பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
ஐரோப்பாவை பரபரக்க வைத்தது ஒரு புரட்சிகரமான ஆடை அலங்கார பாணி!
மக்கள் பொதுவெளியில் ஆடையின்றித் திரிவதாகக் கூட குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கெல்லாம் காரணமான அந்தத் துணி தான் Dhaka muslin.
அன்றைய பெங்காலின் இன்றைய பங்களாதேஷ் நாட்டின் டாக்கா நகரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிக மிக மெல்லிய பருத்தித் துணி.
மேக்னா நதிக்கரையில் மட்டுமே வளரும் அரிய வகை பருத்தியை பதினாறு கட்ட செயல்முறையில் உருவாக்குவதே மஸ்லின் துணி.
அந்நாட்களின் பொக்கிஷம் டாக்கா மஸ்லின் என்றால் மிகையில்லை உலகளவில் அங்கீகாரம் பெற்றது.கிரேக்க தெய்வச் சிலைகளை அலங்கரிக்கவும், எண்ணற்ற மொகலாயப் பேரரசர்களின் அலங்காரத்திற்கும் பயன்பட்டது.
மஸ்லினில் பலவகை உண்டு.மிகச் சிறந்தது காற்றையே நெய்தாற்போல் அவ்வளவு மெல்லியதாக இருக்கும்.பெயரே “baft hawa” தான்.எந்தளவு மெல்லியது என்றால் 300 அடி நீளம் அல்லது 91 மீட்டர் நீளத் துணியை ஒரு சிறிய மோதிரத்தின் உள்ளே விட்டு இழுத்துவிடலாம் என்கிறது ஒரு குறிப்பு.ஒரு பொடி டப்பாவுக்குள்ளேயே 60அடி அல்லது 18 மீட்டர் நீளத் துணியை அடக்கலாம் என்கிறது இன்னோர் குறிப்பு.
புடவை, பைஜாமா உருவாக்கப் பெரிதும் பயன்பட்டது. பிரிட்டனின் மேட்டுக்குடி உடை கலாச்சாரத்தையே மாற்றியது டாக்கா மஸ்லின். கிட்டத்தட்ட நிர்வாணம் தான் என அப்போதைய பத்திரிகைகள் கிண்டலாக விமர்சித்தன.
ஆனாலும் மிகப் பிரபலமாக, விலை உயர்ந்ததாகவே இருந்தது.
ஃபிரெஞ்சு அரசி மேரி ஆன்டய்னட்,பேரரசி ஜோஸபீன் போனபார்ட்,ஜேன் ஆஸ்டின் போன்றோர் டாக்கா மஸ்லின் மீது பெரிய மோகம் கொண்டிருந்தனர்.

ஆனால் வந்த வேகத்திலேயே மறைந்தும் விட்டது இந்த பொக்கிஷம். ஒரு சில தனியாரிடம்,சில அருங்காட்சியகங்களில் தவிர உலகில் எங்குமே தென்படவில்லை. அந்தத் துணி நெசவு கூட யாரும் அறிந்திருக்கவில்லை. மஸ்லின் தயாரிக்கப் பயன்பட்ட விசேஷ பருத்தியான phuti Karpas அழிந்தேவிட்டது.
ஏன்,எப்படி நடந்தது?
உலகின் பெரிய Ganges deltaவின் மேக்னா நதிக்கரையில் வளர்ந்த அபூர்வ வகை ,வருடம் இருமுறை மட்டுமே பூக்கும் பருத்திச் செடி இது.

பதினாறு கட்டங்களாக அந்த இழையைப் பதப்படுத்தி டாக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்தத் துணி ஒரு சிறந்த கூட்டுறவு திட்டம் என்றால் மிகையில்லை. ஆம், இளைஞர் முதியோர்,ஆண் பெண் அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியில் உருவானது தான் இந்த அதிசயத்துணி.
மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் ஸ்ரீரங்கநாதர் மூலவர் அணிந்திருக்கும் முத்தங்கி டாக்கா மஸ்லினில் நெய்தது தான்.
VERY GOOD INFORMATION.THANKS FOR THE SAME. UMA BHARATHY