
இந்திய நாட்டில் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட ஏதாவது விஷயமென்றால் அதை விசிறிவிட்டு பெரிதாக்கி அதை தேசத்தின் இறையாண்மைக்கு எதிராகத் திருப்புவதில் சிலருக்கு பெரும் உற்சாகம் உண்டு.
எப்படியாவது இந்தியாவை சிறுபான்மையினருக்கு எதிரி என முத்திரை குத்த துடிக்கும் கூட்டம் தான் லிபரல்ஸ், இடதுசாரிகள்,திடீர் போராளிகள் மற்றும் பலர். இவர்களிடத்தில் தற்போது சிக்கித் தவிக்கும் விஷயம் ஹிஜாப்.
சீருடை என்ற கருத்தையே மாற்றும் ஹிஜாப் அணியத் தடை விதிக்கக்கூடாது என லிபரல் கூட்டம் கிளம்பியாகிவிட்டது.
உடுப்பியில் காவித்துண்டு அணிந்த நூறு ஹிந்து இளைஞர்கள் மத்தியில்ஒரு ஹிஜாபணிந்த பெண் அல்லாஹு அக்பர் என்று முழங்கினாளாம்.தலை கால் புரியவில்லை புதுப் போராளிகளுக்கு.ஹீரோ போல அவளை ஷீரோவாகக் கொண்டாடுகின்றனர். விரைவில் ஜீரோ ஆக்காமல் ஓயமாட்டார்கள்.
ஆனால் இணையத்தில் இதற்கு பதிலடி சிறப்பாகவே கிடைத்துவருகிறது.நூறு ஹிந்து மாணவர்கள்,போலீஸ் இருந்தும் அந்த இஸ்லாமியப் பெண்ணுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.உண்மையில் அந்த மாணவர்கள் தான் ஹீரோக்கள்.
இதே இந்தியாவில்நூறு இஸ்லாமியர் மத்தியில் ஒரு ஹிந்து பெண் ஜெய் ஸ்ரீராம் கூறிவிட்டு உயிரோடு போகமுடியுமா என்று கடுமையாகத் தாக்கியுள்ளனர்.சிந்தித்துப் பார்த்தால் உண்மை உறைக்கும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ராஜஸ்தான் அரசு ஹிந்து பெண்கள் அணியும் முக்காடு(கூங்கட்)க்கு தடை விதித்தபோது ஆஹா இதுவல்லவோ பெண் சுதந்திரம்,பெண் எழுச்சி என பூரித்த கூட்டம் ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பம் கல்லூரியோ அரசோ தலையிடமுடியாது என்று மௌனம் சாதிக்கிறது.
பிரியங்கா காந்தி ஒருபடி மேலே போய் பிகினியோ ஜீன்ஸோ ஹிஜாபோ பெண்கள் உடையை அவர்களே தீர்மானிப்பார்கள் என்றார்.
கல்விச்சாலைகளில் ஒழுக்கம் வேண்டும் ஏற்றதாழ்வு கூடாதென்பதாலேயே சீருடை அணியும் பழக்கம். பிகினி ஜீன்ஸ் எல்லாம் அணியக்கூடாதென்று பிரியங்கா அறிதல் நலம்.
நோபல் பரிசு பெற்ற போராளி மலாலா கூட கருத்து கூறிவிட்டார் தன் பங்கிற்கு. ஹிஜாபுக்கு எதிரானஇந்தியாவின் போக்கு வருத்தமளிக்கிறதாம். இதே மலாலா தான் ஹிஜாப் அணிந்து வெயிலில் நடப்பது நெருப்பு குண்டத்தில் நிற்பது போல தகிப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தமே இல்லாமல் இதில் ஹிந்துத்வாவை இழுத்து கலகமூட்டுபவர்களும் உண்டு.
பெண்ணடிமைத்தனம்,புரட்சி,மதசார்பின்மை,கலாச்சாரம்,சீருடை இது எதுவுமே இவர்களது இலக்கல்ல.
இந்தக் காரணத்தை வைத்து தேசத்தின் அமைதியைக் குலைப்பது, அரசின் ஸ்திரத் தன்மையை அசைப்பது முக்கியமாக உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பைக்குறைப்பது இவை தான் லிபரல் போராளிகளின் திட்டம்.
சுருக்கமாக தேசத்துரோகம்.
மொழிபெயர்ப்பு ஆசிரியர்: ஸ்ரீப்ரியா