பாரதப்பிரதமரால் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்க திட்டம் ரூபாய் 20 லட்சம் கோடி அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதம் இருக்கும் என கூறப்பட்டது இருப்பினும் ஊக்கத்தொகையில் மத்திய அரசு தன் கையிலிருந்து செய்யும் செலவினங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கான அறிவிப்புகள் ஏதும் இல்லை 2020 21 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் தொகை ரூபாய் 30.4 லட்சம் கோடியாகும் கோவிட்- 19 தொற்றுநோய் பின்னணியில் மத்திய அரசு தனது கடன் தொகையை திருத்தி உள்ளது அதாவது ரூபாய் 7.8 லட்சம் கோடியில் இருந்து 12 லட்சம் கோடியாக உயர்த்தி உள்ளது இதன் பொருள் மொத்த வெளிச்சந்தை கடன் ரூபாய் 4.2 லட்சம் கோடி அதிகரித்திடும் என்பதே ஆகும் பொது முடக்கத்திலன் மோசமான தாக்கத்தினால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி மற்றும் வரி அல்லாத வருவாய்களில் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது அதனால் மத்திய அரசின் பட்ஜெட் தொகையான ரூபாய் 30.4 லட்சம் கோடி செலவினத்தை சரி கட்டவே மேற்படி வெளிச்சந்தை கடன் 4.2 லட்சம் கோடி தேவைப்படும் எனவே மத்திய அரசு அதன் செலவினங்களை கணிசமாக அதிகரிக்கும் எண்ணத்தில் இல்லை என்பதே மத்திய நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் இலிருந்து புலனாகிறது அவரது அறிவிப்பில் தற்போது பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனை கொண்டிராத நேரத்தில் தொழில் நிறுவனங்களை மேலும் கடன் வாங்குவதை ஊக்குவிக்ககவும் அதற்கான வசதியை செய்யவும் அரசு முயல்கின்றது.இதனால் கடன் கொடுக்கும் வங்கிகளுக்குத்தான் 7.6 % இலாபம் கிடைக்கும். தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் அல்லது விவசாயிகளுக்கு அவர்கள் அனுபவித்த வருமான இழப்பிற்கு ஈடுசெய்யும் எந்த நடவடிக்கையும் திட்டத்தில் இல்லை என்பதே பரிதாபம். இதனால் பொருளாதாரத்தில் மிகவும் பாதகம் மட்டுமே ஏற்படும் . வருமானம் இல்லாத நிலையில் நிறுவனங்களின் கடனை அதிகரிப்பது ஒரு பேரழிவு க்கான செயல்முறையாகும். இதனால் மத்திய மாநில அரசுகளின் வருமான இழப்பு ஏற்படுவதோடு மத்திய அரசு அறிவித்த 10 சதவீத ஊக்கத்தொகை க்கு பதிலாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத இழப்பு மட்டுமே ஏற்படும் என கருத இடமிருக்கிறது. நாட்டிலுள்ள 25 கோடி குடும்பங்களில் ஏழ்மையான நிலையில் உள்ள சுமார் 10 – 15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் தலா ரூபாய் 6000யினை அளித்தால்தான் பொது மக்களிடையே பணப்புழக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படும். இதற்கு மத்திய அரசுக்கு ரூபாய் 2.5 லட்சம் கோடி வரை மட்டுமே செலவாகும். இதை விடுத்து வங்கிகள் மூலம் கடன் பெற்று கொள்ளுங்கள் என்று தொழில் நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்குவது வெறும் கையில் முழம் போடுவது போலத்தானே. |
