மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் அரசியல் வாழ்வில் பல பாதைகள் இருந்தாலும் அவரின் பயணம் பீகார் மக்களுக்கா கவே இருந்துள்ளதை அறிந்து கொள்ளமுடியும். உலகிலேயே அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற அரசியல்வாதி என்று கின்னஸ் ரெக்கார்ட் படை த் த ராம்விலாஸ் பஸ்வான் பீகார் அரசியலி ல் 50 ஆண்டுகளுக்கு மேலாக செல்வா க்கு பெற்று விளங்கியவர். பீகார் அரசியலில் பிஜேபி காங்கிரஸ் ஜார்ஜ் பெர்னாண்டஸ் லாலு நிதிஷ்கு மார் என்று அனைவருடன்இணைந்து அரசியல் செய்த ஒரே ஒருவர் ராம்விலாஸ் பஸ்வான் மட்டுமே. பீகார்அரசியலில் லாலு நிதிஷ்குமார்க்கு முன்பே அரசிய லில் நுழைந்து வெற்றி பெற்றவர் ராம் விலாஸ் பஸ்வான் தான்.
தன்னுடைய 23 வயதில் ஒருவர் வேலைக்கு போவதே கஷ்டம் தான். ஆனால் ராம் விலாஸ் பஸ்வான் தன்னுடைய 23 வயதிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக போலீஸ் துறையில் நுழைந்து அதே வயதில் போலீஸ் வேலையை தூக்கி எறிந்து விட்டு எந்த ஒரு அரசியல் பின்னணியும் இன்றி எம்எல்ஏவானது எவ்வளவு பெரிய விசயம்.
தன்னுடைய 23 வயதில் பீகார் சட்டமன்றத்திற்கு அலாலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவராக இருந்த மிஷ்ரி சடாவை தோற்கடித்து ராம்விலா ஸ் பஸ்வான் நுழையும் பொழுது பீகார் மாநிலமே யாருப்பா இந்த பையன் என்று அண்ணாந்து பார்த்தது. அந்த காலத்தில் கம்யூனிச சித்தாந்தத்திற்கும் காங்கிரசுக்கும் இடைப்பட்ட ஒருஅரசியல் தளம் இருந்து வந்தது. இதை சோசலிசம்என்று சொல்லிக்கொண்டு அரசியல் நடத்தி வந்தார்கள்.அதில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ராம் மனோகர் லோகியாவும் ஒருவர் இந்த சோசலிஸ்ட் லிஸ்டை தேடிப்பிடித்து பார்த்தால் அதில் முக்கால்வாசி பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்..
அதனால் அங்கே பிடிக்கவில்லை என்றால் கம்யூனிஸ அரசியலுக்கு செல்லாமல் பாதி காங்கிரஸ் மீதி கம்யூனிசம் என்று கலந்துகட்டி சோசலிசம் என்கிற கொள்கையை பிடித்துக் கொண்டு அரசியல் செய்து வந்தார்கள். இந்த சோசலிச கூட்டத்திற்கு காட்பாதர் யார் என்றால்நம்ம ராம் மனோகர் லோகியாவைத்தான் சொல்லலாம். அந்த காலத்தில் காங்கிரஸ் கம்யூனிசம் பிடிக்காத இளைஞர்கள் தங்களை சோசலிஸ்ட் என்று சொல்லிக் கொள்வார்கள்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம் விலாஸ் பஸ்வான், நிதிஷ்,. லாலு போன்ற பீகார் அரசியல்வாதிகள்எல்லாம் இந்த ரகம் தான். மாநிலத்திற்கு ஒரு சோசலிச கட்சி இருந்தாலும் ராம் மனோகர் லோகியாவின் பிரஜா சோசலிஸ்ட்கட்சிக்கு தான் அந்த காலத்தில் செல்வாக்கு இருந்தது.
அதில் தான் லோகியா ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றபெருந்தலைகள் இருந்தனர்.. இந்த பிரஜா சோசலிஸ்ட் கட்சி உடைந்து 1964 ல் சம்யுக்தா சோசலிச கட்சியாக உருமாறிய பொழுது அதை பீகாரில் வழி நடத்திய மண்டல் கமிசனின் பிதாமகன் பி்.பி.மண்டல் உடன் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர் ராம்விலாஸ் பஸ்வான்.
அப்பொழுது சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியில் ராம்விலாஸ் பஸ்வானின் நெருங்கிய நண்பராக இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தான் எமெர்ஜென்சிக்கு பிறகு இந்திராவைத் தோற்கடிக்க 1977ல் ஜனதா கட்சி உருவான பொழுது பிஜேபியின் அன்றைய பெயரான ஜனசங்கத்துடன் இணைந்து பயணித்தவர்கள் தான் இந்த சோசலிஸ்ட்கள்.
பீகார் அரசியலை உன்னிப்பாக பார்த்து வருபவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இ்ருந்தே நிதிஷை விட லாலு ராம்விலாஸ் பஸ்வானுக்கு தான் செல்வாக்கு அதிகம் என்று அறிந்து கொள்ளலாம்
1977 தேர்தல் பற்றி அனைவருக்கும் தெரியும்ஐனதா கட்சி சார்பில்.போட்டி யிட்ட லாலு சப்ரா லோக்சபாவில் வெற்றி பெற ராம்விலாஸ் பஸ்வான் ஹாஜிபூர் லோக் சபா தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார்.
