France நாட்டின் லீ மான்ஸ் அருகிலுள்ள ஆலோன்ஸ்சில் இயங்கிய மசூதியை ஆறு மாதங்கள் மூட உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு.
பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்துவது, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பது,France மீதும்,மேலை நாட்டினர்,கிருஸ்தவர்கள்,யூதர்கள் மீது வன்மத்தைத் தூண்டுவது,நாட்டிற்கே எதிராக காழ்ப்புணர்ச்சியை வளர்ப்பது என எல்லா தேசவிரோதச் செயல்களையும் இந்த மசூதியின் இமாம் மற்றும் நிர்வாகிகள் போதித்ததாகக் குற்றச்சாட்டு.
மசூதி நிர்வாகிகளின் வங்கிக் கணக்குகள்முடக்கப்பட்டுள்ளன.
மேலும் இவர்கள் ஷரியா சட்டத்தை ஃபிரான்ஸில் அமல்படுத்த வேண்டும் என்று தூண்டிவிடுவதாகவும் ,வெறுப்புணர்ச்சியையும்,பிரிவினைவாதத்தையும் ஊக்குவிப்பதாகவும் அதனால் அரசு மசூதியை இழுத்து மூட உத்தரவிட்டதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டர்மனின் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக மசூதியில் இயங்கும் குரான் பள்ளியும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.காரணம் ஆயுதம் ஏந்தி ஜிகாத்துக்கு போராடவேண்டும் என்று வன்முறையைத் தூண்டியாதல்.
இது மட்டுமல்ல,இன்னும் ஏழு மையங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி, Samuel Paty என்ற ஆசிரியரை நடுரோடில் தலையை வெட்டிக் கொன்றதையடுத்துநாடு முழுவதும் கொந்தளித்தது.
இஸ்லாமிய பயங்கரவாதம் ஒடுக்கப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்த ஃபிரான்ஸ் அரசு விரைந்து செயல்பட்டு இதுவரை இருந்த 2500 மசூதிகளில் 92 மசூதிகளை மூடிவிட்டது,36,000 வெளிநாட்டவரின் குடியுரிமையை ரத்து செய்தது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்து சட்டமே இயற்றிவிட்டது.மசூதிகள் அவை சார்ந்த இயக்கங்களின் செயல்பாடுகள், நிதி நிலை எல்லாவற்றிலும் தலையிட அரசு இயந்திரத்திற்கு முழு உரிமையும் சுதந்திரமும் அளித்ததே இந்த சட்டத்தின் சிறப்பம்சம்.
இது காலத்தின் கட்டாயம்.தீவிரவாத்திற்கு எதிரா ஒன்றுபடுவோம் என்று உலக நாடுகள் பேசிக்கொண்டே இருப்பதில் லாபமில்லை.ஃபிரான்ஸ் நாட்டைப் போல அதிரடியாக செயலில் இறங்கவேண்டும்.குறிப்பாக நமது நாட்டில் செயல்படும் பல்லாயிரம் மசூதிகளின் நகர்வுகளை அரசு கண்காணிக்கவேண்டும்.