இந்தியாவும் மலேசியாவும் இப்போது வர்த்தகத்தை மேற்கொள்ள ரூபாயைப் பயன்படுத்த போகின்றன.
இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகம் மற்ற நாணயங்களில் தற்போதைய செட்டில்மெண்ட் முறைகளுக்கு கூடுதலாக இந்திய ரூபாயில் (INR) தீர்வு காண முடிவெடுக்கப்பட்டுள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை 2022 இல் சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் (INR) செட்டில் செய்ய அனுமதித்ததைத் தொடர்ந்து மலேஷியாவுடனான வர்த்தகத்தில் இந்நடைமுறை வரவுள்ளது .
ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சியானது உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை எளிதாக்குவதையும், இந்திய ரூபாயில் (INR) உள்ள உலகளாவிய வர்த்தக சமூகத்தின் நலன்களை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா மிகப்பெரிய உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதற்காக மலேசியாவில் இருந்து அதிக அளவு பாமாயில் மற்றும் அதன உப பொருட்களை இறக்குமதி செய்கிறது.
இந்தியா இன்டர்நேஷனல் பேங்க் ஆஃப் மலேஷியா (IIBM), கோலாலம்பூரில் உள்ள அதன் தொடர்புடைய வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மூலம் சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்கைத் தொடங்குவதன் மூலம் இந்த நடைமுறையை செயல்படுத்தியுள்ளது.