‘ பாஸ்மாண்டா’- இந்தியாவில் பெரும்பான்மை இஸ்லாமியர் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தாம். மொகலாய கொடுங்கோல் ஆட்சியில் விதிவசத்தால் மதம் மாறியவர்கள் இவர்கள்
யோகியின் அதிரடி !
பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தார் யோகி ஆதித்யநாத்.
இம்முறை டானிஷ் அசாத் அன்சாரி என்ற 32 வயது இளைஞருக்கு மந்திரி சபையில் இடமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஒரு விதத்தில் இந்தியாவில் இஸ்லாமில் நிலவும் ஜாதீய ஏற்றத் தாழ்வுகளைத் தோலுரித்துக் காட்டும் விதமாக இது அமைந்து விட்டது. ஹிந்து மதத்தின் மீது சுமத்தப்படும் மாபெரும் குற்றச்சாட்டு ஜாதிக் கொடுமைகள், சமூக அநீதி, தீண்டாமை இப்படிப் பல.
ஒரு டானிஷ் அசாத் அன்சாரியின் வெற்றி இஸ்லாமில் நிலவும் அவலத்தை வெளிச்சம் போட்டுவிட்டது.
அன்சாரி ‘ பாஸ்மாண்டா’ இனத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் பெரும்பான்மை இஸ்லாமியர் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.மொகலாய கொடுங்கோல் ஆட்சியில் விதிவசத்தால் மதம் மாறியவர்கள் இவர்கள். அதனால் இவர்களைக் கண்டால் அஷ்ரஃப் இனத்தாருக்கு எப்போதுமே ஏளனம் தான்.
யாரிந்த அஷ்ரஃப்கள்? அரேபியர், இரானியர், துருக்கியர், பதான், சயீது, ஷேக், மொகல், மிர்சா போன்றோர் அஷ்ரஃப்கள்.இவர்கள் மேல்தட்டு இஸ்லாமியர்கள்.இவர்கள் ஒரு நாளும்பாஷ்மாண்டாவை தங்களுள் ஒருவராகக் கருதியதில்லை.ஆகவே, டானிஷ் அன்சாரி பதவியேற்றது தான் தாமதம் எவ்வளவு தரக்குறைவாக முடியுமோ அவ்வளவு தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள் அவரது பிறப்பைப் பற்றியும் அந்த இனப் பெண்கள் பற்றியும்.
‘மேல் சாதி இஸ்லாமியர்கள் பாஷ்மாண்டாக்கள் வீட்டில் உணவருந்துவதில்லை இவர்கள் தலித் என்பதால்’ .இப்படிக்கூட ஒருவர் ட்விட்டரில் பதிந்திருக்கிறார். அதனால் இவர்களைக் கண்டால் அஷ்ரஃப் இனத்தாருக்கு எப்போதுமே ஏளனம் தான்.இப்படிக்கூட ஒருவர் ட்விட்டரில் பதிந்திருக்கிறார். அஜ்லாஃப் என்றொரு பிரிவுண்டு . அஜ்லாஃப் என்றால் நாகரீகமற்ற எனப் பொருள்.இவர்கள் கைவினைக் கலைஞர்கள்.OBC பிரிவினர்.அர்ஜால் என்ற பிரிவினர் துப்புரவுத் தொழிலாளர்கள்.இன்னும் செபியா, தோபி, ஹலால்கோர் என பலவகையினர் உண்டு.இவர்களது வாழ்க்கை பின்தங்கியே உள்ளது.
அதிலிருந்து ஒருவர் அமைச்சராவதா என்ற அதிர்ச்சியே விமர்சனங்களுக்குக் காரணம்.இத்தனைக்கும் டானிஷ் அன்சாரி முதுகலைப் பட்டதாரி. ஏபிவிபியில் இருந்து பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவரானவர்.இவரை அமைச்சராக்கியதன் மூலம் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் முன்னேற்றத்திற்கும் வித்திட்டுள்ளது.கூடவே, அந்த மதத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.
மார்மார் கே முசல்மான் பனானா என்று ஹிந்தியில் சொல்வதுண்டு. முகலாயர்கள், மற்றும் இன்ன பிற முகமதிய கொடுங்கோலர்களின் ஆட்சியின்போது, மண்ணின் மைந்தர்களை அடித்துத் துன்புறுத்தி, அவர்களைச் சொல்லவொணா அக்கிரமஙளுக்கு ஆளாக்கி, வாள் முனையில் கட்டாய மத மாற்றம் செய்தனர். அவ்வாறு மத மாற்றம் செய்யப்பட்டவர்கள் தங்கள் சுய மரியாதையையும் தாங்கள் விரும்பும் தெய்வத்தை வழிபடும் உரிமையையும் இழந்து இன்று தங்கள் நாட்டிலேயே சமூக அகதிகளாக வாழும் இழி நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கும் அவலத்தை அடிக் கோடிட்டுக் காட்டும் நல்ல கட்டுரை. மொழி நடைக்கு இன்னமும் வலு சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
Brilliant