• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home சுதேசி

பாரதிய கல்வி (பகுதி-1)

யமுனா ஹர்ஷவர்தனா by யமுனா ஹர்ஷவர்தனா
December 8, 2020
in சுதேசி
10
பாரதிய கல்வி (பகுதி-1)

உண்மையான கல்வி எப்பொழுது கிடைக்கும்?

0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

கல்வியைப் பற்றி பொதுவாக காதில் விழும் “உண்மைகள்”.

இன்றைய சூழலில் பெற்றோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கடினங்களில் ஒன்று தங்களது குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது. பாலவாடி முதல் பள்ளி வரை, பின்னர் கல்லூரி என இது நீண்டு கொண்டே செல்லும். தங்களது குழந்தைகளுக்கு வேலை கிடைக்கும் போதுதான் கல்வி கற்பிக்கும் கடமை  பெற்றவர்களுக்கு முடிவடைகிறது. ஆக, குழந்தைகளை ஈன்றெடுத்து அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை பெற்றவர்கள் காத்திருக்க வேண்டும், பிறகு அந்த குழந்தைகளும் அதே செயல்களை தங்களது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும். வேலைகள் மாறக்கூடும், ஆனால் வேலை பெறுவதே இறுதி நோக்கம்.

எனவே, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பயன் தங்களது மாணவர்களை ஒரு தகுதியான வேலைக்கு தயார்படுத்துவதேயாகும். இது தற்போது நம்மிடம் உள்ள கல்வி முறையின் உண்மை, இது பாரதத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதேதான் உள்ளது. இது ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய கல்வி முறை. தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்ற பிரிட்டிஷ் நாட்டவர்1835 ஆம் ஆண்டில் இந்த முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தார்.

அதற்கு முன்பு என்ன இருந்தது? பாரதத்தில் ஆங்கிலேயர்கள் பள்ளிகளை நிறுவும் வரை “உயர் சாதியினருக்கு” மட்டுமே கல்விக்கு அணுகல் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இங்கு வரும் வரை பாமர மக்களுக்கு கல்வி கற்பிக்கும் (mass education) முறை நம்மிடம் நிலவியதில்லை என்றும் கூறப்படுகிறது. நம்மிடம் போதுமான அறிவியல் இல்லை என்றும் பாரம்பரிய அறிவு என்பது ஆய்வக ஆதரவின் சான்று இல்லாதது என்றும் நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம், இதை கேட்டு நமக்கு நம்மை, நம் சமுதாயத்தை, நம் சரித்திரத்தை எண்ணி அவமானப்படும் வண்ணம் உள்ளது. இவை உண்மைகள் என்பதை அறிய ஏதாவது வழி இருக்கிறதா? சரித்திர பதிவுகள் என்ன சொல்கின்றன?

பாரதிய வரலாறு சம்மந்தமாக நாம் காணும் மிகவும் பிரபலமான புத்தகங்கள் மார்க்சிய வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டவை. அனைத்து பண்டைய மற்றும் பாரம்பரியமான கலாச்சாரங்களை இழிவுபடுத்துவதே மார்க்ஸிஸ்டுகளின் ஒரே குறிக்கோள் என்ற கருத்து பரவலாக உள்ளது. சமுதாயத்தை பலவீனமாக்குவதும் ஸ்திரமின்மையாக்குவதும் மட்டுமே இவர்களின் எண்ணம் என்றுமே பலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.  தங்களின் உண்மையான வரலாற்றிலிருந்து மக்களை விலக்கி தங்களது புனைவுகளை நம்ப வைக்கும் குறிக்கோளை அடைய இத்தகைய திரிபு வரலாறுகள் மிகவும் சாதகமாக அமைகின்றன. மக்கள் தங்கள் மூதாதையரின் சாதனைகளில் இருந்தும் மகத்துவதிலிருந்தும் விலக விலக, மார்க்சிஸியர்கள் அவர்களின் எண்ணங்களை கையாள்வது எளிமையாகிறது. அவர்களின் எண்ணங்களை கையாளுவது எளிமை ஆக ஆக மார்க்சிஸ்டுகளின் சமுதாய மற்றும் அரசியல் சக்தி அதிகரிக்கின்றது. சுருக்கமாக, இதுவே நம் வரலாற்றுப் புத்தகங்கள் நமக்கு மகிழ்ச்சியையும் பெருமையும் அளிக்காமல் இருப்பதன் பின்னணி காரணம்.

