காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 8,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை நடந்த தோ்தலில் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகிய இருவரும் களம் கண்டனா். மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 லில் 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. இது மொத்தத்தில் 96% வாக்குகள் ஆகும்.
தொடர்ந்து தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணி முதல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மல்லிகாா்ஜுன காா்கே 7897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளரான சசி தரூர் 1,000 வாக்குகள் பெற்றிருப்பதாகவும் 416 வாக்குகள் செல்லாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.