கொரோனா தடுப்பூசி ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனேகாவின் முதற்கட்ட ஆய்வுகள் சாதகமான முடிவுகள்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் கட்ட பரிசோதனைகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவுக்கு சாதகமான முடிவுகள் கிட்டியுள்ளன.
முதற்கட்ட தடுப்பூசி பரிசோதனைகளின் முடிவுகள் படி, இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய தடுப்பூசி “பாதுகாப்பானது, பக்கவிளைவற்றது மற்றும் நோயெதிர்ப்புத் திறன் கொண்டது” என்று தெரியவருகிறது.
தடுப்பூசியை உருவாக்கிய சாரா கில்பர்ட், “எங்கள் தடுப்பூசி COVID-19 தொற்றுநோயை நிர்வகிக்க உதவுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்பாக இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட உள்ளன, ஆனால் இந்த ஆரம்ப முடிவுகள் நம்பிக்கையை தந்துள்ளன. இது இன்னும் எவ்வளவு வலிமையானது என்று எங்களுக்குத் தெரியவில்லை SARS-CoV-2 நோய்த்தொற்றிலிருந்து திறம்பட பாதுகாக்க ஒரு நோயெதிர்ப்பு முறையை நாம் பெற்றாகவேண்டும். “
அஸ்ட்ராசெனெகா மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கிய AZD1222 தடுப்பூசி எந்தவொரு தீவிர பக்க விளைவுகளையும் தூண்டவில்லை என்றும் ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு அறிகுறிகளை வெளிப்படுத்தியதாகவும் லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
இந்த ஆராய்ச்சி கொரோனாவுக்கு இணையான நோய்கள் கொண்டோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் ஒற்றை டோஸ் அல்லது இரண்டு-டோஸ்களாக கொடுக்கப்பட்டு, வைரஸின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன் ஆகியவற்றிற்கு என்ன மாதிரியான பரிசோதனை முடிவுகள் கிடைக்கின்றன என்று அறிவதை நோக்கமாக கொண்டுள்ளது..
மூன்றாவது கட்ட சோதனைகள் இப்போது பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடந்து வருகின்றன. அறிக்கையின்படி, வைரஸுக்கு கடுமையான பாதகமான எதிர்வினைகள் எதுவும் ஏற்படவில்லை. பதிவான பெரும்பாலான எதிர்வினைகள் நிகழ்வுகள் லேசானவை அல்லது தீவிரத்தில் மிதமானவை என்று அறியப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய தடுப்பூசியை 100 மில்லியன் டோஸ் வாங்கிக் கொள்ளுவதாக இங்கிலாந்து அரசு முன்னதாகவே அறிவித்துள்ளது.
இங்கிலாந்து மட்டுமின்றி ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளிலும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதில் வல்லுனர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆக்ஸ்போர்ட் செனேகா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர சில மாதங்கள் பிடிக்கலாம் என்று தெரிகிறது. அந்த அளவில் கைவசம் ஒரு தடுப்பூசி உள்ளது என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. விரைவில் மற்ற நாடுகளில் இருந்து பரிசோதனை முடிவுகள் வெளிவரும் என்ற நம்பிக்கையில் உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.