“இது ஆத்திரமூட்டும் நடவடிக்கை” என்று சீனா கூறுகிறது.
செவ்வாயன்று அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள சீனத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா சொல்லியிருப்பது தவறான முடிவு என்று கூறிய சீனா, அந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியது.
இது ஒரு “அரசியல் ஆத்திரமூட்டல்” நடவடிக்கை, மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என்று பெஜிங்கில் சீன அரசின் பிரதிநிதி ஒருவர் கூறினார். .
ஹாங்காங்கில் சீனா பிறப்பித்துள்ள ஒரு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட பல விஷயங்களில் உலகின் இரு பெரிய பொருளாதார வல்லரசுகளுக்கிடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் சமயத்தில் இந்த நடவடிக்கையும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
“தனது தவறான முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு அமெரிக்காவை வலியுறுத்துகிறது. இல்லாவிடில், சீனா நிச்சயமாக சரியான மற்றும் தேவையான பதில் நடவடிக்கையை எடுக்கும்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.
“இது ஒருதலைப்பட்சமாக அமெரிக்கத் தரப்பினரால் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் ஆத்திரமூட்டலாகும், இது சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறுகிறது. மேலும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு தூதரக ஒப்பந்தமும் மீறப்பட்டுள்ளது.” என்று வாங் கூறினார்.
“சீனா-அமெரிக்க உறவுகளை நாசமாக்கும் இதுபோன்ற மூர்க்கத்தனமான மற்றும் நியாயமற்ற நடவடிக்கையை சீனா” கடுமையாக கண்டிக்கிறது “என்று அவர் மேலும் கூறினார்.
ஹூஸ்டனில் உள்ள ஊடகங்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை தூதரக கட்டிடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் ஹூஸ்டன் போலிஸ் படையின் ட்விட்டர் செய்தியின் படி தூதரகத்தில் புகை மண்டலம் காணப்பட்டதாகக் கூறியது. ஆனால் தீயணைப்பு/காவல் துறை அதிகாரிகளுக்கு “கட்டிடத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை” என்று ஊடகங்கள் தெரிவிக்கின்ற்ன.
ஒரு கண்டெயினர் நிறைய ஆவணங்கள் சீனத் தூதரக வளாகத்துக்குள் எரிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அங்கே வந்த தீயணைப்புப் படையினருக்கு தூதரக வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹாங்காங் குடிமக்கள் தொடர்பாக சீனா பிறப்பித்துள்ள சர்ச்சைக்குரிய சட்டம் குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தூதரக வளாகத்துக்குள் ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படும் நிகழ்வு காரணமாக சீற்றமடைந்த அமெரிக்கா, சீன தூதரகத்தை மூடச் சொல்லி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா சீனாவுக்கிடையேயான பனிப் போர் முற்றி இப்போது நேரடி நடவடிக்கைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதை இந்த தொடர் விளைவுகள் சுட்டுக் காட்டுகின்றன.
சப்பை மூக்கன் புலம்பட்டும்.