பாரத நாட்டின் தனித்துவமான கலாச்சாரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பு.இதில் நிறை குறைகளை சீர்தூக்கிப் பார்த்து,நிறைகளை ஏற்று குறைகளைக் களைய முற்படவேண்டுமே தவிர குடும்ப கட்டமைப்பையே உடைக்க நினைப்பது தவறு.
குடும்பத்தினருக்குக் கட்டுப்படுதல் கூட பெண்ணடிமைத்தனம் என ஒரு சித்தாந்தம் பெரியார் என்றழைக்கப்படும் ஈவெராவால் முன்மொழியப்பட்டு அவரது வழித்தோன்றல்களால் பின்பற்றப்படுகிறது.
பெண்கள் யாருக்கும் அடங்கவேண்டிய அவசியமில்லை.
திருமணம் என்ற பந்தம் பெண்ணை அடிமைப்படுத்தவே ஏற்பட்டது.
கற்பு,ஒழுக்கம் இதெல்லாம் ஆரியர்களால் தமிழர் மீது திணிக்கப்பட்டவை.
குழந்தை பெற்றுக்கொள்வது கூட அடிமைத்தனம். ஆணுக்கும் அது அநாவசிய சுமை.
மொத்தத்தில் குடும்பம் என்ற ஒழுங்குமுறையைத் தகர்த்து எப்படிவேண்டுமால் வாழலாம் என்ற கம்யூனிச சித்தாந்தம் போல
பல விசித்திரமான பெண்ணீய சிந்தனை உடையவர் ஈவெரா.
இதையெல்லாம் வரி விடாமல் பின்பற்றுபவர்கள் பெரியாரிஸ்டுகள்!
‘ஐயம் சாரி ஐயப்பா ;நான் தாடிக்காரன் பேத்தி’ போன்ற கடவுள் மறுப்பு பாடலெல்லாம் துணிச்சலாக வெளியிடுவர் பெரியாரிஸ்டுகள்.
ஆனால் பெரியார் பேத்திகள் கூட பாலியல் அத்துமீறல்களைச் சந்திக்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியமூட்டுகிறது.
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி என்ற பெரியார்-மார்க்சிஸ்டு இங்குள்ள பெரியாரிஸ்டுகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு கூறுகிறார் பல யூ டியூப் சேனல்களில்.
பெரியாரிஸ பெண்கள் பாலியல் ரீதியாக இழிவு படுத்தப்படுவதாக, ஆண்களின்
காம இச்சைக்கு அடிபணியவேண்டியதாகக் கூறுகிறார்.
பெரியாரிஸ பெண்ணீயக் கொள்கைகளை விவாதிக்க முகநூலில் ஒரு குழு உண்டாம்.
அதில் பெண்கள் தங்களுக்குள் ரகசியமாக பரிமாறிக்கொண்ட சில அந்தரங்க விஷயங்களை வைத்து மிரட்டி ஆண் பெரியாரிஸ்டுகள் தங்கள் பாலியல் ஆசையைத் தீர்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
வேடிக்கை என்னவென்றால் பெண் உரிமைக்கு மேடையில் முழங்கும் பெரியாரிஸ்டுகளே பெண்களை பாலியல் ரீதியாக மிரட்டுவது.
இவர்கள் அனைவருக்குமே குடும்பம் உண்டு. நல்ல பண்புடைய,மங்கல நாண் அணிந்த, கடவுளை வணங்கும் மனைவி அவரால் பண்புடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் எல்லாம் உண்டு.
ஆனால் மேடையெங்கும் பெரியார் கொள்கைகளைப் பரப்புவார்கள்.
தாலி என்பது அடிமைச்சின்னம் எனக்கூறி தாலி அறுப்பு போராட்டம் நடத்துவர்.
முரண்பாடின் மொத்த உருவம்.
கம்யூனிச சித்தாந்தமும் பெரியாரிஸம் போலத் தான்.
ஆண் பெண் உறவென்பது தனிப்பட்ட விஷயம்.அதில் தலையிட சமூகத்திற்கு உரிமையில்லை என்பதே.
ஆனால் கார்ல் மார்க்ஸ் கூட ஹெலன் டெமூத் என்ற பணிப்பெண்ணை பாலியல் சுரண்டல் செய்தவர் தான்.
