பாரத பிரதமர் மோடி தேசத்தை இணைய உலகின் அடுத்த படிநிலைக்கு உயர்த்தியிருகின்றார்.
தேசம், வல்லரசு நாடுகளுக்கு இணையான சாதனையினை செய்திருக்கின்றது.அதாவது அனைவருக்கும் சுகாதார அட்டை எனும் திட்டத்தை தொடங்கியிருக்கின்றது இந்திய தேச அரசு. இதன் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் உடல்நிலையினை இணையத்தில் பதிந்து கொள்ள முடியும்.இது பல நன்மைகளை செய்யும்.
ஒரு இந்தியன் இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் தன் சிகிச்சையினை தொடர முடியும்.ஆதார் அட்டை உள்ளிட்ட தரவுகளுடன் இவை பதியபடுவதால் இணையம் வழி எங்கும் எப்போதும் ஒருவரின் உடல்நிலை தரவுகளை பார்க்கமுடியும்.மருத்துவருக்கும் முடிவுகள் எடுக்க சிரமமபட வேண்டியதில்லை.கணிணி பட்டனை தட்டினால் நோயாளியின் உடல் நிலை ஜாதகமே தெரியும்.
இணைய உலகில் எல்லாம் சாத்தியம் எனினும் வல்லரசுகள் வளர்ந்தநாடுகள் இதை செய்திருக்கின்றன. ஆனால், அவர்களின் மக்கள் தொகை இந்தியாவின் ஒரு மாநில மக்கள் தொகையினை விட குறைவு.இந்தியா எனும் மிகபெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இதை செய்வது சாதாரணம் அல்ல.இதற்கான தொழில்நுட்பம், கருவிகள், மனிதவளம், இன்னும் பல விஷயங்கள் மலைப்பானவை.
மோடி அரசு அதை செய்து சாதித்திருக்கின்றது.இனி ஒவ்வொரு இந்தியனும் தன் உடல்நிலையினை தங்கள் ஆதார் அட்டை விவரங்களுடன் தனக்கென உள்ள இணைய கணக்கில் பதிந்து கொள்ளலாம். இது மிகபெரிய பலன் அளிக்கும்.எங்கிருந்தும் எப்போதும் பதிந்து கொண்டு, மருத்துவரின் ஆலோசனையும் முடிந்த அளவு இணையத்திலே பெறலாம்.தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்கு பயன்படுத்துவது நாட்டின் சேவைதுறையில் மிகபெரிய மாறுதலை கொடுக்கும். சேவை எளிதாகும். காகித பயன்பாடும் நேரமும் குறையும்.
மோடி அரசு தொழில் நுட்பத்தை “ஒரே இந்தியா ஒரே அட்டை” எனும் வகையில் பயன்படுத்துகின்றது.இப்பொழுது ஆதார் அட்டை , இந்த சுகாதார் அட்டை என சில அட்டைகள் இருக்கலாம்.இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்களில் எல்லா விவரமும் ஒரே அட்டையில் வரும்படி அடுத்தகட்ட மேம்பட்ட வடிவுக்கு அறிவிப்புகள் வரும். அது இன்னும் சேவைகளை எளிதாக்கும்.
வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையினை கொஞ்சம் பின் தங்கிவிடாமல் இந்தியாவுக்கு அறிமுகம் செய்திருக்கின்றார் மோடி.
தேசம் பெருமை கொள்ள வேண்டிய தருணமிது.