அமெரிக்கா வைச் சேர்ந்த மாடர்னா என்ற தடுப்பு மருந்து நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்து 95.4% வீரியத்துடன் கொரோனா வைரஸை போக்குகிறது எனக் கூறப்படுகிறது. அமெரிக்க நிறுவனமான மாடர்னா, பைசர் நிறுவனத்தை அடுத்து தற்போது புகழ்பெற்று வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க நோய்த்தடுப்பு நிபுணர் டாக்டர் ஆண்டனி பெளசி கூறுகையில், மாடர்னா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமான முடிவுகளை காண்பிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜாக்ஸ் கூறுகையில் ‘என்னுடைய மருத்துவ பணியில் நான் பார்த்த மிகவும் வீரியமிக்க தடுப்பு மருந்து இதுதான்’ என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாம் பகுதியில் இந்த தடுப்பு மருந்து கொரோனா நோயால் அதிகமாக தாக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் என ஆண்டனி பெளசி தெரிவித்துள்ளார்.
மாடர்னா தடுப்புமருந்து 15 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டது. இதில் 90 பேர் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து மேலும் 17 ஆயிரம் தன்னார்வலர்கள் உடலில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இவர்களில் யாருக்கும் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. இந்த தடுப்பு மருந்தின் காரணமாக அதீதமான பக்கவிளைவுகள் யாருக்கும் ஏற்படவில்லை என மாடர்னா நிறுவன தலைமை தெரிவித்துள்ளது.
மேலும், மாடர்னா நிறுவன தடுப்பூசி -20 டிகிரி வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டால் அவனால் பைசர் நிறுவன தடுப்பூசி -20 டிகிரி வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். இது பொதுவாக அம்மை தடுப்பூசி பாதுகாக்கப்படும் வெப்ப நிலை ஆகும்.ஆனால் பைசர் நிறுவன தடுப்பூசி -70 டிகிரி வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது.
இத் தடுப்பூசி அடுத்த மாதம் இறுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.