மத்திய அரசுக்கு எதிராகவும் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்திலும் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் Tஹெ Wஇரெ என்ற பிரபலமான இணைய பத்திரிகைத் தளத்தின் நிறுவன ஆசிரியர் திரு. எம்.கே. வேணு ஒரு “பொன்னான” கருத்தினை உதிர்த்துள்ளார். இந்தியாவில் வீடுகளும் கோவில்களும் தங்களிடம் சேமிப்பாக உள்ள சுமார் 105 லட்சம் கோடிகள் ரூபாய் பெறுமானமுள்ள 25000 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கிக்கு கடனாக வழங்க வேண்டும், ரிசர்வ் வங்கி அதன் அடிப்படையில் புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவார்கள். மேலும் அந்த தங்கத்தின் ஒரு பகுதியை அரசு விற்று பணமாக மாற்றிக் கொள்ளலாம் என புரட்சிகரமான முற்போக்கு கருத்துக்களை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலோட்டமாக பார்த்தால் புத்திசாலித்தனமான யோசனைகளைப் போலத் தோன்றும் இந்த கருத்துகளின் அடிப்படையே சற்றும் உண்மையில்லாதது, மிகவும் தவறானது. சற்றே சுருக்கமாக இதனை ஆராயலாம்.
ஒவ்வொரு ரூபாய் தாளிலும் ” ” I promise to pay the bearer ” என்று அச்சடிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். அடிப்படையில் கடன் வாங்கியதற்கு அத்தாட்சியாக நாம் வழங்கும் “ப்ரோ நோட்” எனப்படும் ப்ராமிசரி நோட் போலவே தான் ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுத் தாள்களும். மிக எளிமையாக சொன்னால் ஒவ்வொரு ரூபாய்த் தாளும் ரிசர்வ் வங்கியின் கடன்.

இந்த கடனை திருப்பி செலுத்தும் தகுதியை மதிப்பிடும் அளவீடாக ஒரு காலத்தில் தங்கத்தின் இருப்பு (Gold Reserve) ஒரு காலத்தில் அடிப்படையாக கொள்ளப்பட்டது. Gold Standard என்று பெயரில் அழைக்கப்படும் அது இப்போது வழக்கொழிந்து போன ஆதிகால விஷயம். அதற்கு மாறாக MRS எனப்படும் Minimum Reserve System என்பதை மட்டுமே ரிசர்வ் வங்கி பயன்படுத்துகிறது. இதன்படி சுமார் 200 கோடிகள் மதிப்பிற்கு மட்டும் தங்கத்தையும் அந்நிய நாட்டு கரன்சிகளையும் தனது இருப்பில் ரிசர்வ் வங்கி வைத்துக் கொள்ளும். பொருளாதாரத்தின் தேவை மற்றும் அளவுகளை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடும். இப்போதெல்லாம் புதிய தாள்களை அச்சடிக்க Fiat Currency என்ற நடைமுறையை பயன்படுத்துகிறார்கள். அரசின் மீதான நம்பகத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை என்பவற்றின் அடிப்படையில் புதிய ரூபாய் தாள்களை அச்சடிக்கிறார்கள். அவற்றிற்கு தங்கமோ அல்லது வேறு சமமான சொத்துக்களோ தேவைப்படுவதில்லை
இந்த உண்மையான தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் சில கேள்விகள் மனதில் எழுவதை தவிர்க்க இயலவில்லை.
1. எதற்காக கோவில்களின் தங்கத்தை மட்டுமே தொடர்ந்து குறி வைக்க வேண்டும்? அது மட்டும் இந்த வகை முற்போக்கு அறிவாளிகளின் கண்களை ஏன் தொடர்ந்து உறுத்திக் கொண்டிருக்க வேண்டும்?
