
ஒரு வெளிநாட்டவர் அதிலும் இஸ்லாமியர் நமது விநாயகர் சதுர்த்தி பற்றி ரசித்து ரசித்து சிலாகித்து வர்ணிப்பதைப் பாருங்களேன்!
” ஆண்டின் மிகச்சிறந்த பண்டிகையான விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட எனது இந்தியா தயாராகிக்கொண்டிருக்கிறது.சனாதன தர்மம் எத்தனை உற்சாகமாகத் தன் வாழ்வியலோடு இணைந்து கடவுளர்களையும் கொண்டாடுகிறது என வியந்து போகிறேன்!
வண்ணங்கள், கலை, கலை வடிவம், கற்பனைத்திறன், உற்சாகம், மகிழ்ச்சி, பிரசாதம் என எல்லாமும் எல்லாரும் இணைந்த கொண்டாட்டம்.
ஆனைமுகனை நாம் விரும்பியபடியெல்லாம் கற்பனைக்கேற்ப உருவாக்க எந்தத் தடையும் இல்லை, கட்டுப்பாடும் கிடையாது.
அதனால் தான் கூறுகிறேன் பல கடவுள்களை வணங்கும் மார்க்கமே முழு சுதந்திரமானது.
இயற்கையே மனித மூளையை மிக சக்தி வாய்ந்த சிந்தனைத் திறன் மிக்க உறுப்பாகப் படைத்தது.
பல்லிறை கோட்பாடு (polytheism) மட்டுமே மூளையின் வேலையை சிறப்பாகச் செய்யத் தூண்டுகிறது.
ஆம்! கடவுள் மனிதனை ஸ்ருஷ்டித்தார்.அதற்கு நன்றியாக மனிதர்கள் விதவிதமாக நம்பமுடியா வகைகளில் விநாயகரை உருவாக்குகிறார்கள்.
இது மனிதனின் தேடல், தேடல், இடையறாத தேடலின் வெளிப்பாடே.
இந்திய நண்பர்களே உம்மை வணங்குகிறேன்.உங்கள் தர்மத்தால்உலகையே கட்டிப்போடுகிறீர்கள்.நீங்களேஉருவாக்கி, ஆராய்ந்து ,நிறுவி இறைவனை வழிபடும் உங்களது இந்த வழிமுறை அலாதியானது.
உங்கள் மதநூல்களே இறைவனை நண்பனாக்கிக்கொள்ளுமாறு கூறுகின்றன.
வானத்து விண்மீனாக வணங்கலாம் அவனையே குடும்ப உறுப்பினராகவும் கொண்டாடலாம்.
உங்கள் கொண்டாட்டத்தில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்.எனது வேர், என் அடையாளம் அங்கு தான்.அடுத்த ஒன்பது நாட்களும் நீங்கள் சொல்லும் ஸ்லோகங்கள் மந்திரங்களை மனதில் எண்ணிக்கொண்டே எனது ஆன்மாவை யாகத்தீயாலும் தீப ஒளியாலும் புனிதப்படுத்திக்கொள்வேன்.விக்ன வினாசகன் விநாயகனை வணங்குகிறேன்.
விக்னஹரன், ஏகதந்தன், வக்ரதுண்டன், கஜமுகன், லம்போதரன் என 108 நாமங்கள்.உங்களுக்குத் தான் எத்தனை உரிமை, சுதந்திரம் உங்கள் இறை பக்தியை அன்பை வெளிப்படுத்த!ஆச்சரியமாக உள்ளது.
இஸ்லாமியர்கள் இன்னும் ஒலிபெருக்கிக்காக சண்டையிடுகிறார்கள்.சனாதனிகளோ சுற்றுச்சூழல் பாதிக்காத பிள்ளையாரை உருவாக்குவதில் கவனமாக உள்ளனர்வெல்லம், களிமண், விதை, காகிதக்கூழ், மாவு, மஞ்சள்பொடி என வகைவகையாய் விநாயகர்.ஹிந்து கடவுளர்கள் மக்களை சுதந்திரமாய் சிந்திக்கவிட்டுள்ளனர்.இஸ்லாமியரோ 1400 வருட பாலைவன மதத்தின் மீது குருட்டு நம்பிக்கையுடன் திரிகிறார்கள்.
இறைவன் தனது பக்தனின் வளர்ச்சியை தடுத்து போன்சாயாக்க மாட்டான்.மாறாகஆலமரமாக விரிந்து விழுதும் வேரும் பரவச்செய்வான்.
அத்தகைய ஆலமரமே சனாதனம் ,சுற்றி நிறைய போன்சாய்கள்.
பாரதம் வாழ்க!சனாதனம் வாழ்க!சனாதனிகளும் வாழ்க!நீங்கள் ஒளியை பரப்பவில்லை…..ஒளியே நீங்கள் தான்.இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
–காலித் உமர்.
நமது மேன்மையை நாம் எப்போது உணரப்போகிறோம்?