“கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா”என்று உருகினார் ராஜாஜி.
உண்மை தான்.
கலியின் கொடுமைகளிலிருந்து நம்மையெல்லாம் விடுவிக்க வடவேங்கடம் மட்டுமின்றி பல ஊரிலும் எழுந்தருளி பிரசன்ன வேங்கடேசராய் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமன் நாராயணன்.
அப்படி ஒரு புராதன கோவில் நம் சென்னையிலேயே உள்ளது என நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
சென்னை சென்ட்ரல் அருகே பெரியமேட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பெருமாள் கோவில்.

சமீபத்தில் அங்கு சென்று தரிசித்து வந்த ஸஞ்சிகை ஆசிரியர் வானமாமலை. ரவி கூறிய தகவல்கள் ஆச்சரியமூட்டுவதாகவும் அதே சமயம் அதிர்ச்சியளிப்பதாகவும் இருந்தன.
ஆயிரம் வருடம் கடந்த கோவில், உடையவர் ராமானுஜரே பூஜித்த பெருமாள்,
ராமானுஜருக்கும் தனி ஸந்நதி உள்ளது.

தொன்மையான திருக்கோவிலில் இன்று ஒரு கால பூஜை நடப்பதே சிரமமாக உள்ளது.
காரணம்?
கோவில் அமைந்திருக்கும் நெருக்கடியான இடம்; இடத்தைச்சுற்றிலும் இருசக்கர வாகனம் நுழைவதே கடினமாம்..அவ்வளவு குறுகிய சந்துகள்; பெரும்பான்மையாக இஸ்லாமியர்; தெருக்கள் முழுவதும் லெதர் தொழிற்சாலைகள்; அவற்றிற்காக வெட்டப்படும் மாடுகள்;சிறு, குறு வியாபாரஸ்தலங்கள் என முழு ஆக்கிரமிப்புக்கு இரையாகிவிட்டது.
இத்தகைய சூழலில்எப்படி பக்தர்களை எதிர்பார்க்கமுடியும்?
ஒரே ஒரு அர்ச்சகர் மட்டும் வந்து நித்ய கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்.
கோவிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தானே நம் முன்னோர்கள் பொதுநலனுக்காக அரும்பாடு பட்டு கோவில்களை எழுப்பினர்.நமது அக்கறையின்மையாலும் அலட்சியத்தாலும் பண்பாட்டுச் சின்னங்களான கோவில்கள் பலவற்றை இழந்துவருகிறோம்.
சரி! இனி என்ன செய்யப் போகிறோம்?
முதல் கட்டமாகஇந்தக் கோவில் பற்றியும் இதுபோன்ற பராமரிப்பற்ற பல கோவில்கள் குறித்த தகவல்கள்களையும் திரட்டுவதே ஸஞ்சிகை குழுவின் நோக்கம்.
பிறகு,அறநிலயத்துறை மூலமாகவோ ஆர்வலர்கள் மூலமாகவோ மீட்புப் பணியில் ஈடுபடுவோம்.
வாசகர்களும் தங்கள் பகுதியிலுள்ள சிதிலமடைந்த , ஆக்கிரமிப்புக்கு உள்ளான, புராதன கோவில்கள் குறித்து எழுதலாமே.
நானும் இரண்டு முறை இந்த கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்திருக்கிறேன்.புராதனமான கோயில்