வரலாறு காணாத பணவீக்கம், உணவு மற்றும் மின் தட்டுப்பாடு, திவாலாகும் நிலையைத் தடுக்க IMFன் உதவி வேண்டுதல், பல நாடுகளிலும் கையேந்தி நிற்கும் பிரதமர், அரசியல் குழப்பம் என கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் மூளும் அபாயத்தில், சிதைந்துபோகும் நிலையில் நிற்கிறது பாகிஸ்தான்.
சரி!இது எந்தளவு பாரதத்திற்கு நன்மை பயக்கும்?
நண்பரும் நானும் நடத்திய நீண்ட விவாதித்ததில் நாங்கள் உணர்ந்த சில விஷயங்கள்…..பாகிஸ்தான் துண்டாகிப்போவது ஒரு விதத்தில் நமக்கு நன்மை. தேசப் பாதுகாப்புக்கென்று இருக்கும் அசாத்திய செலவுகள் குறையும்.
ஆழ்ந்து நோக்கியதில் பாகிஸ்தானின் இந்த நிலையால் நமக்கு தீமைகளே அதிகம் என உணர்ந்தோம்.
நாமொன்றும் Henry Kissinger, Sun Tsu, Moshe Dayan அல்லது Dr.Jaishankar அல்ல.இது முழுக்க முழுக்க எங்கள் கண்ணோட்டமே.ஒரு சராசரி இந்தியக் குடிமகனாக இந்தப் பிரச்சனையை அலசி ஆராய்ந்து நாம் உணர்ந்தவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
1. அகதிகள் மறுவாழ்வு
2.அணு சக்தி தொடர்பான சிக்கல்
3.புவி சார் அரசியல்
4.நீர் பங்கீட்டு ஒப்பந்தம்
5.புத்துயிர் பெறும் காலிஸ்தான்
6.போதைப் பொருள் தடுப்பு
7.பாதுகாப்பு போன்ற விஷயங்களில் நாம் சந்திக்கவேண்டிய சவால்கள் பல.
1. அகதிகள் மறுவாழ்வு.
பாகிஸ்தான் வீழ்ச்சிக்குப் பின் பலுசிஸ்தான், பஞ்சாப் மாகாண சிறுபான்மையினர் சுமார் 2-3 மில்லியன் மக்கள் பாரத எல்லையில் தஞ்சமடைவர்.அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு பல நாடுகளும் அழுத்தம் தரும் . Mark Zuckerberg தொடங்கி Soros, Newyork Times வரை நமக்கு அழுத்தம் தருவார்கள்.ஈரான், சவுதி, அமீரகம் பாகிஸ்தான் அகதிகளை ஏற்க வாய்ப்பில்லை.சிரியா, பாலஸ்தீன அகதிகளையே அவர்கள் ஏற்கவில்லை. நம் மீது தான் முழு பொறுப்பும் விழும்.பெருங்கூட்டமாக அகதிகள் நுழையும் போது ஒவ்வொருவரையும் கண்காணிக்க இயலாது.தீவிரவாதிகள் ஊடுருவ இதுவே சாதகமாக அமையும்.மேலும் NRC, CAA முயற்சியே நீர்த்துப் போகும்.பாரதத்துக்கு சிக்கல் தான் எஞ்சும்.அடுத்து அகதிகளை குடியமர்த்துதல்.தில்லி உட்பட அனைத்து மெட்ரோ நகரங்களிலும் சேரிகள் நிரம்பி வழியும். குழப்பமும் ஒழுங்கின்மையும் கூடும். சட்டப்புறம்பாக குடியேறிய பங்களாதேஷிகள்- ரோகிங்கியா- பாகிஸ்தானியரிடைய மும்முனைப் போர் மூண்டாலும் வியப்பில்லை.கேஜிரிவாலுக்கு கொண்டாட்டமா திண்டாட்டமா?
இது போன்றதொரு பயங்கர சூழலை 1983ல் தமிழகம் சந்தித்தது. பட்டப்பகலில் சென்னை நகர வீதியில் EPRLF -LTTE சண்டையில் EPRLF தலைவர் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டார்.
மற்றொரு உதாரணம் Dawson’s Field ஹைஜாக்கில் PLOவால் Jordanக்கு நேர்ந்த துன்பம். Palestine Liberation Organisationக்கு அடைக்கலம் தந்ததே Jordan தான்.
2. அணுசக்தி
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் எந்தளவு உபயோகப்படும் என்று உலக நாடுகளுக்கு இன்னமும் தெரியாது.
