சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத அளவிற்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை ஒரு கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
சுற்றுலாத்துறைக்கு ரூபாய் 786 கோடியினை மத்திய அரசு ஒதுக்கியது போக, ரூபாய் 1327 கோடி செலவில் கட்டப்பட்ட சீனாப் நதி பாலம் மற்றும் உதம்பூர் ஸ்ரீநகர் பாரமுல்லா ரயில்வே பாதை இணைப்பு திட்டம் மூலமாகவும் உள்கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தியதால் சுற்றுலாத்துறை சென்ற ஆண்டு விட 184 சதவிகிதம் இந்த ஆண்டு வளர்ந்துள்ளது.
இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வியாபார வளர்ச்சி பெருகி உள்ளது.