தவறுகள் நடக்கும் பொழுது கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புரியும்.
எங்கெல்லாம் குடும்ப முறை சிதைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பெண்கள்,குழந்தைகளுக்கு அநீதி அதிகளவு நடக்கும். கத்தோலிக சர்ச்சுகளில் தொடர்ந்து எழும் குற்றச்சாட்டு இதற்குச் சான்று.
எவ்வளவுக்கெவ்வளவு குடும்ப முறை சிதைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வாழ்க்கை நரகச்சிக்கலாகிறது.
ஏன்?
குடும்பம் எனும் அமைப்பே ஒரு பரிணாம வளர்ச்சி தான். மனித சமுதாயம் சந்ததிகளை உருவாக்கி வளர்க்கும் முறை கொண்டது. குழந்தைகள் பல ஆண்டுகள் வரை பெற்றோர் மீது ஆதாரப்பட்டிருப்பர்.
தன் குழந்தையை வளர்க்க தகப்பனின் துணை தாய்க்கு தேவை. மகப்பேறே மறுஜென்மம் தான்.அதை எதிர்கொள்ள பலத்த கட்டமைப்பும் துணையும் பெண்ணிற்குத் தேவை.சிக்கலான பிரசவமானால் குழந்தைக்கு கூடுதல் கவனம் ,பாதுகாப்புத் தேவை.
ஆக,ஒரு பெண் இதையெல்லாம் ஆலோசித்துத் தான் துணையைத் தேடவேண்டும். உபயோகித்தி வீசியெறிவது போன்ற துணையை அல்ல.பிரசவ வேதனை என்பது ஒரு பெண்ணின் ஒழுக்கத்துடன் நேரடி தொடர்புள்ளது என ஹீப்ரு விவிலிய கதை கூறுவதாக இது ஒரு பரிணாம வளர்ச்சி என கார்ல் சேகன் கூறுகிறார்.
பலதாரமணம், பல கணவர் மணம் நடைமுறையிலிருந்தது தான். நாளடைவில் நிலை மாறியது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறைதான் சமூகத்தால் பெரிதும் விரும்பப்பட்டது. ஏகபத்தினி விரதனான ஸ்ரீராமன் தான் உத்தம புருஷனாக அடையாளம் காட்டப்பட்டான்.
அதே போல் தான் போஷிக்கும் குழந்தை தன்னிலிருந்து உருவானதே என்ற நம்பிக்கை ஆணுக்கும் வேண்டும்.
சூசன் பிளாக்மோர் குறிப்பிடுகையில் பெண்ணின் ஒழுக்கத்தைப்பாதுகாக்க,சோதிக்க பலவகையிலும் ஆண் முயல்கிறான். ஆனால் தவறு நேரும்போது மட்டும் தண்டனை பெண்களுக்கே என்கிறார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு ஆணுடன் இருந்தபோது ஆணை கண்டித்து அனுப்பிய நிர்வாகம்,பெண்ணின் பெற்றோரை வரவழைத்து இவரை வெளியேற்றிவிட்டது. ஷரியத்,தர்ம சாஸ்திரம், canonical laws, எல்லாவற்றிலும் ஏற்றதாழ்வு உண்டு. ஆனால் அதைத் திருத்தப்போவதாக களமிறங்கி இன்னும் மோசமாகத் தான் பாதிக்கப்படுகிறார்கள் அது மேவோவின் பணிப்பெண்ணோ தமிழ்நாட்டின் லூலூ குழுவோ.
நமது குடும்ப அமைப்பானது கலாச்சார அடிப்படை கொண்ட வளர்ச்சியின் பிரதிபலிப்பு. அதனால் தான் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. குடும்பம் மதம் பண்பாடு எல்லாம் பின்னிப்பிணைந்தது. அதையும் தாண்டி விட்டு விடுதலையாக வேண்டுமென்ற ஆவல் சிலருக்கு ஆழ்மனதில் குரலாய் கேட்கும். துறவியாகப் போவதும் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு தான்.
ஆகவே ,குடும்ப முறை எதிர்ப்பு, முற்போக்கு வாதம், பெண்ணீயம் போன்ற ஈவெரா சித்தாந்தங்கள் பெண் முன்னேற்றத்தைத் தராமல் பெண்களை மோசமான நிலைக்குத் தள்ளுவதே நிதர்சனம்.அதையும் பார்ப்பன சதியென திரித்துவிடும் திராவிடக் கூட்டம். குடும்ப அமைப்பு தான் பாதுகாப்பானது. அதிலுள்ள ஏற்ற தாழ்வைக் களைய ப்ருஹதாரண்ய உபநிஷதில் விடை உள்ளது.
“கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது என் கணவன்,என் மனைவி என்பதால் அல்ல.நானும் அவளும்,நானும் அவனும் ஒன்றே என்ற உயரிய தத்துவத்தால் தான்” இதைத்தான் நமது புராணங்களும் அர்த்தநாரீஸ்வர தத்துவமாக விளக்குகிறது.
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்! நாம் தான் புரிந்து கொள்ளவேண்டும்.
Absolutely right!!!