இந்திய ஸ்டார்ட்-அப்களின் சுமார் $200 மில்லியன் மதிப்புள்ள டெபாசிட்கள் சிலிக்கான் வேலி வங்கியிலிருந்து (SVB) திரும்பப் பெறப்பட்டு குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டிக்கு (GIFT City) மாற்றப்பட்டுள்ளது.
எஸ்.வி.பி.யில் இந்திய ஸ்டார்ட்-அப்களின் டெபாசிட்கள் பில்லியன் டாலர்களுக்கு மேல் இருந்து வந்தது.
கடந்த வாரம் சிலிக்கான் வேலி வங்கியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அந்த வங்கியில் இருந்து டெபாசிட்டுகள் மாற்றப்பட்டுள்ளன.
ஸ்டார்ட் அப் கள் உடனுக்குடன் லாபம் தரக்கூடிய ஆபத்து அதிகம் உள்ள நிதி கருவிகளில் முதலீடு செய்தாலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அவற்றுக்கு தேவைப்படும்போது நிதியை எடுத்துக் கொள்ளும் நிறுவனங்களுக்கு அவை முக்கியத்துவம் கொடுக்கின்றன.
தற்போது அவை இந்தியாவில் டெபாசிட் செய்துள்ளதன் மூலம் இந்திய வங்கிகள் விரைவாக வளர்ச்சி பெறுவதும் விரிவாக்கம் பெறுவதும் விவேகமான நடவடிக்கைகள் மூலம் முதலீட்டாளர்களின் முதலீட்டை பாதுகாப்பதும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.