தெற்கு அந்தமானில் உள்ள வளிமண்டல சுழற்சி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக மாறும். வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ‛சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்படும்.