
மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் உள்ள நான்கு முக்கியமான விஷயங்கள்.
ரெப்போ விகிதம் (Repo Rate)
வங்கிகளுக்கு RBI கொடுக்கும் குறுகியகால கடன் (Repo Rate) 4.4 சதவிகிதத்தில் இருந்து 40 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக ஆக்கப்பட்டுளது.
இதன் மூலம் வங்கிகள் RBIயிடம் பெறும் குறுகிய கால கடனுக்கு வட்டிகள் குறைக்கப்படும் . அதே நேரம் வங்கிகள் கொடுத்த வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றிக்கும் வங்கிகள் வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒருவர் ஒரு வங்கியில் வீட்டு கடனாக 25 லட்சம் ரூபாய்கள் பெற்றுள்ளார் என்று கொள்வோம். அவர் 20 வருட தவணையில் மாதம் 12,547 செலுத்தி வருபவர் இனி மாதம் 12,176 மட்டும் செலுத்தினால் போதும் இதனால் அவர் ஒரு வருடத்தில் சேமிக்கும் தொகையானது 4,452 ரூபாய்கள், மொத்த தவணை காலத்திற்கு 89,404 அவரால் சேமிக்க முடியும்.
ரிவர்ஸ் ரெப்போ விகிதம் (Reverse Repo)
அது போலவே ரிவர்ஸ் ரெப்போ (Reverse Repo) அதாவது வங்கிகள் தங்களின் பணத்தை குறுகிய காலத்திற்கு RBI டெபாசிட் செய்துவைத்திருக்கும் பணத்திற்கு வட்டியும் குறைந்துள்ளது. இது முன்பு 3.75 இருந்தது 3.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
40 புள்ளிகள் குறைக்கப்பட்டதால் இனி வங்கிகள் RBIயில் செய்யும் குறுகிய முதலீட்டுக்கு குறைவான வட்டியே பெறும், வங்கியானது தனது வாடிக்கையாளர் மூலம் திரட்டப்பட்ட வைப்பு தொகைக்கு (Term Deposits) உரித்தான வட்டியை கொடுத்தே ஆகவேண்டும். ஆகையால் இனி வங்கிகள் RBIயில் டெபாசிட் செய்யாமல் கடன்களாக கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அனைத்து வங்கிகளும் மத்திய ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்துள்ள தொகை தோராயமாக ரூபாய் 7 லட்சம் கோடிகள். இனி அந்த குறுகிய கால முதலீடு பெறப்பட்டு கடன்களாக கொடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதன் மூலம் பணபுழக்கம் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்பலாம்
அந்நிய செலாவணி கையிருப்பு
அன்னிய செலவானி கையிருப்பு 487 பில்லியன் டாலர்களாக உள்ளது என தெரிவித்துள்ளார். இதனை ஒரு நல்ல விஷயமாக பார்க்கலாம். கடந்த இரண்டு மாதமாக நம் பார்த்ததில் எரிபொருளுக்கான தேவை குறைந்ததாலும் நாம் கச்சா எண்ணெய் வாங்காததாலும் அந்நிய செலாவணி கையிருப்பு கூடி உள்ளது .
மேலும் பங்கு சந்தையில் விற்று வெளியேறும் FII என்கிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்ற பங்கு தொகையை அவர்கள் அவர்களின் நாட்டுக்கு எடுத்து செல்லாமல் இருப்பதும் ஒரு நல்ல அறிகுறி. நீண்ட கால அடிப்படையில் அவர்கள் இந்திய நாட்டின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்பொழுது ரூபாய் 75.75 ஆக இருப்பதால் அவர்கள் தங்களது நாட்டுக்கு குறைவான தொகையையே எடுத்து செல்ல முடியும். ஆகையால் அவர்கள் பொறுத்திருந்து மீண்டும் பங்கு சந்தையில் முதலீடு செய்யவே வாய்ப்பு அதிகம்.
வங்கி கடன் தவணைகளை செலுத்த அவகாசம் நீட்டிப்பு
வங்கி கடன்களை செலுத்த மேலும் மூன்று மாதங்கள் கூடுதல் கால அவகாசம் கொடுக்கபட்டுளது. முன்பு மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை தவணைகள் கட்ட அவகாசம் கொடுக்க பட்டிருந்த நிலையில் மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்திருப்பது கடன் செலுத்துவோருக்கு பால் வார்த்தது போல் உள்ளது. மேலும் இவ்வாறு நீட்டிக்கப்பட்ட கடன் தவணைகளை ஒட்டுமொத்தமாக குறுகிய கால கடனாக மாற்றிக் கொள்ளும் வசதியையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தொய்வு நிலையிலருக்கும் நமது பொருளாதாரத்தை மீட்டெடுத்து பாரதத்தை தன்னிறைவு பெற்ற தேசமாக மாற்றிட விழையும் பிரதமர் மோதி அவர்களின் சீரிய முயற்சிகளுக்கு இன்றைய அறிவிப்புகள் துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை.
வெறும் அறிவிப்பு மட்டுமே வருகிறது. இதுவரை வங்கிகள் எந்த ஆனைகளும் பெறவில்லை .
நல்ல கட்டுரைத் தொகுப்பு.