யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) இன் கீழ் பரிவர்த்தனைகள் மார்ச் 2023 இல் ரூ. 14 லட்சம் கோடி என்ற புதிய சாதனையை எட்டியது. பரிவர்த்தனைகளின் அளவும் இந்த மாதத்தில் 865 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மார்ச் மாதம் நிதியாண்டின் கடைசி மாதமாக இருப்பதால், அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் உச்சத்தில் உள்ளன,” என்று NPCI இன் MD & CEO திலீப் அஸ்பே கூறியுள்ளார்.
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பிப்ரவரி 2023 பரிவர்த்தனைகளில் சரிவைக் கண்டது. மாதத்திற்கு மாதம் ஒப்பீட்டளவில், பிப்ரவரியில் பரிவர்த்தனைகளின் மதிப்பு 4.8% குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஜனவரி 2023 இல் புதிய உச்சத்தை எட்டிய பிறகு பரிவர்த்தனைகளின் அளவு 6.3% குறைந்துள்ளது.