இந்தவாரம் காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த உள்ளனர். திரு.முகுல் வாஸ்னிக் ,திரு.மல்லிகார்ஜுன கார்கே, திரு.சச்சின் பைலட் , “23 குரூப் ” தலைவர்களில் ஒருவரான திரு. சஷி தரூர் உட்பட பல தலைவர்கள் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேச உள்ளனர். திரு . ராகுல் காந்தி டில்லியில் பத்திரிகையாளர்களை சந்திப்பார் காரணம் மத்திய அரசு அறிவித்துள்ள சொத்து பணமாக்குதல் ( Asset Monetisation ) முடிவு.
கடந்தவாரம் மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு. நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசு தன்னுடைய “பிரவுன் பீல்ட்” சொத்துக்களை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் 6 லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக விமான நிலையங்கள் , தேசிய நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் , எண்ணெய் நிறுவனங்கள் , மின்சார நிறுவனங்கள் , சுரங்கங்கள்,விளையாட்டு மைதானங்கள் ,விருந்தோம்பல் துறையை சார்ந்த சொத்துக்கள் ஆகியவற்றின் பயன்படுத்த படாத ” பிரவுன் பீல்ட் ” சொத்துக்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது.
இதிலிருந்து பெறப்படும் வருமானங்கள் அரசு ஏற்கனேவே பல லட்சம் கோடியில் அறிவித்துள்ள நாட்டின் உள்கட்டமைப்பு வசதிக்கான திட்டங்களுக்கு பயன்படுத்த படும்.
இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு எதுவாக இருக்கும் என்று அறிவித்தது மத்திய அரசு..
“கிரீன் பீல்ட்”, “பிரவுன் பீல்ட்” என்று சொத்துக்களை இருவகை படுத்தலாம். கிரீன் பீல்ட் என்பது காலி நிலம் போன்றவை. பிரவுன் பீல்ட் என்றால் ஏற்கனவே இருக்கிற கட்டிடங்கள் , பயன் படுத்தப்படாத அல்லது குறைவாகவே பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள் ,தேவைக்கு அதிகமாக இருக்கும் அலுவலக இடங்கள் இது போன்றவை.
எந்தெந்த துறையிலிருந்து எவ்வளவு சதவிகிதம் சொத்துக்கள் மூலம் இந்த வருவாய் ஈட்டப்படும் என்பதையும் அரசு சொல்லி இருக்கின்றது.
அரசின் இந்த முடிவை தான் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து இருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கும் காங்கிரஸ் நம் நாட்டில் அரசுகள் இது போன்ற முடிவுகளை இதுவரை எடுத்ததில்லையா என்று சொல்ல வேண்டும்.
முன்பு மும்பை புனே எக்ஸ்பிரஸ் சாலையின் பிரவுன் பீல்ட் சொத்துக்கள் மூலம் 8 ,௦௦௦ கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது .மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைமையிலான அரசு மும்பை புனே சாலையை விற்றுவிட்டது என்றாகுமா?
2008 ஆம் ஆண்டு தில்லி ரயில்வே நிலையத்தில் இது போன்ற நடவடிக்கைக்கு ரெஃஉஎச்ட் fஒர் ப்ரொபொசல் ( ற்FP ) பெறப்பட்டபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் அரசு நாட்டை விற்க பார்க்கிறது என்று எவரும் சொல்லவில்லை.
இந்தியாவில் மட்டும் அல்ல பல வளர்ந்த நாடுகளிலும் இது போன்ற முடிவுகளை அந்த அரசுகள் எடுத்துள்ளது. உதாரணத்திற்கு ஆஸ்திரேலியா.. ஆச்செட் றெcய்cலிங் ஈனிடிஅடிவெ (ஆறீ) என்ற 5 ஆண்டு கால திட்டத்தின் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றது. அதை புதிய உள்கட்டமைப்பு வசதிக்காக பயன் படுத்தியது.
அமெரிக்காவில் கூட இந்தியானா மாகாணத்தில் சுங்க சாவடி உரிமையை Macquarie group என்ற நிறுவனம் எடுத்ததில் மூலம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்தது. தற்போது அதன் மூலம் அந்த மாகாணத்தில் சாலைகள் தரம் உயர்த்த பயன்படுத்த பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த திட்டம் குறித்து தற்போது அறிவித்து இருந்தாலும் ஏற்கெனெவே தேசிய நெடுஞ்சாலை துறையில் இது போன்ற திட்டம் தனியார் பங்களிப்போடு செயல்படுத்த பட்டு வருகிறது.
இதில் கவனிக்க வேண்டியது அரசின் இந்த பிரவுன் பீல்ட் சொத்துக்கள் குத்தகைக்கு மட்டுமே விடப்பட்டுள்ளது . மத்திய அரசு இதை யாருக்கும் விற்கப்போவதில்லை.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் பெறப்படும் வருமானங்கள் மற்ற புதிய உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க துணையாக இருக்கும்.