கடந்த மூன்றாண்டுகளில் அணுசக்தி பற்றியோ, இந்தியாவுடன் அணு ஆயுதப்போர் என்றோ பாகிஸ்தான் பேசவில்லை. நிதி நெருக்கடியால் ஆயுதங்களை விற்றிருக்கலாம்.
ஒருவேளை அவர்களிடம் அணு ஆயுதம் இருந்துவிட்டால்?மொத்த சக்தியும் பஞ்சாப் மாகாணத்தில் குவிந்திருக்கும்.2700கிமீ வரை பாயும் பாகிஸ்தானின் ஷஹீன் 3 ஏவுகணை.
ஏற்கனவே தீவரவாதத்தை ஆதரிக்கும் தேசம்;அதில் அணு ஆயுதமும் இருந்தால் தாக்குதல், போர், பேரழிவு தான்.
1992ல் சோவியத் யூனியன் சிதைந்த போது ரஷ்யாவின் ஆயுதங்கள் உக்ரைனிடம் இருந்ததால் உக்ரைன் வழியாகத் தான் ஆயுதக் கடத்தல் நிகழ்ந்தது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் அன்றைய உக்ரைன் நிலைக்கு போகலாம்.
3.புவி சார் அரசியல்
பாரதத்திற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவராக இருப்பது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இன்றும் நாட்டாமை தான்.ஏராளமாக பதுக்கல் ஆயுதங்கள், போதைப் பொருட்கள், கொலை பாதகச்செயல்கள் உண்டு.இன்றுவரை, TTP மற்றும் அல்கய்தா தாக்குதலையும் பாகிஸ்தான் தான் சந்திக்கிறது .TTPயின் கீழ் கில்ஜிட் இணைப்பு நமக்கு நன்மையல்ல.அடிப்படைவாத தாலிபானும் ஆயுத முனையில் பாகிஸ்தானின் பல பகுதிகளைக் கைப்பற்றும்.பலுசிஸ்தான் தனி தேசமானால் ஈரான் தனது எல்லையை விரிவாக்கத் துடிக்கும்.
பலுசிஸ்தானுடனும் ஈரானுடனும் நாம் நட்பாகவே இருந்தபோதும் அவர்களுக்குள் போர் மூள்வது நமக்குப் பாதகமே.
கில்ஜிட் தனி நாடானால் சீனா ஆக்கிரமித்து தனது எல்லையை விரிவாக்கும்.கில்ஜிட் மூலம் தான் தஜிகிஸ்தான், ரஷ்யா மற்றும் மற்ற CIS தேசங்களுக்குள் இந்தியா நுழையமுடியும்.கில்ஜிட் சீனாவசம் போனால் நமக்குத் தான் பாதகம்.
4.நீர் பங்கீடு
கடந்த அறுபதாண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் போர் சூழலிலேயே இருந்தபோதும் நீர் பங்கீட்டில் பிரச்சனை இல்லை.சட்டப்படி, நடுவர் மன்றம் மூலம் சிக்கல்கள் தீர்த்துவைக்கப்பட்டன.ஜீவநதியான ஜீலம், ராவி, பியாஜ், செனாப் ஆறுகள் பஞ்சாபில் தான் உள்ளன.

மற்ற பகுதிகளுக்கு சிந்து நதி மட்டும் தான்.பாகிஸ்தான் தனித்தனியாக உடைந்தால் உருவாகும் புதுப் புது நாடுகளுடன் நாம் நமக்கு கிடைக்கவேண்டிய 20% நீருக்காக சச்சரவில் ஈடுபடவேண்டும்.இது மகிழ்ச்சியான திருப்பமல்ல.
5.காலிஸ்தான்
கனடா, பிரிட்டனிலிருந்து செயல்படும் யூனியன் ஆஃப் கல்ஸா மொழி அடிப்படையில் தீவிரமாகக் களமிறங்கும் பஞ்சாப் மாநிலத்தில்.கெஜிரிவால் போன்றோர் இதை முன்னெடுக்கவும் வாய்ப்புள்ளது.போகப் போக பாக். பஞ்சாபிற்கு இது பெரும் ஆபத்தாக முடியும் என்றாலும் சில காலத்திற்கு பிரிட்டனும் கனடாவும் காலிஸ்தான் இயக்கத்திற்கு மறைமுக ஆதரவளிக்கும்.
