ஆம்!இந்தோனேசியாவின் முன்னாள் அதிபரின் பகள் சுக்மவதி சுகர்னோபுத்ரி வைதீக முறைப்படி இஸ்லாமிலிருந்து ஹிந்துவாகிறார்.
பாலி தீவிலுள்ள சுகர்னோ சென்டரில் ஏற்பாடுகள் நடைபெறுவதாக CNN Indonesia தெரிவிக்கிறது.
புத்ரி’ என்ற சமஸ்கிருத பதமே சனாதனம் எவ்வளவு தூரம் பரவியிருந்தது என்பதற்குச் சான்று.
மேகவதி,ரச்மாவதி,சுக்மாவதி மூவரும் சகோதரிகள்.முதல் இருவரும் அரசியலில் மட்டுமே நாட்டம் கொள்ள, சுக்மாவதி கலையையும் அரசியலையும் தேர்ந்தெடுத்தார்.பள்ளிப் படிப்பை முடித்ததும் ஜகார்தாவில் நடனப் பள்ளியில் சேர்ந்து 1974ல் பட்டம் பெற்றார்.
பின் 1998ல் PNI soepeni கட்சியைத் துவங்கினார்.அரசியலில் தொடர் தோல்விக்குப் பின் விலகி 2011ல் Creeping Coup D’Tat Major Suharto புத்தகத்தை வெளியிட்டார்.மார்தெகா அரண்மனையில் சுகர்தோவின் 15 வருட வாழ்க்கையின் தொகுப்பு அது.
தனது தந்தை அதிபர் சுகர்னோ மேஜர் சுகர்தோவால் வீழ்த்தப்பட்ட வரலாறு.
ஓவியம்,இலக்கியம்,நடனம் எல்லாமே சுக்மாவதியின் விருப்பங்கள்.
இபு இந்தோனேசியா என்ற தலைப்பில் கவிதை எழுதி,இந்தோனேசிய ஃபேஷன் வீக்கில் வாசித்தார்.
கவிதையில்ஹிஜாப், நக்வாப்,ஆஸான் பற்றிய சர்ச்சையான கருத்துகள் இருந்ததால் ACTA,GNPF போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன.
2018ல் கணவர் முகமது ஹில்மி மறைவுக்குப்பின் அதிகமாக வெளிவராமலிருந்தார் இவர்.,26/10/2021 அன்று பாலியில் நடைபெற்ற சடங்கில் ஹிந்து மதத்தைத் தழுவினார் சுகர்னோபுத்ரி.