ஆனால் நிதிஷ் அவர் பிறந்த நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னாட் தொகுதியில் மண்ணைக் கவ்வினார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.1977ல் மட்டுமல்ல. 1980 ல் நடந்த பீகார் சட்ட மன்ற தேர்தலிலும் போட்டியிட்ட நிதிஷால் சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
ஆனால் அதே நேரத்தில் லாலு 1977 ல் பாராளுமன்ற தேர்தல்.1980 ல் சட்ட மன்றதேர்தல் வெற்றி என்று லாலு மாஸ் லீடராக வளர்ந்தார் என்றால் ராம்விலாஸ் பஸ்வான் 1977 1980 என்று ஹாஜீபூர் லோக்சபா தொகுதியில் பட்டைய கிள ப்பினார்..
உலகில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அரசியல்வாதி என்கிற கின்னஸ் ரெக்கார்டை உருவாக்கியவர் ராம்விலாஸ் பஸ்வான் தான்.
1977 ல் ராம்விலாஸ் பஸ்வான் ஹாஜீபூர் லோக்சபா தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு 4,24,545 வாக்குகள் வித்தி யாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி கின்னஸ் ரெக்கார்டை உருவாக்கி னார். ஹாஜீபூர் லோக்சபா தொகுதியில் 10 மு றை போட்டியிட்டு உள்ள ராம்விலாஸ் பஸ்வான் 8 முறை வெற்றி பெற்று இருக்கிறார்.1984 இந்திரா படுகொலையில் எதிர்கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடைந்த பொழுதும் ராம்விலாஸ் பஸ்வான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார்.
அதே மாதிரி 2009 லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி லாலுவுடன் கை கோர்த்து தேர்த லை சந்தித்து தோல்வி அடைந்தார்.
1991 லோக்சபா தேர்தலில் மட்டுமே ராம் விலாஸ் பஸ்வான் ஹாஜீபூர் தொகுதி யை விட்டு விட்டு ரோசரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். ராம்விலாஸ் பஸ்வான் விபி சிங், தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங், மோடி என்று 5 பிரதமர்களின் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்ததன் மூலமாக பல கட்சிகளிலும் சித்தாந்தம் தாண்டி அனைத்து கட்சி தலைவர்களிடமும் ஒரு புரிதலையும் அன்பையும் பெற்று இருந்தார்
சோசலிஸ்ட் கட்சியில் துவங்கிய தன்னு டைய அரசியல் பயணத்தை லோக்தளம் ஜனதா கட்சி ஜனதா தளம் ஐக்கிய ஜனதா தளத்தோடு முடித்துக் கொண்டு 2000 ம் ஆண்டில் லோக்ஜன சக்தி என்கிற தனிக்கட்சியை ஆரம்பித்து புதிய பாதையை உருவாக்கி கொண்டார்.
தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு ராம்விலா ஸ் பஸ்வான் காங்கிரஸ் பிஜேபி கூட்டணியில் மாறி மாறி இருந்து இருந்தாலும் பிஜேபி கூட்டணியில் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியும் மரியாதையும் கிடைத்து இருக்கிறது.
2013 ல் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் பிஜேபி கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறி பிஜே பிக்கு எதிராக பீகாரில், லாலு-பஸ்வான் உடன் இணைந்து ஒரு மிகப்பெரிய கூட்டணியை அமைக்க விரும்பினார்.
மோடியின் அழைப்பை ஏற்று அந்த கூட்ட ணியை ஆரம்ப கட்டத்திலே யே உடைத்து விட்டு பிஜேபி கூட்டணியில் ராம் விலாஸ் பஸ்வான் இணைந்ததால் தான் 2014 லோக் சபா தேர்தலில் பிஜேபிக்கு பீகாரில் மாபெரும் வெற்றி சாத்தியமானது.
20 வருடமாக பிஜேபி கூட்டணியில் இரு ந்த நிதிஷ்குமார் மோடிக்கு எதிராக 2014 ல் உருவாக்க இருந்த மாபெரும் கூட்டணி யை உடைத்ததால் தான் மோடிக்கு ராம்விலாஸ் பஸ்வான் மீது தனிப்பட்ட அன்பு உருவானது.
ராம் விலாஸ் பஸ்வான் மறைந்தாலும் மோடி லோக்ஜன சக்தி மீது வைத்துள்ள அன்பு மாறாது. இதை அடுத்து பீகாரில் அமைய உள்ள புதிய அமைச்சரவையின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
பீகார் அரசியலில் சம தர்மம் சம உரிமை பேசும் சோசலிஸ்ட்டாக அரசியல்பயண த்தை துவக்கி பிறகு ஒடுக்கப்பட்ட தலித் மக்களின்குரலாக மாறி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பேசி கடைசி யில் இவைஅனைத்தையும் உள்ளடக்கியதே இந்து மகா சமுத்திரம் என்பதை உணர்ந்து அதில் கரைந்துவிட்டார் ராம் விலாஸ் பஸ்வான்.
கட்டுரையாளர்: விஜயகுமார் அருணகிரி.