6.போதைப் பொருள் பிரச்சனை
மெக்ஸிகோ போலவே பஞ்சாப் மாகாணமும் போதைப் பொருள் கடத்தும் மையமாகும்.மெக்ஸிகோ வழியாகத் தான் தென்னமெரிக்காவிலிருந்து US வருகிறது கொகெய்ன்.அதுபோல லாகூரில் அரசியல் லாபம், பணப்புழக்கம் போன்ற காரணங்களால் அரசாங்க ஆதரவே கூட கிடைக்கலாம்.

நமது பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே போதை கலாச்சாரம் கைமீறிப் போய்விட்டது.இனி,பாகிஸ்தானும் சேர்ந்து போதை சுனாமியே இங்கு உருவாக்கிவிடும்.பாகிஸ்தான் உடைவது பேராபத்து.
7.பாதுகாப்பு
சிந்து மாகாணம் ஓரளவு சுமூகமான பகுதி.PoK,Giljit பகுதி மக்கள் மனம் மாறி வருகிறது பொருளாதார நெருக்கடியால்.பஞ்சாப் என்ற நாடு நம்முடன் முழுவீச்சில் போர்புரியும் நிலையில் இருக்காது. அதிகபட்சம் ஒரு நாள் தான் போர் நீடிக்கும்.ஆனால் தீவிரவாதச் செயல்களையும், ஊடுருவலையும் ஊக்குவிப்பதன் மூலம் Operation Topaz திட்டத்தை தூண்டிவிடும்.

ராணுவத்திலிருந்துஎல்லைப் பாதுகாப்புப் படைமேல் கவனம் திரும்பும்.மேலும், கராச்சி துறைமுகம் சிந்து பகுதிக்கு உட்பட்டிருப்பதால் பாகிஸ்தானின் பஞ்சாபிற்கு அனுமதி கிடைக்காது.கடற்படை பலமிழக்கும். பாகிஸ்தானுக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைகள், ஊடுருவல், எல்லைப் போராட்டம் இவற்றால் இந்திய எல்லையில் பதற்றம் தணியும்.நமது சக்தியை ஒன்றுதிரட்டி சீனாவுக்கு எதிராக முழுமையாக செயல்படுத்தலாம்.
****************
இக் காரணங்களைமுழுமையாக சீர்தூக்கிப் பார்த்தால் பாகிஸ்தான் சிதறுண்டு போவதால் நமக்கு நன்மையை விட தீமையே அதிகம்.பாகிஸ்தானை ஒருங்கிணைக்க பாரதம் உதவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
பாகிஸ்தான்…..வெறுப்பில் உருவாகி, பொறாமையில் வளர்ந்து,நரித் தந்திரம், துரோகம் ஆகியவற்றால் சீராட்டப்பட்ட தேசம்.இன்றும் என்றும் எவ்வளவு குழப்பம் வந்தாலும்அது சிதையாமல் ஒரே தேசமாகத் தான் இருக்கவேண்டும்.
நமது பாரதம் அமைதியாக வாழ!
***********************************************
தமிழாக்கம்: ஸ்ரீப்ரியா இராம்குமார்
Share this:
- https://www.facebook.com/v2.3/plugins/share_button.php?app_id=&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df410ed6868ab9c%26domain%3Dsanjigai108.com%26is_canvas%3Dfalse%26origin%3Dhttps%253A%252F%252Fsanjigai108.com%252Ff28b50c4f2f202%26relation%3Dparent.parent&container_width=0&href=https%3A%2F%2Fsanjigai108.com%2F%3Fpage_id%3D12814&layout=button_count&locale=en_US&sdk=joey
- https://platform.twitter.com/widgets/tweet_button.3da3731af9a8a2b242ed5500485bb22f.en.html#dnt=false&id=twitter-widget-0&lang=en&original_referer=https%3A%2F%2Fsanjigai108.com%2F%3Fpage_id%3D12814&size=m&text=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D!&time=1674478012981&type=share&url=https%3A%2F%2Fsanjigai108.com%2F%3Fpage_id%3D12814&via=sanjigai108
- https://embed.tumblr.com/widgets/share/button?canonicalUrl=https%3A%2F%2Fsanjigai108.com%2F%3Fpage_id%3D12814&postcontent%5Bposttype%5D=link&postcontent%5Btitle%5D=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D!&postcontent%5Bcontent%5D=https%3A%2F%2Fsanjigai108.com%2F%3Fpage_id%3D12814
- Telegram
© 2022 sanjigai 108
Navigate Site
Follow Us
© 2022 sanjigai 108Skip to toolbar