பிரதான் மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை (PM MITRA) பூங்காக்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் 20 இலட்சம் வேலைகளை உருவாக்கக்கூடும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
2027 ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பூங்காக்களில் சுமார் 20 இலட்சம் புதிய நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், இந்த பூங்காக்களில் உள்கட்டமைப்பை உருவாக்க சுமார் 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
முதலீட்டை அதிகரிக்கவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இந்தியாவை ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக மாற்றவும் ஜவுளித் தொழிலுக்கு ஏழு PM-MITRA பூங்காக்களை அமைப்பதாக மத்திய அரசாங்கம் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது.
தங்கள் மாநிலத்தில் ஜவுளிப் பூங்காக்கள் வேண்டும் என்று போட்டியிட்ட 13 மாநிலங்களில், தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே முதலில் ஜவுளி பூங்காக்கள் அமைய உள்ளன.
தமிழகத்தில் விருதுகள் மாவடஇந்தத் திட்டம், ஜவுளித் தொழிலின் முழு மதிப்புச் சங்கிலியை உருவாக்குவதையும் ஒருங்கிணைந்த மற்றும் நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனால் திட்டங்கள் 2030 க்குள் ஜவுளி ஏற்றுமதியை 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும் இலக்கை அடைய முடியும் என்றும் கோயல் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகப் பதிவில், “மகா ஜவுளிப் பூங்காக்கள் 5F (பண்ணையிலிருந்து ஃபைபர் முதல் தொழிற்சாலை முதல் ஃபேஷன் வரை வெளிநாட்டு வரை[Farm-Fibre-Factory-Fashion-Foreign]) என்ற நோக்கத்தினை பூர்த்தி செய்வதற்கேற்ப ஜவுளித் துறையை மேம்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
4,445 கோடி மதிப்பிலான மத்திய நிதியுதவி திட்டம், ஜவுளி அமைச்சகத்தின் கீழ் 2027 வரை செயல்பாட்டில் இருக்கும். ஒவ்வொரு பூங்காவிற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சொந்தமான சிறப்பு நோக்க வாகனம் (SPV) அமைக்கப்படும்,
“இந்தத் திட்டம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது, அங்கு நூற்பு, நெசவு, சாயமிடுதல், அச்சிடுதல் மற்றும் தையல் ஆகியவை ஒரே இடத்தில் இருக்கும். இது தளவாடச் செலவுகளை வெகுவாகக் குறைத்து, மதிப்புச் சங்கிலியை ஒருங்கிணைத்து, அளவான பொருளாதாரங்களை உருவாக்கி, இந்திய ஆடை ஏற்றுமதிகளை ESGக்கு இணங்கச் செய்வதன் மூலம், ஆடைத் துறையை உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும்,” என்று ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (ஏஇபிசி) தலைவர் நரேன்கோயங்கா கூறியுள்ளார்.