நமது நாகரிகத்திற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவித்தது, இந்து பாரம்பரியத்தை உண்மையில் அழிப்பதன் மூலம். ஆங்கிலேயர்கள் செய்யத் துணியாததைச் செய்தார்.
வரலாறு என்று வரும்போது, இந்தியாவில் இந்துக்களின் கலாச்சார வீழ்ச்சிக்கு இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களை நாங்கள் பொதுவாகக் குற்றம் சாட்ட முனைகிறோம். எவ்வாறாயினும், வரலாற்றை பார்த்தால், உண்மையில் நம்முடைய சில பெரிய மனிதர்கள் தான் நம்மை முதுகில் குத்தி பின்னுக்குத் தள்ளி, நம் பாரம்பரியத்தை அழித்து, சிறந்த சீர்திருத்தவாதிகளாக தங்களை சித்தரித்துக் கொள்ள முடிந்தது. அப்படி நமது நாகரிகத்திற்குக் குறிப்பிடத்தக்கச் சேதத்தை ஏற்படுத்திய “சீர்திருத்தவாதி” ஒருவர் ராஜா ராம் மோகன் ராய்.
முதலில், சதி போன்ற சில “தீய” பழக்கங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியதில் அவர் மிக முக்கியமானவர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆனால் மிகப் பெரிய உண்மை என்னவென்றால், இது உண்மையில் மிகைப்படுத்தப்பட்ட விஷயம் . இந்துக்களை மோசமான வெளிச்சத்தில் காட்ட போலி கதைகளைப் புத்திசாலித்தனமாக விதைப்பதன் மூலமும், புள்ளிவிவரங்களாகத் திரித்துக் கூறுவதின் மூலமும் நிறைவேற்றப்பட்டது மேலும், அவர் ஒரு தீவிர கிறிஸ்துவர் (மதம் மாறியவர்), அவர் இந்துக்களை வெறுத்தார், சிலை வழிபாட்டை கேலி செய்தார், இந்தியாவை ஒரு கிறிஸ்துவ தேசமாக மாற்றும் திட்டங்களை வைத்திருந்தார் !!
இரண்டாவதாக, ராஜராம் செய்தது நமது நாகரிகத்திற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவித்தது, இந்து பாரம்பரியத்தை உண்மையில் அழிப்பதன் மூலம். ஆங்கிலேயர்கள் செய்யத் துணியாததைச் செய்தார். உண்மையில் பிரிட்டிஷ் காலனித்துவம் இந்தியாவிற்கு நடந்த மிகச்சிறந்த விஷயம் என்று ராஜாராம் புகழ்ந்தார்.
அது( ஆங்கிலக் கல்வி) இந்தியப் பாரம்பரியத்தை (குருகுலங்கள், சமஸ்கிருதம், முதலியன) வேரோடு பிடுங்கி, அவற்றை “நவீன” மெக்காலயன் அமைப்பை கொண்டு மாற்றியமைக்கும் என்றும் இதனால் பிரிட்டிஷ் எஜமானர்களுக்குச் சேவை செய்ய முடியும் புகழ்ந்து பேசினார். இப்படியாகத்தான் “சீர்திருத்தம்” என்ற போர்வையில், ராஜாராம் போலி கதைகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களைக் கொடுத்து இந்து மதத்தைத் தீயதாக சித்தரித்தது. இது மில்லியன் கணக்கான இந்தியர்களை அவர்களின் கலாச்சார வேர்களிலிருந்து பிடுங்க உதவியது.
அவரது “விசுவாசமான சேவைகளால்” பிரிட்டிஷார் மிகவும் ஈர்க்கப்பட்டதில் ஆச்சரியமில்லை, இதனால் அவரை ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாக அறிவித்து அவரை ஒரு பீடத்தில் அமர்த்தினர்.
இதுவே இன்றும் இடதுசாரி அறிவுஜீவிகளால் எழுதப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களில் நுழைக்கப்பட்ட ஒரு பிரச்சாரம்!
மற்றொரு தியாகச் செம்மல் “அன்னை தெரசா”
நமது பள்ளிப் பருவத்தில் அன்னை தெரசாவைப் பற்றி நமக்குப் போதிக்கப்பட்டதெல்லாம் அவர் ஒரு தியாகச் செம்மல், மனிதக் குலத்தைக் காக்க வந்த கலங்கரை விளக்கம் என்பது போல.
காரணம் அவர் செய்த சமூகத் தொண்டு, ஏழைகளிடம் காட்டிய கருணை எல்லாம். ஆனால் அவரைப் பற்றி நமது புத்தகங்கள் சொல்லாத சில பக்கங்களும் உண்டு. உதாரணமாக அவர் மேற்கொண்ட ஒரு போராட்டம் அதுவும் அரசியல் சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அவர் செய்த போராட்டம் தான் மிஷனரிகளின் இன்னொரு முகத்தைக் காட்டியது.
இந்திய அரசியல் அமைப்பின் படி ஹிந்து மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவருக்கென சலுகைகள் உண்டு. கோட்டா, இட ஒதுக்கீடு போன்றவை. ஆனால் மதம் மாறியவர்களுக்கு இந்தச் சலுகைகள் ரத்து செய்யப்படும். இதுதான் சட்டம். இந்தச் சட்டம் தான் மிஷனரிகளுக்கு இடைஞ்சலாக இருந்தது. ஏனெனில் மதம் மாறுவதால் இதுவரை கிடைத்துவந்த அத்தனை சலுகைகளையும் இழக்க வேண்டி வரும். அதற்கு மக்கள் தயாராக இல்லை. இதனால் தங்கள் திட்டப்படி பெருவாரியான மக்களைச் சுலபமாக மதம் மாற்ற இயலவில்லை மிஷனரிகளால். அந்தக் கோபத்தின் வெளிப்பாடே 90களில் பெருமளவு வெடித்தது.
சாட்சாத் அன்னை தெரசாவே களமிறங்கி நாடு தழுவிய போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கிறிஸ்தவராக மதம் மாறினாலும் சலுகைகளைத் தொடரவேண்டும் அதற்கான சட்டத் திருத்தம் வேண்டும் என இந்தப் போராட்டம் பல சர்ச்சைகளைக் கிளப்பியது.
மிஷனரிகளின் குறிப்பாக தெரசாவின் உள்நோக்கம் மக்களுக்குப் புரிந்தது. அதுவரை நடுநிலைவாதிகளாக இருந்த மக்கள் கூட மிஷனரிகளின் மதமாற்றும் நோக்கத்தைக் கண்கூடாகக் கண்டனர். தெரசாவின் நற்பெயருக்குப் பங்கம் வருமோ என்றஞ்சிய ஊடகங்கள் (இடது சாரிகளும்,வாடிகனும் தலையிட்டு) இச்செய்தியை இருட்டடிப்பு செய்தன.
விளைவு, பெரும்பான்மை இந்தியர்கள் அந்த விஷயத்தையே முற்றிலும் மறந்து, அவர்களது உள்நோக்கத்தை மறந்து தெரசாவையும் அவர் சார்ந்த மிஷனரிகளையும் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
தெரசா தான் இன்றும் பலருக்கு சமூக சேவைக்கு ரோல் மாடல்!