காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாகக் கூறி மத்திய அரசினை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். ஆனால் மத்திய அரசு உண்மையிலேயே பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளதா?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து கடும் சரிவினை சந்தித்து வருகிறது. நாம் இறக்குமதி செய்யும் விலை குறைந்துள்ளதால் அரசிற்கு கிடைக்கும் கலால் வரியும் குறைந்துள்ளது. அதனை சரி செய்யும் விதமாக கலால் வரியை மட்டும் அரசு உயர்த்தியுள்ளது. இது விலை உயர்வு எந்த விதத்திலும் வாடிக்கையாளர்களை பாதிக்காது. அவர்களைப் பொறுத்தவரை முன்பு வாங்கிய விலையிலேயே பெட்ரோல், டீசல் கிடைக்கும். ஆனால் விலை “உயர்ந்துள்ளதாக” கூறுகிறது காங்கிரஸ். வழக்கம் போல இதிலும் பொய் அரசியல்.
ஆனால் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும் விதமாக தில்லியில் ஆளும் கேஜ்ரிவால் அரசு மதிப்புக் கூட்டு வரிகளை (VAT) உயர்த்தியுள்ளது. குறிப்பாக டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 7.10 அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து மக்கள் அவதிக்கு ஆளாவார்கள்.