இந்திய அரசு அறிவித்துள்ள கோவிட் நிவாரண தொகுப்பிற்கு வாழ்த்துக்கள். அவர்களால் எவ்வளவு பணம் தேவையோ அவ்வளவையும் புதிதாக அச்சடித்துக் கொள்ள இயலும். ஆனால் எனது சிறிய பங்காக இந்திய அரசு வங்கிகளிடம் நான் பெற்றுள்ள கடன்களை 100 சதவிகிதம் முழுவதும் திரும்பி செலுத்துவதையும் இந்திய அரசு ஏற்க வேண்டும்” – திருவாய் மலர்ந்து அருளிச் செய்திருப்பது பொருளாதார மற்றும் இதர குற்றங்களை வரிசைப்படி செய்து விட்டு இந்தியாவை விட்டு ஓடி லண்டனில் பதுங்கியிருக்கும் விஜய் மல்லையா.
இதனை படிக்கும் அனைவர் மனதிலும் இயல்பாக என்ன தோன்றும்? சரி, இந்த ஆசாமி தான் கடனை திரும்பி செலுத்துவதாக சொல்கிறாரே, வாங்கிக் கொண்டு விட்டு விட வேண்டியது தானே! மேலோட்டமாக பார்த்தால் அதுவும் சரிதான். ஆனால் உண்மை அதுவா? ஏனிந்த திடீர் மனமாற்றம்? இப்படி ஒரு எண்ணம் இருப்பவர் ஏன் நாட்டை விட்டு ஓட வேண்டும்? விடை தேடுவோம்.
1. பல வங்கிகளிலும் தான் வாங்கிய 9000 கோடிகளுக்கும் மேலாக கடன் தொகை நிலுவையில் இருக்கையில் விஜய் மல்லையா தேசத்தை விட்டு ஓடினார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இதில் வழக்குகளை தொடுத்துள்ளன. இந்த வழக்குகளில் மல்லையா மீதான பிடி இறுகியுள்ளது. மல்லையாவின் 8000 கோடிகள் மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் பங்குகள், முதலீடுகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவற்றின் சந்தை மதிப்பு இன்னும் பல மடங்கு இருக்கும்.
2. லண்டனில் பதுங்கியுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி இந்திய அரசு நிறுவனங்கள் போட்டுள்ள வழக்குகளில் மல்லையாவிற்கு எதிரான தீர்ப்புகளே வந்துள்ளன. முதலில் மாவட்ட அளவிலான நீதிமன்றம் மல்லையா இந்தியாவில் பண மோசடி செய்யும் நோக்கத்துடனே சொத்து மதிப்புகளை போலியாக உயர்த்தி காட்டி கடன் வாங்கியதற்கு வலுவான பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதாக கூறி இவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் செய்த முறையீடுமே தோல்வியடைந்தது. சீன வுஹான் வைரஸ் என்று அழைக்கப்படும் கோவிட் 19 மட்டும் இல்லையென்றால் மல்லையா இந்நேரம் இந்திய சிறைச்சாலைகளில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்.
3. மல்லையா திருப்பி செலுத்துவதாக கூறுவதுமே கூட “இந்திய பொதுத்துறை வங்கிகளிடம்” வாங்கியுள்ள கடன்களை மட்டுமே. தனியார் வங்கிகளிடம் வாங்கிய கடன்களைப் பற்றி மூச்சு விடவில்லை. ஒருவேளை இந்திய அரசு மல்லையாவின் இந்த அறிவிப்பை ஏற்குமானால் அது மிகவும் எதிர்மறையான சங்கேதங்களை அனைத்து முதலீட்டாளர்களிடமும் தோற்றுவிக்கும். சங்கடம் வரும் நேரங்களில் இந்திய அரசு தனது பொதுத்துறை வங்கிகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும், நம்மை தத்தளிக்க விட்டு விடும் என்ற எண்ணம் உறுதி பெற்று விடும். இது மிகவும் ஆபத்தானது.
கோவிட் 19 காரணமாக நிலவும் அசாதாரண சூழலை தனக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார் இந்த கைதேர்ந்த செப்படி வித்தைக்காரர். ஆனாலும் பாவம் இவர், ஒன்றை மறந்து விட்டார். தனது நாட்காட்டியை இன்னும் இவர் 2014 ம் வருடம் மே மாதம் 15ம் தேதிக்கு பிறகு மாற்றவே இல்லை போலும்!
அதென்ன புரட்டர், புரோட்டா மாஸ்டர் மாதிரி? புரட்டன்னு சொல்லுங்கள்.
2019 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும். அதுவரை கோர்ட்டில் வழக்கை இழுக்கடித்து இறுதியில்தப்பித்துக்கொள்ளலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தான் இந்த சாகச புரட்டன்… இப்ப அம்புட்டுக்கிட்டான் இந்த தும்பட்டிக்கா பயல்.
நீரவ் மோடியும் விரைவில் நாடு கடத்தப்படுவான்…