உங்கள் நிதித்தரத்தை மேம்படுத்துவது எப்படி?
CIBIL- சிபில் எனும் உங்கள் கடன் தகவல் மைய அறிக்கையில் உள்ள விபரங்கள் மூலம் என்ன தெரிந்த கொள்ளலாம். சாதாரணமாக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் மதிப்பு மூன்று வகைப்படும்.
- -1 (மைனஸ் ஒன்று) – இதுவரை கடன்கள் அல்லது விபரங்கள் எதுவும் இல்லை. கடன் சந்தைக்கு புதிய நபர் என்று கொள்ளலாம்.
- +1 – கடந்த ஆறு மாதங்களில் வங்கிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவராகவோ, கடன் விபரங்கள் இல்லாதவராகவோ இருக்கலாம்.
- 300-900 – எண் கூடும் போது மதிப்பு அதிகரிக்கும் என்று கொள்ளலாம்.
- 700~750 நல்ல மதிப்பெண்.
சிபில் ஆய்வறிக்கையை ஆண்டுக்கொருமுறை www.cibil.com இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சரி, நாம் எப்படி அந்த அறிக்கையை பயன்படுத்தி பண நலத்தை எப்படிப் புரிந்து செய்வது ? பார்க்கலாம்.
உங்கள் மதிப்பெண் அருகில் கொடுத்திருக்கும் முகவுரை உங்கள் கடன் வரலாறு, திரும்பச் செலுத்த எடுத்துக் கொள்ளும் காலம், முக்கிய குறிப்புகளை உணர்த்துபவை.
- எத்தனை கடன்களை வாங்கியுள்ளோம்,
- எத்தனை கடன்(கள்)பெற விண்ணப்பித்துள்ளோம், (Enquiry)
- அதில் எத்தனை ஒழுங்காக செலுத்தப்பட்டுள்ளது ( Accounts Paid),
- எத்தனை இன்னும் நடப்பிலுள்ளது (Active)
- எத்தனை கணக்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது (Closed)
- ஏதேனும் கடன் தள்ளுபடி(Waive off) இருக்கிறதா?
- அதிக காலம் எடுத்து திரும்பச் செலுத்தாத தொகை எவ்வளவு ( Overdue) என்றும் அறியலாம்.
இதில் Days Past Due (DPD) மிக முக்கியமான அம்சம்.
- 000 – சரியான தவணைத் தேதியில் கட்டபட்டுள்ளது.
- 029 – 29 நாட்களைக் கடந்து தவணை செலுத்தப்பட்டுள்ளது.
- XXX – தவணை விபரங்கள் இல்லை
- STD – ஸ்டாண்டர்ட்- சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் செலுத்தப்படும் தவணை
- SUB – ஸப் ஸ்டண்டர்ட்- தவணை கட்டும் முறை ஒப்பந்தப்படி நடைபெறவில்லை
- SMA – Special Mention Account – காலம் தாழ்த்தி, முறையாக செலுத்தப்படாத தவணையை குறிப்பிடும் கணக்கு.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது:
மாதாமாதம் ஒரு தொகையைத் திரும்பச் செலுத்தினாலும், பெற்ற கடனுக்கு கட்ட வேண்டிய குறிப்பிட்ட கடனுக்கான அசல் மற்றும் வட்டியை குறைவாக செலுத்தினாலும் இம்மதிப்பெண் குறையும்.
இரண்டு, மூன்று நிறுவனங்களில் கடன் குறித்து கேட்டறிந்தாலும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் (வாடிக்கையாளர் அறிந்தோ, அறியாமலோ இணையம் மூலம் வேறு தகவல் தேடும் போது எங்கோ ஓகே என்று கொடுத்தாலும்) ஒரு முறை மதிப்பெண் குறையும்.
தேவையற்ற கடன் விண்ணப்பங்கள், முன்கூட்டியே திட்டமிடுதல் இல்லாமல் தவணைத் தொகையை தாமதித்து செலுத்துதல், செலுத்தாமல் இருத்தல், அதிக எண்ணிக்கையில் கடன்கள் வாங்குதல் இவையனைத்தும் நம் மதிப்பையும், மதிப்பெண்ணையும் குறைக்கும்…. வளத்தைக் கூட்டுவோம்…
நல்ல தகவல் நிறைந்த கட்டுரை. தகவல்களுக்கு நன்றி திரு சக்கரவர்த்தி. ஆனால், எழுத்துப் பிழையோ வாக்கியக் கோவைத் தடுமாற்றமோ ஆங்காங்கே இருப்பதாகத் தெரிகிறது.
இனிமேல் வராமல் கவனிக்கிறேன் அண்ணா