உலகத்தின் ஃபார்மசி என இந்தியாவிற்கு ஒரு பெயருண்டு.
உலக மதிப்பீட்டில் நான்காவது இடமும் உற்பத்தி அளவில் மூன்றாவது இடமும் வகிக்கிறது.
பல நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்கிறது இந்தியா.அமெரிக்கச் சந்தையில் 34% பங்கு வகிக்கிறது இந்திய மருந்துகள்.
சாதாரண தொற்று, டயாபடீஸ், வைடமின்குறைபாடு,ஆஸ்துமா,மலேரியா,புற்றுநோய், HIV ,மற்றும் இருதய நோய்க்கு உலகத் தரத்தில் மருந்து தயாரிக்கிறது இந்தியா.கிட்டத்தட்ட கோலோச்சிக் கொண்டிருந்த வேளையில் சீனா நுழைந்து பெருவாரியாக சந்தையைப் பிடித்துவிட்டது.
இதனால் நமது 135 கோடி மக்கள் நலன் பாதிப்படையும் மேலும் நமது ஏற்றுமதியும் நலிவடையும் அபாயம் உள்ளது.
கடந்த 2000 ஆண்டுக்கு முன் இந்தியாவில் தயாரான Active Pharmaceutical Ingredients APIs மூலப் பொருளுக்கு உலகளவில் வரவேற்பு இருந்தது.2000 ம் ஆண்டுக்குப் பின் மருந்து தயாரிப்பிலும் ஏற்றுமதியிலும் முன்னணியில் இருந்தபோதும்APIs, intermediates தயாரிப்புத்துறை சீனா வசம் போனது.
பிரமிக்கத் தக்க வகையில் உற்பத்தித் திறனைப் பெருக்கிய சீனா இந்தியா உட்பட உலகச் சந்தையில் மூலப் பொருட்களை மலிவாகவே விற்றது.சீன அரசும் தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டியில் கடன், காப்பீடு,நிலுவைத் தொகையைச் செலுத்த கால அவகாசம்,R&D ஊக்குவிப்பு,ஊக்கத் தொகை, மானிய விலையில் மின்சாரம் என அதிரடித் திட்டங்களை செயலாக்கியது.பல திட்டங்கள் WTO விதிகளை மீறியதும் கூட.
உதாரணமாக பென்சிலின் G.6 APA அமினோ பென்சிலானிக் அமிலம்.Ampicilin, Amoxicilin போன்ற 6 வகை antibiotics தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்.2005ல் இந்தியாவில் 4 கம்பெனிகள் பென்சிலின் G தயாரித்தன.
இன்று நாமே சீனாவிடம் தான் வாங்குகிறோம்.
2001ல் ஒரு கிலோ $22க்கு விற்கப்பட்ட 6- APA சீன வருகையால் இன்று கிலோ $9 க்கு விற்கிறது.நஷ்டமடைந்த இந்திய கம்பெனிகள் மூடப்பட்டன.நாம் உற்பத்தியை நிறுத்தியதும் சீனா கிலோ $35ஆக விலையை உயர்த்திவிட்டது.
இப்படியாக மூலப்பொருட்கள்,APIs சந்தையை சீனா ஆக்கிரமித்து விட்டது.நிலைமையை சாதகமாக்கி பொருட்களின் ஏற்றுமதி விலையை அசாத்தியமாக ஏற்றிவிட்டனர்.
மலேரியா மருந்து தயாரிக்க முக்கிய கெமிக்கலான DBA 47% உயர்வு,Erithromycin TIOC 44%,Pencilin G 97% விலை உயர்ந்தது.இதன் விளைவாக இந்தியர்களின் உடல்நலன், ஆரோக்கியம் பாதுகாப்பின்றி ஆகும்.ஒரு வேளை சீனா நமக்கு APIs தர மறுத்தால் நிலைமை மோசமாகும்.நமது NSA அஜித் தோவல் இதைச் சுட்டிக்காட்டி தேச பாதுகாப்பே கேள்விக்குறியாகும் என்கிறார்.ஏனென்றால் சீனா ஏற்கனவே அமெரிக்காவை மிரட்டியுள்ளது.
இந்திய அரசு ₹12,000 கோடி API உற்பத்தியை ஊக்குவிக்க ஒதுக்கியுள்ளது.அது மட்டும் போதாது.
தொழில்நுட்ப மேம்பாடு,R&D வசதிகள், சுற்றுச்சூழல்,மாசுக் கட்டுப்பாடு விதிகளை தளர்த்துதல்,உபகரணங்கள் மீதான இறக்குமதி வரியை குறைப்பது, குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்தல் எனப் பலவகையிலும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியம், APIs,intermediates தேவைப்படுவோர் குறைந்தபட்சம் 50% இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்தே வாங்கவேண்டும் என்ற நிபந்தனை.இப்படி எல்லா வகையிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தேசநலனுக்கு உகந்தது மேலும் இந்தச் சிக்கலிலிருந்தும் மீளலாம்.
மொழிபெயர்ப்பு ஆசிரியர்: ஸ்ரீப்ரியா இராம்குமார்