விடுக்க கோரி வழக்கு தொடுத்தவர்கள் மக்கள் சிவில் உரிமை கழகம்.  இவர்கள் எப்பொழுதாவது, வலதுசாரிகளுக்கு வக்காலத்து வாங்கி நீதி மன்ற படிக்கட்டுகளில் ஏறியிருக்கிறார்களா என்பதை சிந்திக்க வேண்டும். 

                தற்போது கைது செய்யப்பட்டுள்ள அருண் பெரைரா (Arun Ferreora) ,  2007-ல் முரளி சத்ய ரெட்டி, தேவேந்திர புரோலே, நரேஷ் பன்சோட் என்ற மாவோயிஸ்ட்களுடன் கைது செய்யப்பட்டார்.   2011-ல் வெளியே வந்த பின்னரும்,  மாவோயிஸ்ட் தொடர்பை கைவிடாததால், மீன்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  2012-ல் மும்பை உயர்நீதி மன்றம் ஜாமீன் கொடுத்ததின் காரணமாக வெளியே இருக்கிறார்.  கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான வெர்னான் கோன்சால்வேஸ் ( Vernon Gonsalves )   தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. ( மாவோயிஸ்ட்) அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்.  2007-ல் பயங்கரவாத தடுப்பு படையினரால் , டெட்னேட்டர்கள், ஜெலட்னின் குச்சிகள், நக்ஸல் ஆதரவு பிரசுரங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, நீதி மன்றத்தால் தண்டனை பெற்றவன். 2005-ல் ஆந்திர காவல் துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பேசியதற்கு  வராவராவ் கைது செய்யப்பட்டார்.   2011-ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டவன் கௌதம் நாவ்ல்கா (Gautam Navalkha  )   ஜம்மு காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துபவன் என்ற குற்றச்சாட்டில் அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமில்லாமல் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவன்.  2016-ல் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானிக்கு ஆதரவாக கட்டுரை எழுதியவன்.   

                இப்படிப்பட்டவர்களுக்கு தான் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கிறது.  காங்கிரஸ் ஆண்ட பத்தாண்டு காலத்தில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள், மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கைது செய்தால், ப.சி, மற்றும் ராகுல் காந்தி  போன்றவர்கள் இடதுசாரி சிந்தனை என்றும், அரசுக்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்க அடக்க நினைக்கிறார் மோடி என குற்றச்சாட்டுகளையும் வைக்கிறார்.   இவரின் தலைவர் ராகுல் காந்தியோ ஒரு படி மேலே போய், இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள் ஒன்று மட்டுமே இருக்க வேண்டும் அது ஆர்.எஸ்.எஸ். மற்ற தொண்டு நிறுவனங்கள் இருக்க கூடாது என்பது தான் மோடியின் திட்டம் என தேவையில்லாமல் வேறு விஷயத்திற்கு தாவுகிறார்.  தொண்டு நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஏன் தங்களது வரவு செலவு கணக்குகளை உரிய இடத்தில் தாக்கல் செய்யவில்லை என்ற கேள்வியை கேட்க கூட துணிவு இல்லாதவர் ராகுல் காந்தி.               

                கைது செய்யப்பட்டவர்களை பற்றி ஊடகங்கள் நடித்த நாடகங்கள்  –  கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர்களுக்கு பக்க பலமாக ஊடகங்கள் செயல்பட்டன.  சில நாளிதழ்கள் தவிர மற்றவை கைது செய்யப்பட்டதின் நோக்கத்தை முழுமையாக எழுதவில்லை.  பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் வகுத்ததாக கைது செய்யப்பட்டார்கள் என்பதை டெக்கான் குரானிக்கல் உள்ளிட்ட சில பத்திரிக்கைகள் மட்டுமே   “ Plot to kill PM Modi by Urban Naxal  “   தலைப்பு செய்தியாக வெளியிட்டார்கள்.  ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி ஹிந்து போன்ற பத்திரிக்கைகள் மோடியை கொல்ல சதி திட்டம் என்தை மறைத்து விட்டு இடதுசாரி சமூக ஆர்வாலர்கள் கைது என செய்தி வெளியிட்டார்கள்.   2019 –ல் நடக்கும் தேர்தல் காலமாக இருப்பதால், செய்தி வெளியிட்டு மோடிக்கு ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் தெளிவாக பல ஊடகங்கள் இருக்கின்றன.  

                லட்சக்கணக்கான பண்டிட்கள் கட்டயாப்படுத்தி காஷ்மீரிலிருந்து இஸ்லாமியர்கள் விரட்டியடித்த போது, இந்த சமூக ஆர்வாலர்கள் எங்கே போனார்கள்.   நாடு முழுவதும் சமூக ஆர்வலர்கள் கைது செய்ததற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள் என ஊதுகுழலாக ஒலிக்கும் ஊடகங்கள், தமிழகத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் எவராவது ஆர்பாட்டம் அல்லது மறியல் நடத்தினார்களா என்பதை பார்க்க வேண்டும்.  ஊடகத்தில் உள்ள இடதுசாரிகளின் கைவரிசை என்பதே உண்மை.

