இந்திய பங்குசந்தையும் பொருளாதார ஸ்திரதன்மையும் மிகபெரிய அளவில் உயர்கின்றன. டிரம்பர் சீனாவுக்கு மிரட்டல் விடும்பொழுதே பல நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறின.
அந்நிறுவனங்களை இந்தியாவில் தொழில்தொடங்க அழைத்தார் மோடி. அவை மெல்ல மெல்ல வந்தன. சில அடுத்த அதிபருக்காக காத்திருந்தன.
இப்பொழுது பிடனும் வந்து சீனாவுடனான மோதலை தொடரும் நிலையில் இனி இந்தியாவில்தான் எதிர்காலம் என பன்னாட்டு கம்பெனிகள் வந்து குவிகின்றன.
இந்த முதலீடுகள்தான் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மோடி அரசின் பல சீர்திருத்தங்கள் முதலீட்டை எளிதாக்குகின்றன.
பொதுவாக பாஜக அரசின் செயல்பாடுகள் தெரிய சில ஆண்டுகளாகும்.
வாஜ்பாய் அறிவித்த தங்க நாற்கர திட்டம் முதலில் சொல்லபட்டபொழுது “இது தேவையா” என்றார்கள். இப்பொழுது அந்த சாலையின் பலனை அனுபவித்து கொண்டு நல்ல திட்டம் என அமைதிகாக்கின்றார்கள்.
அதை வாய்விட்டு சொல்லவும் மனமில்லை.
இன்னும் எத்தனையோ நல்ல திட்டங்களை வாஜ்பாய் கொடுத்துவிட்டு சென்றார். உதாரணமாக “அய்யயோ இஸ்ரேலுடன் கூட்டணியா? அரபு நாடுகள் என்ன சொல்லும் எண்ணெய் வராது..” என்றெல்லாம் மிரட்டினார்கள்.
இன்று இஸ்ரேலுடன் சவுதி அரேபியவே கைகுலுக்குகின்றது. இந்தியாவுக்கு இஸ்ரேலால் நன்மைகள் விளைகின்றன.
மோடி ஏன் நாடு நாடாய் சுற்றுகின்றார் என்றார்கள். இன்று அதன் பலன் தெரியவந்து உலகுக்கு இந்தியா முக்கியமான நாடு எனும் நிலையில் இருப்பதை கண்டு மவுனமாகி நிற்கின்றார்கள்.
பாஜக அரசின் திட்டங்கள் மிக தொலைநோக்கானவை. காங்கிரஸின் திட்டங்கள் கத்தரிக்காய் போல இரு மாதத்தில் பலன் கொடுத்து மூன்றாம் மாதம் செடி செத்துவிடும்.
திமுகவின் திட்டங்கள் பூக்கள் போன்றவை. ஒரே நாளோடு அவர்கள் திட்டம் சரி.
ஆனால் பாஜகவின் திட்டங்கள் ஆலமரம் . தென்னைமரம் போன்றவை அவை வேர்விட்டு வளர சில காலம் ஆகும். ஆனால் பலன்கள் பல்லாண்டுகள் தொடரும்.
இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக மாறி கொண்டிருக்கின்றது. இன்னும் சில ஆண்டுகளில் அதன் தாக்கம் தெரியும்.
இதெல்லாம் புரியாமல் மோடி இந்தியாவினை விற்கின்றார் என புலம்பி கொண்டிருப்பவனை பார்த்து பரிதாபபட மட்டும்தான் முடியும். வேண்டுமானால் கீழ்பாக்கத்துக்கோ இல்லை குணசீலத்துக்கோ அனுப்பலாம். அதை தவிர ஒன்றும் செய்ய முடியாது.
அங்கு இடமில்லை என்றால் அறிவாலயம் அனுப்பலாம் . ஆனால் அறிவாலயத்தில் சேர்க்கப்பட்டு குணமானவர்கள் என யாருமில்லை என்பதுதான் சோகம்.