2. சொத்துக்களின் மதிப்புகளை பணமாக மாற்றிக் கொள்வது என்றால் இந்தியா முழுவதும் பலப்பல ஊர்களில் உள்ள மிக முக்கியமான இடங்களை மாற்று மதங்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தானமாக அளித்த பலப்பல லட்சக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள நிலங்களைக் கூட எல்லாம் பண மதிப்பில் மாற்றலாமே, அவற்றை வசதியாக மறைப்பது ஏன் என்று ஹிந்துக்கள் கேட்பதற்கு வழி செய்கிறார்கள்.
3. ஒரு வாதத்திற்காகவே கூடபொருளாதாரத்தை நிமிர்த்த கோவில்களில் உள்ள தங்கம் பயன்படும் என்று வைத்துக் கொண்டாலுமே கூட பொருளாதாரத்தை சீர் செய்வதில் மாற்று மத வழிபாட்டுத் தலங்களின் சொத்துக்களையும் சேர்த்தே பயன்படுத்துவது குறித்து இவர்கள் எவருமே ஏன் பேச மறுக்கிறார்கள்? எது இவர்களை தடுக்கிறது? எந்த மத விஷயதிலும் அரசு தலையிடாமல் இருப்பதே நாட்டிற்கு நன்மை. இல்லையெனில் செக்யுலர் அரசு என்பது அர்தமற்றதாகிவிடும்.
4. தற்போது நிலவும் அசாதாரண சூழலில் உள்ள முக்கியமான பிரச்சினை பணப் பற்றாக்குறை அல்ல, மாறாக தொழில்துறையில் நிலவும் மிகவும் சுணக்கமான போக்கும் மக்களின் வாங்கும் திறன் முற்றிலும் முடங்கிப் போனதுமே. இந்த சூழலில் மீண்டும் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்தால் அது பணத்தின் மதிப்பை குறைத்து பணவீக்கத்தை அதிகரிக்க வைத்து அதன் விளைவாக விலைவாசி உயர்ந்து பொதுமக்களின் அன்றாட வாழ்வு இன்னமும் பாதிக்கப்படாதா?
ஒருபுறம் கோவில்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள் ஆகியவை ஒரு தளத்தில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றன என்றால் மறுபுறம் கோவில்களின் சொத்துக்களான பல லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும் அவற்றின் விலைமதிப்பற்ற தெய்வீகமான சிலைகள் கடத்தி விற்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாகி விட்டன. இந்த வரிசையில் பல நூற்றாண்டுகளாக மன்னர்களும் மக்களும் தங்களது இறைவனுக்கு காணிக்கையாக அளித்த தங்கமும் இப்போது புதிதாக சேர்ந்திருப்பது பெரும்பான்மை மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஒருசேர தோற்றுவிக்கிறது

Excellent article
இத்தகைய வேணு போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் இந்த சூழலில் சற்றும் பொருந்தாத வகையில் அரசுக்கு ஆலோசனை தருகிறேன் என்று இந்துக்களின் கோவில் சொத்துகளை அரசுடைமையாக்கி ஆதாயம் தேட பார்க்கின்றனர்கள். இவர்களின் எண்ணம் இந்துக்களுக்கிடையே ஒற்றுமை வேரப்பது தவிர வேறு ஓன்றுமில்லை..இந்து மதம் தவிர்த்து வேறு எந்த மதமும் இவர்களுக்கும் மற்றும் இந்து பத்திரிகை குழுமத்திற்கும் கண்கள் தெரியாது….
இந்த போலியான பத்திரிகையாளர்கள்..எழுதும் மாயையில், சில இந்துக்கள், தாங்கள் நடுநிலை இந்துக்கள் என்று எண்ணி கொண்டு இவர்களுக்கு ஒத்து ஊதிக்கின்றனர்…. இந்துக்கள் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்… ஆனால் நமது கோவில் மற்றும் கலாச்சாரம் கேள்வி குறி ஆகும் போது, இவர்களை இனம் கண்டு களைய, சாதி வேறுபாடின்றி இந்துக்கள் அனைவருக்கும் முன் வரவேண்டும்….
உண்மை ஜி. தன் முன்னர் உள்ள சவால்களை ஒருங்கிணைந்து இந்து சமூகம் எதிர்கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கியுள்ளன.