உக்ரைனில் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றங்கள் புரிந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 20222 ம் ஆண்டு பிப். 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் போர் துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில்,
குழந்தைகள் உரிமை அமைப்பு ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றநீதிமன்றத்தில் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது, அப்பாவி மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை அழித்தது போன்ற போர் குற்றங்கள் புரிந்துள்ளா்ர. இதற்கு புடின் தான் பொறுப்பு என குற்றம்சாட்டியதையடுத்து சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.