          நீதி மன்றங்களின் நம்பக தன்மைக்கு ஆபத்து  –  மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் செயல்படும்  சிலரை கைது செய்ததை கண்டித்து, உச்ச நீதி மன்றத்திற்கு சென்றவர்களுக்கு ஆதரவாக, கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலில் வைக்க உத்திரவிட்டது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.   நீதி மன்றம் நள்ளிரவில் கூட விசாரணையை வைப்பதை பார்ததால், நீதிபதிகள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் கூட மாறுப்பட்ட கருத்து உருவாகிறது.  சிதம்பரத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்காக நள்ளிரவில் நீதிபதி விசாரனை நடத்தப்பட வேண்டுமா?  மெரினா கடற்கரையில் ஒரு தலைவரின் சடலத்தை புதைக்க கூட, விடிய விடிய விசாரனையை ஏன் நடத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.  ஆனால் இத்தாலி நாட்டைச் சார்ந்த மாலுமி, இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு கால தாமதம் செய்தது சரியா என மனச்சாட்சி உள்ளவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 

                நீதி மன்றத்தில் கைது செய்யப்பட்டவர்களை நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசுக்கு கால அவகாசம் கொடுக்காமல், நீதி மன்றம் தன்னிச்சையாகவே வீட்டு காவலலுக்கு உத்திரவிட்டுள்ளது.  வழக்கு விசாரனைக்கு வருவதற்கு முன்பே ஆதரங்களை காட்ட வேண்டும் என கோருவது சரியா என நீதிபதிகள் கேள்வி கேட்காமல், இடதுசாரிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்துள்ளார்கள்.   நீதி மன்றத்தில் பூனா காவல்நிலைய அதிகாரிகள், நீதி மன்றத்தில், தற்போதைய அரசியல் கட்டமைப்பின் மீது நம்பிக்கையில்லாமல், மாவோயிஸ்ட்களுடன் இணைந்து மிகப் பெரிய கலவரத்தை உருவாக்க முயன்றுள்ளார்கள்.  இதற்காக 35 கல்லூரிகளில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க முயன்று இருக்கிறார்கள்.  இதற்கான ஆதராங்கள் உள்ளன என கூறிய பின்னரும் கூட நீதிபதிகள் தங்களது கவனத்தில் கொள்ளவில்லை.

                ராமர் சேது பாலத்திற்கு வழக்கு நடந்த போது, நீதிபதி பாலகிருஷ்ணன், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக,  Who says it (Ram Sethu) is a place of worship? Who goes to the middle of the sea to worship என்ற கேள்வியை கேட்டது சரியானதுதான  என எந்த சமூக ஆர்வலர்களும் கேள்வி கேட்கவில்லை.   ராமர் சேதுவை போல், சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில், நீண்ட காலமாக கடைபிடித்து வரும் சம்ரதாயங்களுக்கு புறம்பாக, இருபாலருக்கும் சம உரிமை உண்டு என கூறிய நீதிபதிகள்,  பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என கூறி நாற்பது ஆண்டுகலாமாக ஏன் கொண்டு வர வில்லை என எப்பொழுதாவது கேள்வி எழுப்பினார்களா என்பது தெரியவில்லை.  

(முற்றும்)

முந்தைய பதிவு: பாகம் 1


Previous Post

தேவேந்திரகுல வேளாளர்களின் SC பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை!

Next Post

விட்டேனா பார் !! ஜனாதிபதி பதவியை தக்க வைக்க இறுதி வரை போராடுவேன் – டொனால்டு ட்ரம்ப்

ஈரோடு சரவணன்

ஈரோடு சரவணன்

Next Post
விட்டேனா பார் !! ஜனாதிபதி பதவியை தக்க வைக்க இறுதி வரை போராடுவேன் – டொனால்டு ட்ரம்ப்

விட்டேனா பார் !! ஜனாதிபதி பதவியை தக்க வைக்க இறுதி வரை போராடுவேன் - டொனால்டு ட்ரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
மோகன்லால் ஜூவல்லரி நிறுவனத்தில் நடந்த ஐ.டி.ரெய்டில் கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணங்கள் கண்டுபிடிப்பு!

வருமானவரி வசூலில் பாய்ச்சலெடுக்கும் ஐதராபாத், பெங்களூரு

April 12, 2023

Recent News

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
மோகன்லால் ஜூவல்லரி நிறுவனத்தில் நடந்த ஐ.டி.ரெய்டில் கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணங்கள் கண்டுபிடிப்பு!

வருமானவரி வசூலில் பாய்ச்சலெடுக்கும் ஐதராபாத், பெங்களூரு

April 12, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108