பாரதியார், தன் மாமனார் ஊரான கடையத்தில் ஒரு கூத்து நிகழ்ச்சி பார்க்கச் சென்றிருக்கிறார். அதில் அருள் வந்ததாகப் பாடும் ஒரு கலைஞன் கீழ்க்கண்டவாறு பாடியிருக்கிறார்.
‘‘பாக்கு வைச்சான்,
பழமும் வைச்சான்,
வெற்றிலை வைச்சான்
புகையிலை வைச்சான்
ஒன்று வைக்க மறந்திட்டான்,
ஒன்று வைக்க மறந்திட்டான்,
அதுதான்,
சுண்ணாம்பில்லை! சுண்ணாம்பில்லை!’’
என்று பாடினாராம்.
அந்தப் பாட்டைக் கேட்டவுடனே பாரதியார் கொல்லென்று சிரித்து, எழுந்து நின்று குதித்தாராம். அவர் உடன் வந்த நண்பர்கள், ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?’’ ஏன் குதிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்களாம். ‘‘எனக்கு ஒன்று நினைவு வந்தது. அதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்! குதிக்கிறேன்!’’ என்று சொல்லிவிட்டு கீழ்க்கண்டவாறு பாடினாராம் ‘‘தமிழ் மக்களுக்கு இயற்கைக் கடவுள்
நிலமும் வச்சான்,
பலமும் வச்சான்
நிகரில்லாத செல்வமும் வச்சான்,
ஒன்று வைக்க மறந்திட்டான்,
ஒன்று வைக்க மறந்திட்டான்
அதுதான்,
புத்தியில்லை! புத்தியில்லை!’’
பாரதியாரின் இந்தப் பாட்டைக் கேட்டு எல்லோரும் சிரிப்பும் வியப்பும் கொண்டார்களாம்.
நமது நாட்டு மக்கள் அறிவற்றவர்களாகத் திகழ்கிறார்களே என்பதை எண்ணிப் பாரதி மனவேதனையுற்றதற்கு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியே சான்றாக அமைந்துள்ளது. மனித வாழ்வில் ஆக்கவினைகள் அனைத்திற்கும் அறிவே அடிப்படையாக விளங்குகின்றனது. (தகவல் உதவி புது திண்ணை.காம்.)
பாரதத்தில் ஊழலில்லாத, நிர்வாகம் தெரிந்த நல்லதோர் அரசு அமைந்திருக்கும் இந்தச் சூழலில், தேசப்பிரிவினைவாதிகளின் சதியால் பரவும் செய்திகளை நம்பும் மக்களின் இன்றைய நிலையும் அவ்வாறே இருக்கிறது.
பாரதி போல் ஆதங்கப்படும் தேசபக்தர்கள், இவர்களின் அறியாமை எப்பொழுது ஒழியுமோ என்று ஏங்குகிறார்கள். யாரோவொரு தனி மனிதரால் சமுதாயத்தைத் தனியே மாற்றி விட முடியாது. ஓர் அலை எழ வேண்டும். அஃது அறிவலையாக, தேச வளர்ச்சிக்கான விழிப்புணர்வு அலையாக இருக்க வேண்டும் என்று நம் எல்லாருடைய விருப்பம்.
அதற்கென்ன தீர்வு? அதையும் பாரதியே சொல்கிறார்.
“உன்னை எதிர்த்துச் சில விவகாரமான சிந்தனைகள் அறிவிற்குள் வந்து நுழைந்து கொண்டு, ‘வெளியே பிடித்துத் தள்ளினாலும் போகமாட்டோம்’ என்று பிடிவாதஞ் செய்யும். அங்ஙனம் சிறுமைக்கும் உரிய “எண்ணங்கள் உன் அறிவில் புகுந்து கொண்டு தொல்லைப் படுத்துமானால், நீ அவற்றை வெளியே தள்ளுவதில் நேராக வேலை செய்ய வேண்டாம். நீ அதைத் தள்ளத் தள்ள, அது அங்கே தான் இருக்கும். அதற்கு யுக்தி வேறு. நீ அந்த எண்ணத்திற்கு நேர்மாறான வேறொரு நல்ல சிந்தனையில் அறிவு செலுத்துக. அப்போது அந்த நல்ல சிந்தனை வந்து அறிவில் இருந்து கொள்ளும். உன்னைத் தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான் தானாகவே ஓடிப்போய் விடும்”
மக்கள் இன்று நல்லவற்றைத் தேடிப் போய் படிக்கும் பழக்கத்தினை இழந்திருக்கிறார்கள். காரணம் தீயவன அவர்களைத் தேடி அவர்கள் விரல் நுனிக்கே சென்று சேர்கிறது. அதனைப் போக்க நல்ல சிந்தனைகளை நாமும் அவர்கள் விரல் நுனிக்கே அனுப்பும் பணியினைச் செய்ய வேண்டும். தேசமும் சமுதாயமும் முன்னேற அனைவரும் ஒன்று கூட வேண்டும். இந்தப் பணி திருவாரூர் ஆழித்தேர் இழுப்பது போன்றது, இது ஊர்கூடி இழுத்தாலன்றி தேர் நகராது, நிலை வந்து சேராது. வடம் இழுக்க நற்சிந்தனையுள்ள அனைவரும் உவப்புடன் வரவேண்டும். வருபவர்களை பராசக்தி முழுமையாக ஆசிர்வதித்து அவர்களுக்கு வேண்டிய சிந்தனைகளைத் தாராளாமாக அருள்வாள்.
வாழ்க பாரதம்.
சென்றிடுவோம் எட்டுத்திக்கும்
கலைசெல்வம் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்
Excellent .Anandan anna keep rocking – Rajagopal from Bangalore.
அருமை. அனைவருக்குமான கூட்டுப் பொறுப்பு மற்றும் கூட்டுப் பங்கினை அழகாக வலியுறுத்தியுள்ளீர்கள்.
வாருங்கள்..
வடம் பிடிப்போம்..
வலம் வருவோன்…
நிலை சேர்ப்போம்..
நிம்மதியாய் வாழ்வோம்..
மிக நல்ல தொடக்கம்
நல்லவையே தொடரட்டும்
நல்லனவை சென்று சேர வேண்டும். Succinctly written ji
பராசக்தி அருளால் பாரதம் மீண்டும் உலகின் குருவாக வீறு நடை போடும் தங்கள் போன்ற எண்ணற்ற சுயநலமற்ற தேசிய காவி வாதிகளால் ராம் ராம்
கதம்பமாய் மணம் பரப்ப பாரதீயர்களை அழைத்திருக்கிறீர். கரம் கோர்த்து தீமையை விரட்டுவோம். அருமையான எழுத்து. நல்வாழ்த்துகள் சகோ !
நல்ல ஆரம்பம். பாரதியின் presence of mind வியக்க வைக்கிறது. முழு நேரமும் தேச சிந்தனை தான். கடவுளே இப்போவாவது எங்களுக்கு புத்தியை கொடு!
தேரிழுக்க நானும் வருகிறேன்.