எம்.பி. கனிமொழி ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை கோவை – மருதமலை ரோட்டிலுள்ள பாப்பநாயக்கன் புதுார் என்ற பகுதியில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மருதமலையிலிருந்து கோவை செல்லும் ரோட்டை மறித்து அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தைச் சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் நின்றனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. அப்போது வடவள்ளி பகுதியிலிருந்து கோவையை நோக்கி 108 ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியுடன் வந்தது. ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டும் தி.மு.க. தொண்டர்கள் யாரும் வழிவிடவில்லை.
னிமொழி நினைத்திருந்தால் மைக்கில் பேசி அந்த ஆம்புலன்ஸ்க்கு தொண்டர்கள் வழிவிடுமாறு கூறியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாத அவர் அதற்கு மாறாக ‘இந்த ஆம்புலன்சும் நாங்கள் விட்டதுதான்’ என்று அரசியல் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு வழிப்பாதையில் ஆம்புலன்சை அனுப்புமாறும் அறிவுறுத்தினார்.

