வளர்ச்சிப் பாதையில் பாரதம்;வாய் பிளக்கும் உலக வங்கி!
ஆம்,production linked incentive(PLI) என்ற புதிய திட்டத்தை கடுமையான கொரானா காலத்தில் அறிமுகப்படுத்தியது மோடி அரசு.அதாவது இந்தியாவில் உற்பத்தி செய்யும் தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சட்டதிட்டங்களை,விதிமுறைகளை எளிமைப்படுத்துதல்,ஊக்கத்தொகை அளித்தல் போன்றவை.
இதனால் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவது ,அந்நிய முதலீட்டாளர்களை ஈர்த்து Make in India திட்டம் மூலம் தொழில் தொடங்க வைப்பது அதன் மூலம் ஆத்ம நிர்பர் பாரத் எனப்படும் தற்சார்பு பாரதம் இலக்கை அடைவது என்பது தான் PLIயின் குறிக்கோளாக உள்ளது.
இந்த லட்சியப் பாதையில் பயணிக்கும் இந்தியப் பொருளாதாரம் வரும் 2022-2023 நிதியாண்டில் 8.7% சதவிகிதமாக வளர்ச்சியடையும் என உலக வங்கி தெரிவிக்கிறது.
அதே நேரம் சீனா,இந்தோனேசியா, பங்களாதேஷ் நாடுகளின் பொருளாதாரம் முறையே 5.1%,5.2%,6.4%ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
2022-23ல் 8.7%சதமாகவும் 23-24ல் 6.8% சதமாகவும் இருக்கும் நமது பொருளாதார வளர்ச்சி.
இது எப்படி சாத்தியமாகிறது என்றால் உட்கட்டமைப்பு வசதிகள், தனியார் முதலீடுகளை ஊக்குவித்து உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் என ஒருங்கிணைந்த PLI செயல்பாடுகளால்.
ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.97லட்சம் கோடிகள் PLI மூலம் வழங்கப்படவுள்ளன.ஆட்டோமொபைல், பேட்டரி, சோலார் பவர், டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ்,மருந்து தயாரிப்பு உள்ளிட்ட 13 துறைகளில் தொழில் வளர்ச்சி பெறும்.தற்சார்பு பாரதமாவதுடன் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.அடுத்த ஐந்தாண்டுகளில் PLI திட்டத்தின் மூலம் நாட்டு உறபத்தி $520 பில்லியனாக இருக்கப்போகிறதாம்.நாட்டின் GDPயில் 1.7%சதம் PLI மூலமாக இருக்கப்போகிறதாம் 2027ல்.புதிய தொழில்,உற்பத்தி உருவாகும் போது வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.பொருளாதாரம் மேம்படும்.
சீனாவை பின்னுக்குத் தள்ளி உற்பத்தி,தயாரிப்புத் துறையில் இந்தியா முதலிடம் வகிக்கும்,பொருளாதார வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் என உலக வங்கி கணிக்கிறது.
இது எல்லாவற்றிற்கும் production linked incentive திட்டம் தான் காரணி.