3 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற தென் கொரிய வீரர் ஓ ஜின்-ஹியெக்கை வீழ்த்தி, காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் அட்டானு தாஸ்.
ஷுட் அவுட் வரை சென்று 6-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
ஆண்கள் பாக்சிங் +91 கிலோ பிரிவு: இந்தியாவின் சதிஷ் குமார் வெற்றி!
ஜமைக்காவின் ரிக்கார்டோவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி.
ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, Pool A பிரிவில் காலிறுதி சுற்றில் இந்திய அணி.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 13ம் நிலை வீராங்கனை டென்மார்க்கின் மியா பிலிசெல்ட்டை 2-0 என வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் கொரியாவின் 12ம் நிலை வீராங்கனை அல்லது ஜப்பானின் 4ம் நிலை வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்