செய்தித் தொலைக்காட்சிகளில் கொரோனா ஸ்கோர் வந்ததும் டாக்டர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார்களே, அதைத் தவற விடாதீர்கள். சில டாக்டர்கள் அரும்பெரும் தகவல்களைத் தருகிறார்கள்.
‘எப்படி டாக்டர் ஹோம் குவாரண்டைன் போதும்ன்னு சிலருக்குத் தீர்மானிக்கறீங்க?’ என்று கேட்டபோது ‘வெளிவிடுகிற காத்துல நைட்ரிக் ஆக்ஸைடு குறைவா இருந்ததுன்னா டிரீட்மெண்ட் அவசியமில்லை’ என்றார் ஒரு டாக்டர்.
அவர் எப்படி என்று விளக்குவதற்கு முன்னால் ஏதோ ஒரு மொன்னை பிரேக்கிங் நியூஸ் வந்ததால் ‘நாம தொடர்ந்து பேசலாம் டாக்டர், இணைப்பில் இருங்க’ என்று அவரை அந்தரத்தில் விட்டுவிட்டார்கள்.
கேட்டுக் கொண்டிருந்த நான் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். காரணம் மனிதர்களின் திடக் கழிவு, திரவக் கழிவு இரண்டையும் சோதிக்கும் முறைகள் உண்டு. வாயுக் கழிவைச் சோதித்து நான் பார்த்ததில்லை. வெளிவிடும் காற்றைச் சோதிப்பது என்பது மிக அண்மைக் காலத்தில் வந்த முன்னேற்றம்.
தொழிற்சாலையில் பர்னர்களில் Combustion Analysis க்காக Exhaust Gas ஐ Analyse செய்திருக்கும் அனுபவம் இருப்பதாலும் ஒவ்வொரு Content க்கும் என்ன அர்த்தம், என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருப்பதாலும் இதில் சுவாரஸ்யம் ஏற்பட்டது.
நாம் வெளிவிடும் காற்றில் கார்பன்டை- ஆக்ஸைட் இருக்கிறது என்று படித்திருக்கிறோம். ஆனால் அது முழுக்க கார்பன்டை-ஆக்ஸைட் மாத்திரம் இல்லை. உள்ளிழுத்த நைட்ரஜன் ஏறக்குறைய அப்படியே வெளியே வருகிறது, உள்ளிழுத்த ஆக்ஸிஜனில் (21%) பாதிக்கு மேல் (15%) திரும்ப வருகிறது அப்புறம் ஒரு 5% கார்பன்-டை-ஆக்ஸைட் இருக்கிறது. இவை தவிர ppm கணக்கில் அதாவது பத்து லட்சத்தில் இவ்வளவு என்கிற கணக்கில் இருக்கும் நைட்ரிக் ஆக்சைடு ஒரு 40 ppm இருக்கிறது.
கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொதுவாகவே நம் நுரையீரல் தொற்றுக்களை எதிர்த்து ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறது. (காற்றில் நம் சிஸ்டம் பழகிக் கொண்ட ஏகப்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன) அப்படி தொற்றுக்களை எதிர்க்கும்போது நைட்ரிக் ஆக்ஸைடு உண்டாகிறது. எப்போதும் இருக்கும் 40 ppm அளவை விட அதிக நைட்ரிக் ஆக்ஸைட் வெளிவிடும் காற்றில் இருந்தால் புதுசாக ஒரு வைரஸ் வந்திருக்கிறது என்று அர்த்தம்.
நல்ல இம்ம்யூனிட்டி உள்ளவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கும் இந்த அதிகரிப்பு; இல்லாதோருக்கு அதிகமாகவும், போகப் போக அதிகரிப்பதாயும் இருக்கும்.
வெளிவிடும் காற்றில் ஆல்கஹாலைச் சோதிக்கும் Breathalyser கள் வெறும் 1500 ரூபாய்க்குக் கிடைக்கின்றன. சீக்கிரமே மூச்சுக் காற்றில் நைட்ரிக் ஆக்சைடு பார்க்கும் கருவிகள் வரலாம்! பல்ஸ் ஆக்ஸி மீட்டர் போல அவை நன்றாக விற்கும்!