நம் தலைப்புக்கு மீண்டும் செல்வோம். மெக்காலே முறையை நிறுவுவதற்கு முன்பு நம்மிடம் என்ன மாதிரியான கல்வி முறை இருந்தது, இதற்கு என்னென்ன சான்றுகள் உள்ளன? அதிர்ஷ்டவசமாக, நம்மிடம் ஏராளமான சான்றுகள் உள்ளன, இன்னும் சிறப்பாக, சான்றுகள் பிரிட்டிஷாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, எவரும் நம்மை திரும்பி பார்த்து நாம் ஆதாரம் இல்லாமல் பேசுகிறோம் என்று சொல்ல எந்த வழியும் இல்லை. தரம்பல் எனும் வரலாற்றாசிரியர் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் நூலகத்தில் பணிபுரிந்து அங்கு அதிக நேரம் செலவிட்டு பிரிட்டிஷ் ஆட்சியின் போது செய்யப்பட்ட பதிவுகளை சேகரித்தார். அவருக்கு ஆய்வு செய்ய அனுமதி கிடைத்த அந்நூலகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது செய்யப்பட்ட பெரும்பாலான அசல் பதிவுகள் இன்னும் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பதிவுகள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1700-கள்) தேதியிட்டவை – இது பாரதிய சமூக அமைப்புகளை ஆங்கிலேயர்கள் புரிந்துகொள்ள முயன்ற காலம். மெக்காலேயின் காலத்திற்கு முன்னர் நமது கல்வி முறை பற்றி இந்த பதிவுகள் என்ன கூறுகின்றன? திரு தரம்பாலின் நூல் தொகுப்புகளில் நாம் என்ன காண்கிறோம்?

(அடுத்த பகுதியில் தொடரும்)

Share this:

  • WhatsApp
  • Tweet
  • Share on Tumblr
  • Telegram
Tags: educationswadeshiகல்வி
Previous Post

வையகத் தலைமை தாங்கப் போகும் பாரதம்

Next Post

பண நலம்

யமுனா ஹர்ஷவர்தனா

யமுனா ஹர்ஷவர்தனா

Next Post
பண நலம்

பண நலம்

Comments 10

  1. P JAYARAMAN says:
    3 years ago

    பயனுள்ள பதிவு!

    Loading...
    Reply
  2. P JAYARAMAN says:
    3 years ago

    இத்தொடரின் அடுத்தடுத்த பகுதிகளை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்!

    Loading...
    Reply
  3. Manikandan PK says:
    3 years ago

    மிக சிறப்பு….வாழ்த்துக்கள்.

    Loading...
    Reply
  4. Ramasamy kumaresan says:
    3 years ago

    எனக்கு வரலாறு தெரியாது..ஆனால் தமிழின் நடை கருத்து சிறப்பான செய்தியாக இருக்கிறது..வாழ்த்துகள்

    Loading...
    Reply
  5. R.Selvi Krishnan says:
    3 years ago

    ஆங்கிலேய ஆட்சிக்கு முன்பிருந்த பாரதிய சமூக அமைப்புகளையும், கல்வி நிலையையும் புரிந்து கொள்ள உதவும் பதிவு…. தொடர்ச்சியைக் கேட்க விழைகிறோம்….

    Loading...
    Reply
  6. வேணுகோபாலன்.ஆர் says:
    3 years ago

    அனேகமாக, இது கட்டுரையின் முன்னுரை என்று நினைக்கிறேன்.

    Loading...
    Reply
  7. senthil says:
    3 years ago

    அருமை 👌 வாழ்த்துகள் . தொடர்ந்து எழுதுங்கள் யமுனா 👍

    Loading...
    Reply
  8. Hari Sudha Lakshmanan says:
    3 years ago

    அருமையான பதிவு. தொடரும் பதிவிற்காக காத்திருப்பேன். என் நீண்ட நாள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

    Loading...
    Reply
  9. Pingback: பாரத நாகரீகத்தின் வயது தான் என்ன? (பகுதி-1) – சஞ்சிகை108
  10. Pingback: Bharatiya Education (Part – 1) – Harmony in Education

Leave a Reply Cancel reply

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.8k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
பாப்பம்மாளிடம் மோடி  ஆசிர்வாதம்

பாப்பம்மாளிடம் மோடி ஆசிர்வாதம்

March 19, 2023
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

March 19, 2023
ஜவுளித் துறையில்  20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

ஜவுளித் துறையில் 20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

March 18, 2023
புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

March 18, 2023

Recent News

பாப்பம்மாளிடம் மோடி  ஆசிர்வாதம்

பாப்பம்மாளிடம் மோடி ஆசிர்வாதம்

March 19, 2023
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

March 19, 2023
ஜவுளித் துறையில்  20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

ஜவுளித் துறையில் 20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

March 18, 2023
புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

March 18, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108

%d bloggers like this: