கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் (55). இவர் திங்கள் கிழமை காலை சுக்காலியூர் அடுத்த வெங்கக்கல்பட்டியில் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த வேன் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவம் விபத்தில் நடந்ததா, அல்லது கொலை செய்யும் நோக்கில் நடந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.