ஜனவரி 26, 2022 அன்று—இந்தியாவின் 73வது குடியரசு தினத்தன்று—17 அமைப்புகளின் சர்வமதக் கூட்டணி, “இந்தியாவின் பன்மைத்துவ அரசியலமைப்பைப் பாதுகாப்பது” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு காங்கிரஸின் சுருக்கத்தை ஏற்பாடு செய்தது இதில் கலந்து கொண்டவர்கள் இந்தியாவின் இறையான்மைக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை முன் வைத்தார்கள். , இந்தியாவில் தற்போதைய மனித உரிமைகள் நிலை குறித்து , முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி, பெங்களுர் பேராயர் பீட்டர் மச்சாடுா, ஸ்சுவரா பாஷ்கர் போன்றவர்கள் இந்தியாவின் இறையான்மைக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்துள்ளா்கள். இவர்களை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்தியாவின் இறையான்மையின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.
ஜனவரி 26ந் தேதி நிகழ்ச்சிக்கு முன்பாகவே, இதை ஒட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. 14.1.2020 ந் தேதி IAMC organizes an event on the call for Genocide of Inidan muslims, 19.1.2022 – Interview of Gregory Stanton ( Genocide Watch ) by Karan Thapar for the ‘ the Wire “ 19.1.2022 – Stoke White Law Firm realeases a rport on war crimes on Kashmir is association with Pakistan backed Legal Forum for Kashmir 21.1.2022- Muslim Council Bureau recycles Kashmir Genocide Story based on Gregory Stanton Statements. 21.1.2022 – Indian influencers share MCB story on Kashmir Genocide இறுதியாக 26.1.2022 – Protesting India’s Pluralist Constitution இதில் இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். ஆகவே ஒரு விஷயத்தை வலியுறுத்த முன்னரே பல நிசழ்ச்சிகளை இந்தியன் அமெரிக்கன் கவுன்சில் நடத்தி ஒரு மாயையை உருவாக்கியது.
இந்த காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்த இந்திய-அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் பற்றிய சில உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். , 2005 ஆம் ஆண்டில், குஜராத் முதல்வராக இருந்த திரு. மோடியை அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்று வாதிட்ட முன்னணி சிவில் உரிமை அமைப்புகளில் இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் (IAMC) முன்னிலையில் இருந்தது. 2002ல் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்துத்துவா பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற பொய்யை மெய்யாக்க நடந்த சம்பவத்தின் சூத்திரதார அமைப்பு இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்சிலாகும். இவர்கள் அண்டை நாடான பாகிஸ்தான் பற்றியோ அல்லது இஸ்லாமிய நாடுகளில் அதிகரித்து வரும் சிறுபான்மையினத்தவர்கள் மீது நடத்திய தாக்குதல்கள் பற்றியோ விவாதிக்காமல், இந்திய அரசியலமைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பற்ற, பன்மைத்துவ பார்வைக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் என தாங்களகவே கற்பனை செய்து கொண்டு அது பற்றி விவாதித்தனர்.
இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் (ஐஏஎம்சி), அமெரிக்காவின் பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற வக்கீல் குழு என பிரகடனப்படுத்திக் கொண்டாலும், குறிப்பாக 2014க்கு பின்னர் ஒரு சிறு சம்பவத்தை கூட பெரிதாக்கி மத சுதந்திரத்திற்கு இந்தியாவில் ஆபத்து என கூச்சல் போடும் அமைப்பு. இந்த அமைப்பு தனது சுட்டுரை மற்றும் இனைய தளத்தில், இடதுசாரிகளின் நிர்வகிக்கும் தி ஒயர் இனைய தளத்தில் வரும் செய்திகளை மட்டுமே மேற்கோள் காட்டி விமர்சனம் செய்கிறது.
இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து இஸ்லாமியக் குழுவுடன் ஆலோசிக்கும்போது, தலிபான்கள் பற்றிய IAMC இன் அனுதாபக் கருத்துக்களைக் கொள்கை வகுப்பாளர்கள் நினைவில் கொள்வது கிடையாது. ஆப்கானிஸ்தானில் பெண்களை அடிபணியச் செய்வதையும், இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் தண்டனைகளை அமுல்படுத்துவதையும் பொறுத்துக் கொள்ளும் IAMC அங்கு மதச் சுதந்திரத்திற்காக வாதிடுவதில்லை; மாறாக, இந்தியாவில் மதச் சுதந்திரத்திற்காக பாடுபடுவதாக ஒப்பாரி வைக்கிறது.
ICNA முன்னணிகள் பல்வேறு பெயர்களில் (அனைவருக்கும் நீதி; இந்தியாவைக் காப்பாற்று; சுதந்திர காஷ்மீர்) தங்களது பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகளை மறைக்கச் செயல்படுகின்றன, IAMC சின் இரண்டு முக்கிய நபர்களான ஷேக் உபைத் மற்றும் அப்துல் முஜாஹித் ஆகியோர் ஜமாத்-இ-இஸ்லாமியுடன் நெருங்கிய தொடர்புகளையுடையவர்கள். ஷேக் உபைத் மற்றும் அப்துல் முஜாதித் உருவாக்கிய பல குழுக்கள் 2013-14 முதல் US லாபி நிறுவனமான Fidelis Govt Relations (FGR) ஐ வேலைக்கு அமர்த்தியுள்ளது. FGR ஆனது 2012 முதல் USCIRF ஆணையர் மேன்சாவுடன் தொடர்புடைய டெர்ரி ஆலன் என்பவரால் வழிநடத்தப்படுகிறது; இந்த மேன்சா தான் ஜனவரி 26-ல் நடந்த காணொலி காட்சியில் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
IAMC வின் பொறுப்பாளர்கள் பாதிக்கப்பட்ட மியான்மர் ரோஹிங்கியாக்கள் மற்றும் உய்குர் முஸ்லிம்களுக்கு உதவி புரிய அவர்களின் பெயரில் நிதி ( ஜகாத் ) வசூலித்து, மேற்படி நிதியை இந்தியாவுக்கு எதிராக லாபி செய்ய பயன்படுத்தினார்கள். எடுத்துக் காட்டாக . Umbrella front ‘Justice for All’ என்ற அமெரிக்காவின் ஃபேஸ்புக் அமைப்புக்கு, இந்தியாவிற்கு எதிரான விளம்பரங்களுக்காக US$50,000 செலவழித்தது. இதே போன்ற இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பதிய விட மற்ற நாடுகளிலும் பதிய IAMC யினாரால் செலவு செய்யப்படுகின்றன. கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, அவர்கள் கூகிள் மற்றும் யூடியூப்பில் விளம்பரங்களை இயக்குகிறார்கள். இந்த நோக்கத்திற்காக இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் 2013-2020 க்கு இடையில் FGRக்கு $3,22,000 (INR 2,41,00,000) செலுத்தியுள்ளது. .
ஊடகங்களில் இந்த பரப்புரை முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சிலுக்கு அமைந்தது. அதாவது . 2014 ஆம் ஆண்டு USCIRF அறிக்கையில், இந்தியாவின் வரைபடத்தை மாற்றி வெளியிட்டார்கள். அதாவது ஜம்மு காஷ்மீர் , லடாக் மற்றும் அருணாஞ்சல் ஆகியவற்றை இந்தியாவின் வரைப்படத்திலிருந்து நீக்கியது. 2020 அறிக்கையிலும் மேற்படி பகுதிகளை நீக்கியே வரைபடத்தை வெளியிட்டார்கள். ஆனால் 2021 அறிக்கையில் ஜம்மு காஷ்மீர் , லடாக் மற்றும் அருணாசல் பிரதேசம் ஆகிய பகுதிகள் இந்திய வரைபடத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது! ஏன் என்றால் மோடி அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக சேர்க்கப்பட்டது.
இது மட்டுமில்லாமல் இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் தனது டுவிட்டரில் பதிய விடுகின்ற கருத்துக்கள் பொய்யானமை என தெரிந்தும் பதிய விடுகிறார்கள். 9.8.2021 ந் தேதி A GROUP IN DELHI – IS CALLING FOR THE SLAUGHTER OF MUSLIMS 11.8.2021ந்தேதி THIS DID NOT HAPPEN IN A VACUUM – JUST LAST YEAR SOME MINORS HAVE KILLED IN DELHI BY HINDUTUVA MOBS என்பதாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். மேலும் சி.ஏ.ஏ. கலவரத்தில் பலியான 52 பேர்களும் முஸ்லீம்கள் என டுவிட்டரில் பதிய விட்டார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பலியானவர்களில் 30 பேர்கள் மட்டுமே முஸ்லிம் என்பதும், மற்றவர்கள் இந்துக்கள் என்பதும், அதில் பலியான ஒருவர் உளவு துறை அதிகாரி என்பது இரட்டடிப்பு செய்யப்பட்டது.
இந்தியாவுக்கு எதிராகவும், முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட சம்பவங்கள் சிலவற்றை பார்த்தால், இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சின் நோக்கம் தெளிவாக புரியும். 2003-ல் நடந்த ஒரு செமினாரில் அல்கொய்தா மற்றும் தாலிபான்களுக்கு உதவி செய்த குளோபல் ரிலீஃப் ஃபவுண்டேஷன், அல் ஹராமைன், கேர் இன்டர்நேஷனல் இன்க் ஆகிய மூன்று அமைப்புகளின் பொறுப்பாளர் அசிம் கஃபூர் கலந்து கொண்டார். SIMI உடனான தொடர்பை மறுத்தாலும், IAMC தெளிவாக SIMI இன் முன்னாள் தாய் அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் மீது அனுதாபம் கொண்டுள்ளது. JIH பல ஆண்டுகளாக நிதானமாக இருப்பதாகக் கூறினாலும், அது இஸ்லாமியக் கொள்கைகளின்படி “சமூகத்தின் மறுசீரமைப்பு மற்றும் மாநில உருவாக்கம்” ஆகியவற்றைத் தொடர்ந்து முயன்று வருகிறது. IAMC ஆனது JIH செயல்பாடுகளை ஊக்குவிக்கும் கவர்ச்சியான செய்தி விளக்கங்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை உருவாக்குகிறது, மேலும் அதை இந்தியர்களுக்கு ஒரு “மீட்பர்” என்று குறிப்பிடுகிறது. 2017 ஆம் ஆண்டு ஐஏஎம்சியின் துணைத் தலைவரான சுஃபியா சலீம், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத ஜமாத்-இ-இஸ்லாமி கிளையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இருந்து குறைந்தது 30 இடுகைகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய இறையான்மைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்
இந்தியாவில் சுதந்திரத்தையும், உரிமைகளையும் அனுபவிக்கும் சிலர் இந்த நாட்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் அந்நிய சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுவது ஏன் என்பது தெரியவில்லை. குறிப்பாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பெங்களுர் கிறிஸ்துவ பேராயர் பீட்டர் மச்சாடோ, உள்ளிட்டோர். இவர்கள் ஜனவரி 26-ந் தேதி இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் ஏற்பாடு செய்த காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சியில், இந்திய இறையான்மைக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். இவர்களுடன் புதுடெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக நடந்த வன்முறைப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக ஷீரோக்கள் என புகழப்பட்ட பொதுநல ஆர்வலர்களாக காட்டிக் கொள்ளும் லதீடாஃபர்சான, அயென்ன ரேஷா ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, குடிமக்களை அவர்களின் அடிப்படை நம்பிக்கையில் அடிப்படையில் வேறுபடுத்தியும், சகிப்புத் தன்மையின்மை மற்றும் பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தியும் நடைபெறும் சம்பவங்கள் நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. பல ஆண்டு காலமாக கடைபிடித்து வரும் பொது தேசியவாத தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் , புதிய கர்பனையான கலாசார தேசியவாத நடைமுறைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன என பேசியுள்ளார். . அதாவது ஹிந்து தேசியவாதம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மையின இனமான கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து மோடிக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பும் வகையில் பேசினார். .
அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் , குடிமக்களை வேறுபடுத்தி, சகிப்புத்தன்மையில்லாத சூழ்ழலுக்கு வழி வகுக்கிறார்கள் என முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேறிய பின்னர், முஸ்லிம்களை தூண்டி விட்டு, குளிர் காயும் ஈன பிறவிகளின் குரலாகவே ஹமீத் அன்சாரியின் குரல் ஒலித்துள்ளது. திருவாளர் ஹமீத் அன்சாரியின் கவனத்திற்கு சில விஷயங்களை நினைவுப் படுத்த வேண்டும். அஸ்ஸாமில் பங்காள தேஷ் நாட்டினர் சட்ட விரோதமாக நுழைந்தவர்களை கண்டறிந்து வெளியேற்றப்படும் என ஒப்பந்தம் கையெழுத்திட்ட காங்கிரஸ் பற்றிய கருத்துக்களை முன் வைப்பதில்லை. அந்நிய நாடுகளிலிருந்து வெளியேறும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என குரல் கொடுக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் கிடையாது. சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்திற்கு நிதி உதவி செய்த இஸ்லாமிய நாடுகளைப் பற்றியோ, அல்லது அந்த நிதியை பயன்படுத்தி வன்முறை வெறியாட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய கருத்தையே வெளிப்படுத்தவில்லை.
ஃபர்ஸானாவின் சமூக ஊடகங்களில் துப்பாக்கி ஏந்திய முஸ்லீம் பெண்களின் படங்கள் மற்றும் இஸ்லாத்தின் ஜிஹாதி வரலாறு பற்றிய சிலிர்ப்பான எச்சரிக்கைகள் உள்ளன, அதே நேரத்தில் ரேஷா 2015 இல் குற்றவாளியான பயங்கரவாதி யாகூப் மேமனை தூக்கிலிட்டதற்காக இந்தியாவை “பாசிச [sic] நாடு” என்று அழைத்தார். IAMC இன் சுதந்திர தின கொண்டாட்டத்தின் மற்றொரு விருந்தினர் பேச்சாளரான இந்திய ஆர்வலர் ஹர்ஷ் மாந்தர் போன்ற முஸ்லிமல்லாதவர்களும் IAMC நிகழ்வுகளை அலங்கரித்தவர்களில் அடங்குவர். 2008 மும்பை தாக்குதலில் பங்கேற்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி மற்றும் 2001 இந்திய நாடாளுமன்றத்தில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது சதிகாரருக்கு கருணை கோரி ஏராளமான கருணை மனுக்களில் ஹர்ஸ் மாந்தர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தியாவின் இறையான்மைக்கு எதிராக கூச்சலிடும் அமெரிக்க எம்.பி.கள் மற்றும் இணைய தளங்கள்
ஜனவரி 26-ல் இந்தியாவின் இறையான்மைக்கு எதிராக காணொலி நிகழ்ச்சி நடத்திய இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க எம்.பிகளான எட் மார்க்கி, ஜிம் மெ்ககவர்ன், ஆண்டி லெவின், ஜேமி ரஸ்கின் போன்றவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்கள். கடந்த சில வருடங்களாகவே இணைய வழியாக இந்தியாவின் மீது வெறுப்புப் பேச்சுகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். முறைாயன ஆவணங்களை சரிபார்க்காமல், இந்தியாவில் இடதுசாரிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, அரசின் மீது பழிச் சுமத்துகின்ற செயல்களை செய்து வருகிறார்கள்.
அமெரிக்க செனட்டர் எட் மார்கி (எம்ஏ), காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் மெக்கவர்ன் (எம்ஏ), காங்கிரஸ் உறுப்பினர் ஜேமி ரஸ்கின் (எம்ஏ), மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் ஆண்டி லெவின் (எம்ஐ) உள்ளிட்ட சர்வதேச சட்டமியற்றுபவர்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் தொடர்ச்சியாக கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கும் துஷ்பிரயோகங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரம் என்ற அமைப்பினர்.
இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு காங்கிரஸின் மாநாட்டில் பேசிய செனட்டர் மார்கி, “இந்திய அரசாங்கம் சிறுபான்மை மதங்களின் நடைமுறைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்கி வருவதால், அது பாகுபாடு மற்றும் வன்முறை வேரூன்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ஆன்லைன் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் அழிக்கப்பட்ட மசூதிகள், எரிக்கப்பட்ட தேவாலயங்கள் மற்றும் வகுப்புவாத வன்முறைகள் உட்பட வெறுப்பூட்டும் செயல்கள் அதிகரித்திருப்பதைக் கண்டோம். என்று கூறியவர்கள், அதற்குறிய ஆதாரங்களை காட்டாமல், 2014க்கு முன்னர் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி வாதாடுகிறார்கள்.
“அடிப்படை மனித உரிமைகள் எந்த இடத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகும் போது பேசுவது அமெரிக்காவின் கடமையாகும், ஆனால் அதைவிட முக்கியமானது, அமெரிக்காவின் முக்கிய பங்காளியான இந்தியாவில் அவை நடைபெறும் போது.” தடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு என்றார்கள். இந்தியா அமெரிக்காவிற்கு அடிமை நாடு கிடையாது என்பதை மறந்து விட்டு ஒப்பாரி வைக்கிறார்கள். அமெரிக்காவின் நட்பு நாடுகளில் நடக்கும் மத ஒழிப்பு அரசியல் பற்றிய விவாதம் நடைபெறுவதில்லை. சீனாவில் உய்கார் முஸ்லிம்கள் மற்றும் மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களைப் பற்றிய அக்கரை இவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.
ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற பொதுமக்கள் மீது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டித்து, காங்கிரஸ் உறுப்பினர் மெக்கோவர்ன் கூறினார், “இந்த வகையான தவறான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல. முழு மக்களுக்கும் எதிராக பாகுபாடு காட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது அல்லது அந்த மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டக்கூடிய அழற்சி மொழி பயன்படுத்தப்படும்போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. காஷ்மீரிலும், வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களிலும் நடக்கும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமானால் சில சட்டங்கள் அவசியம் என்பது அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு தெரியாது. ஏன் என்றால் கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் துப்பாகியால் சுட்டுக் கொள்ளும் மன நிலை உள்ள அமெரிக்கர்களுக்கு தெரியாது.
மற்ற பேச்சாளர்களில் நாடின் மேன்சா, சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷனின் (USCIRF) தலைவரும் அடங்குவர்; ஹமீத் அன்சாரி, இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி; அமீனா குரிப்-ஃபாக்கிம், மொரிஷியஸின் முன்னாள் ஜனாதிபதி; பேராயர் பீட்டர் மச்சாடோ, பெங்களூரு பேராயர்; கெர்ரி கென்னடி, ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமைகள் தலைவர்; மற்றும் கரோலின் நாஷ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் யுஎஸ்ஏவின் ஆசியா வக்கீல் இயக்குனர். இந்த வக்கீல்கள் இந்தியாவின் வளர்ந்து வரும் இந்து மேலாதிக்க இயக்கத்தை கண்டனம் செய்தனர், இது இந்தியாவின் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்த உடல் மற்றும் அமைப்பு ரீதியான வன்முறைக்கு வழிவகுத்தது என்றார்கள். ஆனால் முஸ்லிம் பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக இந்தியா பட்ட இன்னல் பற்றி எவரும் வாய் திறக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி உதவி செய்து , இந்தியாவில் மத மாற்றம் நடைபெறும் ஈனத்தனமான செயலுக்கு வக்காலத்து வாங்கும் செயலாகவே இந்த நிகழ்வை பார்க்க முடிகிறது.
“சமீபத்திய ஆண்டுகளில், குடிமை தேசியவாதத்தின் நன்கு நிறுவப்பட்ட கொள்கையை மறுக்கும் மற்றும் கலாச்சார தேசியவாதத்தின் புதிய மற்றும் கற்பனையான நடைமுறைக்கு இடையூறு செய்யும் போக்குகள் மற்றும் நடைமுறைகள் தோன்றுவதை நாங்கள் அனுபவித்துள்ளோம்” என்று டாக்டர் அன்சாரி கூறினார். ஏன் என்றால், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்திற்கு கோடிக் கணக்கில் நிதி உதவி செய்த இஸ்லாமிய நாடுகளை பற்றி குறிப்பிடாமலும், மேற்படி நிதியை பெற்று வன்முறையில் ஈடுபட்ட பாப்புலர் . ஃப்ரண்ட ஆஃப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றவுடன் கூச்சல் தொடங்கியுள்ளது. “இது குடிமக்களை அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வேறுபடுத்தவும், சகிப்புத்தன்மையற்ற தன்மையை வெளிப்படுத்தவும், பிறரைத் தூண்டவும், அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மையை ஊக்குவிக்கவும் விரும்புகிறது.” இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் விவாதம் செய்கின்ற ஈனத்தனமான செயல்களை இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் தொடர்ந்து செய்து வருகிறது.
மத சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான மற்றும் மோசமான மீறல்களுக்காக இந்தியாவை குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடு (CPC) என்று முத்திரை குத்த USCIRF இன் முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் பற்றி பேசுகையில், Maenza கூறினார், “இந்து தேசியவாதத்தின் மீது பச்சாதாபம் கொண்ட கும்பல்கள் தண்டனையின்றி செயல்பட்டன, சில சமயங்களில் அதிகாரிகளின் உதவியும் கூட. வழிபாட்டுத் தலங்களில் சிறுபான்மை மதத்தினரை குறிவைத்து போலீசார் தாக்குதல் நடத்தினர். அரசாங்க அதிகாரிகளால் தூண்டப்படும் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல்களால் மதவெறி வன்முறை செயல்படுத்தப்படுகிறது. மொத்த மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திர மீறல்களுக்கு எதிராக ஆவணப்படுத்தவோ அல்லது குரல் எழுப்பவோ சிவில் சமூகத்திற்கு சுதந்திரம் இல்லை. இந்த குற்றச்சாட்டு, இந்தியாவில் புலம்பும் சிறுபான்மையினரும் அவர்களுக்கு ஆதரவாக களம் கானும் இடதுசாரிகளும், பிரிவினைவாதிகளும் போடும் கூச்சலாகவே தெரிகிறது. இந்தியாவில் உள்ள சிவில் அமைப்பு என்பது இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கம் என்பது தெரியாமல் அரசின் மீது குற்றம் சுமத்துவதே தங்களின் தலையாய கடமையாக செயல் படும் ஒரு அமைப்பு தான் இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில்.
நாஷ், கென்னடி மற்றும் பேராயர் மச்சாடோ அனைவரும் இந்த உணர்வுகளை எதிரொலித்தனர், இந்திய அரசாங்கம் சர்வதேச எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் மற்றும் எதேச்சாதிகாரத்தை நோக்கி அதன் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இந்தியாவில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிரான போஸ்டர் பிரச்சாரத்திற்கு 104 அமைப்புகள் ஒப்புதல் அளித்துள்ளன. தகவலைப் பரப்பவும், வெளியிடவும், பகிரவும் கேட்டுக்கொள்கிறோம். ஒப்புதல் கொடுத்த 104 அமைப்புகளும் கிறிஸ்துவ, முஸ்லிம் அமைப்புகள். இந்து சன்னியாயை கொல்லும் பொது தெரியாத மத உரிமை, தற்போது தெரிகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் மீது நடத்திய வன்முறை, அஸ்ஸாம் மாநிலத்தில் சட்ட வி்ரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லீம்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை பற்றி விவாதிப்பதில்லை.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக சட்டப்பேரவையில் மதமாற்றத் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை சட்டமாக்க மேலவையில் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பெண்களைப் பாதிக்கிறது. இவர்களின் அயோக்கியத்தனமான செயல்களுக்கு தலித்துக்களையும், ஆதிவாசிகளையும் இணைத்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்பாவி தலித்துக்களை மத மாற்றம் செய்யும் இந்த மிஷனரிகளின் வேலை எப்படி பட்டது என்பது நன்கு தெரிந்த நிலையிலும் இந்த இழிச்செயல் தொடர்கிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் மதமாற்றத் தடை மசோதாவுக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு எதிராகவும் தேசிய ஒற்றுமைக் கவலைகள் இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்தச் சட்டங்கள் மதச் சுதந்திரத்தை மீறுவது மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும் மீறுவதாகவும் அந்த அமைப்புகள் வாதிடுகின்றன. தேசிய ஒற்றுமை மன்றம் ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் உங்கள் நெட்வொர்க்கில் பயன்படுத்தவும், பகிரவும் மற்றும் பரவலாகப் பரப்பவும் கேட்டுக்கொள்கிறது. 2014க்கு பின்னால் மத மாற்றம் செய்வதற்காகவே அந்நிய நாடுகளிலிருந்து வரும் நிதிக்கு கட்டுபாடு விதித்தது தான் இவர்களின் புலம்பலுக்கு காரணமாக அமைந்துள்ளது. மதம் மாற்ற முயன்ற போது, தற்கொலை செய்து கொண்ட மாணவி பற்றிய கவலைகள் இந்த ஈன பிறவிகளுக்கு கிடையாது.
“இந்திய அரசாங்கம் சிறுபான்மை மதங்களின் நடைமுறைகளைத் தொடர்ந்து குறிவைத்து வருவதால், அது பாகுபாடு மற்றும் வன்முறை வேரூன்றக்கூடிய சூழலை உருவாக்குகிறது. சமீபத்திய ஆண்டுகளில், வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறைச் செயல்கள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். அழிக்கப்பட்ட மசூதிகள், எரிக்கப்பட்ட தேவாலயங்கள் மற்றும் வகுப்புவாத வன்முறை உட்பட ஆன்லைனில் வெறுக்கிறேன்” என்று செனட்டர் எட் மார்கி கூறினார். மேலும் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பவே பல்வேறு அமைப்புகள் கடந்த சில வருடங்களாகவே உருவாக்கப்பட்டுள்ளன. அது பற்றிய சில விவரங்கள் .
ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ், இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில், அம்னஸ்டி இன்டர்நேஷனல் யுஎஸ்ஏ, ஜெனோசைட் வாட்ச், 21வில்பர்ஃபோர்ஸ், சர்வதேச கிறிஸ்தவ கவலை, ஜூபிலி பிரச்சாரம், தலித் ஒற்றுமை மன்றம், நியூயார்க் ஸ்டேட் கவுன்சில் ஆஃப் சர்ச்சுகள், வட அமெரிக்காவின் இந்திய அமெரிக்க கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு, இந்தியா சிவில் வாட்ச் சர்வதேச, இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிரான மாணவர்கள், பன்மைத்துவ மையம், அமெரிக்க முஸ்லீம் நிறுவனம், அமைதி மற்றும் நீதிக்கான சர்வதேச சங்கம், அமெரிக்க இந்திய முஸ்லிம்கள் சங்கம் மற்றும் மனிதநேய திட்டம் (ஆஸ்திரேலியா). இன்னும் பல அமைப்புகள் உலா வருகின்றன. மேற்படி அமைப்புகள் 2014க்கு பின்னர் காளான்கள் போல் முளைத்துள்ளன. இந்த அமைப்புகளுடன் தங்களை சமூக சீர்திருத்தவாதியாகவும், எழுத்தாளர்களாகவும் காட்டிக் கொள்ளும் சிலரும் இதில் அடங்குவார்கள். அவர்களில் சிலர்
ஜான் தயாள், எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் (இந்தியா) Fr. செட்ரிக் பிரகாஷ், ஜேசுட் பாதிரியார் மற்றும் மனித உரிமை ஆர்வலர் (இந்தியா) அர்ஜுன் சேத்தி, சிவில் உரிமை வழக்கறிஞர் அமெரிக்கா) Martha Nussbaum, சிகாகோ பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் (அமெரிக்கா) தத்துவவாதி மற்றும் பேராசிரியர் சிவம் பட், இந்து பாதிரியார் (அமெரிக்கா) Audrey Truschke, வரலாற்றாசிரியர் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) தெற்காசிய வரலாற்றின் இணைப் பேராசிரியர் ரோஹித் சோப்ரா, சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தின் (அமெரிக்கா) தொடர்பியல் இணைப் பேராசிரியர் வெண்டி டோனிகர், இந்திய வரலாற்றின் அறிஞர் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) பேராசிரியர் தூதர் இஸ்லாம் சித்திக், அமெரிக்க முஸ்லிம் நிறுவனம் (அமெரிக்கா) ருசிரா குப்தா, சிவப்பு ரோஜா பிரச்சாரம் (இந்தியா) அபூர்வானந்த், அறிஞர் மற்றும் எழுத்தாளர் (இந்தியா) ஆனந்த் பட்வர்தன், ஆவணப்படத் தயாரிப்பாளர் (இந்தியா) நந்திதா ஹக்சர், மனித உரிமை வழக்கறிஞர் (இந்தியா) சஃபூரா சர்கார், மாணவர் ஆர்வலர் தலைவர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா (இந்தியா) இந்தியாவில் கொடுமைகள், இந்துத்துவம், துன்புறுத்தல்
மேற்படி அமைப்புகளும், குறிப்பிட்டுள்ள பலரும் 2014க்கு பின்னால் தொடர்ந்து இந்துக்கள் மீதும், அவர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் மீதும் வன்மத்தை விதைத்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் உள்ள இடதுசாரிகளும், பிரிவினைவாதிகளும், உள்ளடக்கமாகும். 2014க்கு முன்பு அந்நிய சக்திகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த போது, வாய் திறக்காத இவர்கள், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வல்லரசு நாடுகள் கூட சற்றே அச்சம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கியதின் காரணமாகவே இம் மாதிரியான செமினார்கள் நடத்தி, உலக அரங்கில் இந்தியாவின் மீது அபாண்டமாக பழி சுமத்தும் செயலை செய்து வருகிறார்கள்.