45 நாட்களே பிரதமராக இருந்த இங்கிலாந்து பிரதமர் திருமதி லிஸ் டிரஸ் தான் நினைத்த காரியங்களை முடிக்க இயலாததால் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். தனது பொருளாதார கொள்கை சொதப்பலானதால் சொந்த கட்சித் தலைவர்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டவர் திருமதி டிரஸ்.
இடைக்கால பிரதமராக இந்திய வம்சாவளி சேர்ந்த திரு ரிஷி சுனக் அவர்கள் இருப்பார்கள் என கருதப்படுகிறது. அடுத்த வாரம் நடக்க உள்ள பிரதமர் தேர்தலில் ரிஷி சுனக் உட்பட முன்னாள் பிரதமர்கள் பலர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.