சோவியத் படையினர் ஜெர்மன் பெண்களை பலாத்காரம் செய்ததை நியாயப்படுத்தியவர் சர்வாதிகாரி ஸ்டாலின்.
ஸ்டாலினின் போலீஸ் பெரியா எண்ணற்ற பெண்களைக் கற்பழித்துக் கொன்ற கொடூரன்.
பெண்கள், பெண்கைதிகளின் நிலை ஸ்டாலினுக்குத் தெரிந்தபோது கூட பெரியா களைத்துவிட்டிருப்பார் என அலட்சியமாக பதில் சொன்னவர் ஸ்டாலின்.
மார்க்சிஸ்டுகள் ஆட்சியில் சோவியத் யூனியன்,சீனாவில் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் சுரண்டல் பண்டைய குடும்பப் பெண்கள் அனுபவித்ததை விடவும் கொடுமை.
மேவோவும் இதே மனநிலையுடையவர் தான் என அவரது வாழ்க்கைக்குறிப்பில் கல்வியாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
அதிகம் கல்வியறிவில்லாத வெகுளிப் பெண்கள் மேவோவின் இலக்கு.
ஒரு பெண் பிடித்தால் இச்சை தீரும் வரை அனுபவித்துப் பின் அடுத்த பெண்ணை நாடுவார் என்கிறது குறிப்பு.
மார்க்ஸ்,மேவோ,ஈவெரா போலவே தான் சில சாமியார்களும்,ஆசிரமங்களும் செயல்படுவதுண்டு.
மார்க்ஸிசம், மேவோயிசம் ,பெரியாரிஸம் போலவே பக்தி மார்க்கத்திலும் பாலியல் சுரண்டல் இருந்தது என்பது மறுப்பதற்கில்லை.
உலகப் புகழ் ஓஷோ முதல் இப்போது தலைமறைவாகியுள்ள சாமியார் வரை இந்தக் கூற்று உண்மை தான்.
முக்தியளிப்பதாக கூறிக்கொண்டு வீட்டை விட்டு கூட்டிச்சென்ற பெண்கள் அனைவருக்குமே பாலியல் சீண்டல்கள் உண்டு.
பெண் சுதந்திரத்திற்குத் தடையே குழந்தை பெறுவது என்று எடுத்துக்கூறி தனது ஆண் சீடர்களை கருத்தடை செய்யத்தூண்டியவர் தான் ஓஷோ.
Oregon ஆசிரமத்தில் மூன்றில் ஒரு பங்கு சீடர்கள் கருத்தடை செய்தனர்,பெண் சுதந்திரத்துக்காக.
ஆனால் பிரேம் நிர்வாணா என்ற ஓஷோவின் நெருக்கமான சிஷ்யை தற்கொலை செய்துகொண்டார்.
ஓஷோவை விட 18 வயது இளையவர்,ஓஷோவுடன் திருமணம் கடந்த உறவில் இருந்தவர்,மனச்சிதைவு ,மன அழுத்தம் ஏற்பட்டு ஓஷோ இறக்கும் 41 நாட்கள் முன் தற்கொலை செய்துகொண்டார்.காரணம் பாதுகாப்பின்மை.
ஆனால் பெரியாரை விட 35வயது இளையவரான மணியம்மை ,பெரியாரை முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.கைம்பெண் மறுமணத்தை தீவிரமாய் ஆதரித்த
பெரியார் இறந்ததும் மணியம்மை மறுமணம் செய்துகொள்ளவில்லை.தற்கொலை செய்யவும் இல்லை.மாறாக பழமையான ஹிந்து மனைவியாகவே வாழ்ந்தார்.
அன்னை மணியம்மை என்ற மரியாதையும் கிடைத்தது.
இந்த இரண்டு நிகழ்வுகளில் ஒரே வித்தியாசம் குடும்பம், திருமணம் என்ற கட்டமைப்பு தான்.
குறைகள் பல இருந்தாலும் பாதுகாப்பும் உள்ளது.
தொடரும்…….
மொழி பெயர்ப்பு ஆசிரியர்: ஸ்ரீப்ரியா
நன்றி: SWARAJYA