கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 60 சதவீத பேருந்துகள் இயங்கலாம் என அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது பேருந்துகளில் நுாறு சதவீதம் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் தொழிற்சாலைகள், பள்ளி,கல்லுாரி பேருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது