தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி லாவண்யாவை, மதம் மாறும்படி வற்புறுத்தியதாலும், விடுதி காப்பாளர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமா வெளியிட்டுள்ள. அறிக்கையில் தமிழ்நாட்டைப் பாதுகாத்திட சனாதன சக்திகளை ஒடுக்க வேண்டும்! வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிராகச் சட்டமியற்ற வேண்டும்! என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்! என அறிவித்துள்ளார்.
மேலும் லாவண்யா தற்கொலைக்கு அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்ததுதான் காரணம் என்று பொய்யான செய்தியைப் பரப்பி அந்தப் பள்ளிக்கு எதிராக மட்டுமின்றி ஒட்டுமொத்த கிறித்தவ மதத்தினருக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இந்தியாவெங்கும் கிறித்தவ மதத்தினருக்கு எதிராக 486 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன எனவும் 2020 ஆம் ஆண்டில் நடந்த தாக்குதல்காளைவிட இது 75% அதிகம் எனவும் ‘ தி யுனைட்டெட் கிறிஸ்டியன் ஃபோரம்’ (The United Christian Forum ) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. என மத மாற்றத்திற்கு வக்காலத்து வாங்கும் விதமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.
திருமா வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் முழுமையாக கொடுக்கவில்லை. 2021-ல் தமிழகத்தில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், 12 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், கோவையில் நடந்த சம்பவம் ஒன்றாகும். கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், “சத்தம் மற்றும் இடையூறு” என்று புகார் கூறி, பாஜக வினர் கொடுத்த புகார் மனுவை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள இந்த பிரார்த்தனை மண்டபங்களில் சுமார் 30 பிராத்தனை கூடங்களை மூடுவதற்கு காவல்துறை உத்தரவிட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, மூடுவதற்கான உத்தரவு இருந்தபோதிலும், கிறிஸ்தவர்கள் காவல் துறை உத்தரவை மீறி கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தனர், இதை எதிர்த்து நடந்த மோதல் ஒன்றாகும்.
தாக்குதல் பற்றிய செய்தியும் உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தில் கிறிஸ்துவர்களையோ அல்லது முஸ்லீம்களையோ தாக்கப்பட்ட சம்பவங்களின் பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும் தமிழகத்தில் மத மாற்றம் நடைபெறுகிறது என்பதற்கு, 1951-ல் 4.74 சதவீதமாக இருந்த கிறிஸ்துவர்கள், 2001-ல் 6.06 சதவீதமாக இருந்தது, 2011-ல் 6.12 சதவீதமாக உயர்ந்துள்ளது இது மத மாற்றத்தின் எதிரொலி என்பதையும், தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பெறுவதற்காகவே , கிறிஸ்துவ மதம் மாறிய லட்சக்கணக்கான தலித்துக்கள், இன்றும் தங்களை இந்துக்களாகவே சான்றிதழ்களில் குறிப்பிட்டுள்ள மோசடியை பற்றி குறிப்பிடாடது ஏன் ? எவ்வாறு மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தின் காரணமாக 100க்கும் மேற்பட்ட சட்ட மன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் சூழ்நிலையில் முஸ்லீம்களின் வாக்கு வங்கி இருக்கிறதோ, அதே போல் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்ட மன்ற தொகுதிகளில் கிறிஸ்துவர்களின் வாக்கு வங்கி வெற்றி தோல்வியை உறுதி படுத்தும் காரணியாக இருக்கிறது. இது மத மாற்றத்தின் எதிரெலி என்பதை மறந்து விடக் கூடாது.
கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகிவிட்டதால், இந்துக்களை முந்திக்கொண்டு, மாறிவரும் மக்கள்தொகையால் இந்துக்களை மிரட்டிய பொன்னையா, “நாங்கள் பெரும்பான்மையாக உள்ளோம் (கன்னியாகுமரி மாவட்டத்தில்) இப்போது 42 சதவீதத்தில் இருந்து 62 சதவீதத்தைத் தாண்டிவிட்டோம். விரைவில் நாங்கள் 70 சதவீதமாக இருப்போம். உங்களால் எங்களைத் தடுக்க முடியாது. எனது இந்து சகோதரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதை சொல்கிறேன். என கூறியவரை கண்டிக்காத திருமாவளவன், சனாதனவாதிகள் மீது வன்மத்தை விதைக்கிறார்.
வன்முறையை தூண்டும் விதமாக செயல்படுவது கிறிஸ்துவ அமைப்புகள் என்பதை மறந்து விடக் கூடாது. சர்சுகளும் மிஷனரிகளும், மொழிக் களவு, கலாசாரக் களவு இன வெறி ஆகிய அபாயகரமான யுக்திகளின் மூலம் மத மாற்றம் செய்ய முயலுகிறார்கள் வேண்டுமென்றே இந்துக் கோவில்களுக்கு எதிரிலோ, அல்லது அருகிலோ சர்ச்சுகளை கட்டுகின்றனர். அவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிபெருக்கி மூலம் மதப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பின்னர் இந்துக் கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் மதமாற்றப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்துக் கடவுள்களைக் கேலி, கிண்டல், அவமானம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், இந்து மதப் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், ஏசுவைப் புகழ்ந்து எழுதப் பட்டிருக்கும் கையேடுகளையும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழங்கி அவர்களை மதமாற்றம் செய்ய முயல்கின்றனர். இதன் மூலம் வன்முறையை தூண்டுகிறார்கள் என்பது தெரிந்தும், இந்துக்களுக்கு எதிரான திராவிட அரசுகள் கண்டு கொள்வதில்லை.
தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள சனாதன சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் உத்தரப் பிரதேசத்தைப் போல ‘கும்பல் கொலைகள்’ நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றி விடுவார்கள் என்பதை கவலையோடும் முன்னெச்சரிக்கைடும் சுட்டிக்காட்டுகிறோம் என்கிறார் திருமா. ஆனால் தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டு குளிர் காயும் ஈன பிறவிகள் யார் என்பதை நன்கு தெரிந்தும் தெரியாமல் இருப்பதாக நடிக்கிறார்கள். கும்பல் கொலைகள் என யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. விடுதலை சிறுத்தைகளின் வன்முறை தாண்டவம் பற்றிய தொகுப்பை பார்த்தால், கும்பல் கொலை செய்வது யார் என்பது தெரியும். 2009 ஜனவரி மாதம் ஒரு பிரச்சினைக்காக நடத்தின வன்முறையாட்டத்தில் 51 அரசு பஸ்கள் தாக்கப்பட்டன. இதில் மூன்று பஸ்கள் எரிக்கப்பட்டன. இதன் காரணமாக 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் தான் சனாதன சக்திகளைப் பற்றி பேசுகிறார்கள்.
தமிழகத்தில் பா.ம.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் எற்பட்ட மோதல் பற்றிய செய்திகளை பார்த்தால் வன்முறையை தூண்டியவர்கள் யார் என்பது நன்கு தெரியும். இவர்களைப் போல் சனாதனவாதிகள் வன்முறையில் ஈடுபட்டது கிடையாது.
மோசடி பேர்வழிகளை கொண்ட சர்ச்சுகளும், மிஷனரிகளும் ‘மொழிக் களவு’ (Hijacking the native language), ‘கலாசாரக் களவு’, ‘இனவெறி’ (Racism) ஆகிய அபாயகரமான யுக்திகளின் மூலம் மதமாற்றம் செய்யத் தொடங்கினர். இவற்றில், முஸ்லீம் ஆட்சியாளர்களின் முடிவுக்கு பின்னர் இடையே சற்று மங்கியிருந்த ‘கலாசாரக் களவு’ (inculturation) தற்போது பெரிதாகத் தலை தூக்கியிருக்கிறது. அதாவது, ‘கத்தோலிக்க ஆஸ்ரமங்கள்’ அமைத்தல்; ஆஸ்ரமத்தின் நுழைவாயிலின் முகப்பில் ‘ஓம்’ சின்னத்தை வைத்தல்; ‘ஓம்’ என்பது “வேதச்சொல்” என்றும் “இந்துச்சொல் அல்ல” என்றும் சாதித்தல்;
ஆஸ்ரமத்தின் உள்ளே யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் தியானம் செய்வதுபோல் இயேசு வீற்றிருக்கும் சிலை அமைத்தல்; தாமரை மலரின் மேல் இயேசு ஒரு கால் மடக்கி, ஒரு கால் கீழே தொங்க விட்டு வீற்றிருப்பது போல் சிலையமைத்தல்; ஆஸ்ரமத்தில் உள்ள பாதிரியார்கள், கன்யாஸ்திரீகள் காவியுடை அணிதல்; போன்ற இந்துமதப் புனித வழிகளைப் போலியாக பாவனையில் ஏற்று, மக்களை ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இது மத மாற்றத்தின் மோசடித் தனமாக செயல்பாடாகும். இந்த பசப்பு செயல்கள் மூலம் கிறிஸ்துவர்கள் நடத்திய மத மாற்ற நாடகமாகும். மேலும், யேசுவுக்கு ‘அஷ்டோத்திர நாமாவளி’, ‘ஸஹஸ்ர நாமாவளி’ அர்ச்சனைகள் செய்தல்; வேளாங்கண்ணி போன்ற சில கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ள ஊர்களுக்குப் “பாத யாத்திரை” போதல்; “இருமுடி” தூக்குதல்; மேரி மாதாவை “மாரியம்மன்” என்று சொல்லுதல்; சில மலைகள் மேல் அரசாங்கத்தின் அனுமதி இன்றிச் சர்ச்சுகள் கட்டி அந்த மலைகளைச் சுற்றி பௌர்ணமி “கிரிவலம்” ஏற்பாடு செய்தல்; என இந்து மத ஆன்மீக வழிபாட்டு முறைகளையும் கலாசாரக் களவாடுதலிலும் சர்ச்சுகளும் மிஷனரிகளும் இறங்கியுள்ளன. இன்றைக்கும் இந்துக்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் போது, நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி மாதா கோவிலுக்கும் செல்லும் பழகத்தை கானலாம்.
இந்துக்களின் பழக்க வழக்கங்களை கடைபிடித்து இந்துக்களை சீன்டுவதிலும் கிறிஸ்துவர்கள் தங்களின் கைவண்ணத்தை காட்ட துவங்கிளார்கள். முச்சந்திகளில் நாம் பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுலது போல, மேரி சிலைகளை வைக்க ஆரம்பித்துள்ளனர். எல்லா நகரங்கள் மற்றும் ஊர்களின் எல்லைகளில் வரிசையாக சர்ச்சுகளும் பிரார்த்தனைக் குடில்களும் அமைக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் ஜனத்தொகைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல், அளவுக்கதிகமான சர்ச்சுகள், மற்றும் பிரார்த்தனைக் குடில்கள் அமைக்கின்றனர். (இப்படிச் செய்வது மிக லாபகரமான, வெளிநாட்டு வருவாய் ஈட்டும் தொழில் என்பதும் மக்கள் அறிந்ததே). மலைகள், குன்றுகளின் மீது வெள்ளை வர்ணத்தில் சிலுவை வரைதல், ‘மரியே வாழ்க’ என்று எழுதுதல் கணக்கின்றி அதிகரித்து வருகிறது.
வேண்டுமென்றே இந்துக் கோவில்களுக்கு எதிரிலோ, அல்லது அருகிலோ சர்ச்சுகளை கட்டுகின்றனர். அவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிபெருக்கி மூலம் மதப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பின்னர் இந்துக் கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் மதமாற்றப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்துக் கடவுள்களைக் கேலி, கிண்டல், அவமானம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், இந்து மதப் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், ஏசுவைப் புகழ்ந்து எழுதப் பட்டிருக்கும் கையேடுகளையும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழங்கி அவர்களை மதமாற்றம் செய்ய முயல்கின்றனர். உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் போன்ற மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் வாசலில் கூட இந்த மாதிரிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். (ஆதாரம்: குமுதம் ஜோதிடம் 14 நவம்பர் 2008 தேதியிட்ட இதழ்)
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் எஸ்றா சற்குணம் “இந்து மதம் ஒரு புனையப்பட்ட மதம் .அப்படி ஒரு மதமே கிடையாது. இதையெல்லாம் எடுத்துக் கூறுங்கள். நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்று சொல்லுங்கள். அவர்கள் ஏற்கவில்லை என்று சொன்னால் அவர்கள் முகத்தில் இரண்டு குத்து குத்துங்கள். அதைப்பற்றி பரவாயில்லை. கடவுளே மன்னித்து விடுங்கள் எனக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது என்று சொல்லி முகத்தில் குத்தி ரத்தம் வருவது மாதிரி செய்து விட்டு அதன் பிறகு ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தொடர்ந்து உங்கள் பணிகளை செய்யுங்கள்.” என்று பேசியிருக்கிறார் .
இது பற்றி 21.06.2019-ல் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது வன்முறையை தூண்டுவதும், இரண்டு மதங்களுக்கும் இடையே மோதலை உருவாக்கும் என்பது தெரிந்தும் இது பற்றி ஏன் திருமா இதுவரை வாய் திறக்கவில்லை. மோகன் சி.லாரன்ஸ் இந்து மதத்தை இழிவுப்படுத்தியும், இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தியும் பிரச்சாரம் செய்து வருவது திருமாவுக்கு தெரியாதா? இவர் மீது இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்ட போது வாய் திறக்காத திருமா, லாவண்யா தற்கொலைக்கு மட்டும் வாய் திறப்பது ஏன்?
இந்தியாவில் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய சட்ட ஆணையம் 2017ஆம் ஆண்டு சட்ட மசோதா ஒன்றைத் தயாரித்து இந்திய ஒன்றிய அரசிடம் அளித்துள்ளது. பாஜக அரசு அதை சட்டம் ஆக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 153 சி மற்றும் 505 ஏ ஆகிய புதிய பிரிவுகளை சேர்ப்பதற்கான அந்த சட்டத் திருத்த மசோதாவைத் தமிழ்நாடு அரசே சட்டமாக்க முடியும். மேற்படி சட்ட திருத்தங்களுடன் சட்டமியற்றினால், பாதிக்கப்படுவது இந்து அமைப்புகள் கிடையாது. மதசார்பின்மை என்ற போர்வையில் உலா வரும் ஓட்டு பொருக்கிகள் தான் அதிக அளவில் சிக்குவார்கள்.
கிறிஸ்துவ மேடைகளில் இந்துக்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வக்கிரபுத்தி படைத்த அரசியல்வாதிகளில் திருமாவும் ஒருவர். இந்துக்களை சாதியாக பிரித்தவர்தான் கிருஷ்ண பகவான் என கிறிஸ்துவ விழாவில் திருமாவளவன் பேசியதும், இந்துக்களை இழிவுப்படுத்தும் செயலாகும். இவ்விதமாக பேசுவதற்கு மேடைகளை அமைத்து கொடுத்த கிறிஸ்துவ நல்நெண்ண இயக்கம் . திருமாவின் கோரிக்கையின் படி சட்ட திருத்தம் கொண்டு வந்தால், மேற்படி அமைப்பும் சட்ட சிக்கலில் மாட்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்களின் வக்கிரமான பேச்சுகளை சற்றே திருப்பி படிக்க வேண்டும். லாவண்யா தற்கொலைக்கு பின்னர், எஸ்றா சற்குணம் , கிறிஸ்துவத்தை பின்பற்ற அழைப்பது எங்கள் உரிமை , பிடிக்காவிட்டால் வேறு பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டும். என இறுமாப்பாக பதில் கொடுத்துள்ளார். மத மாற்ற நிர்பந்தப்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார் என தெரிந்தும், தூய இருதய மேல் நிலைப்பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். இது பற்றி எந்த அரசியல் கட்சி தலைவரும் வாய் திறக்கவில்லை.