ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தை புரட்டி எடுத்த, ‘புரெவி’ புயல், வளிமண்டல சுழற்சியாக வலுவிழந்து, முடிவுக்கு வந்துள்ளது. இதனால், கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில், அக்டோபர் மூன்றாவது வாரத்தில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, டிசம்பர் வரை பெய்ய வேண்டிய, இயல்பான அளவுக்கு பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில், டிச., 1ல் உருவான புரெவி புயல், டெல்டா மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வடக்கு, வடகிழக்கு மாவட்டங்களிலும், அதீத கனமழையை கொட்டியது.