உலகெல்லாம் கொரோனா ஆட்டிவைக்கும் பொழுது ஒரு சில நாடுகளில் அதன் தாக்கம் மிக மிக குறைவு. இவ்வளவுக்கும் அங்கு அதிக கெடுபிடிகள் இல்லை. அரசுகளே முதலில் நிலையாக இல்லை.
ஆனாலும் அந்நாடுகளில் கொரோனா கட்டுபாட்டில் இருக்க அல்லது வேகமாக பரவாமல் இருக்க என்ன காரணம் என ஆய்வுகள் மவுனமாக நடக்கின்றன. அதில் ஒரு சில முடிவுகள் ரகசியமாக தெரிகின்றன.
ஆம் இப்போது கொரோனா கட்டுபாட்டில் இருக்கும் அல்லது பரவ தயங்கும் நாடுகளில் ஒன்று மியன்மார் எனும் பர்மா.
அங்கு பெரும் போராட்டம் கிளர்ச்சி மக்கள் திரள் என பெரும் குழப்பம் நிலவும் பொழுது. அரசு என்பது இயங்காமல் எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரியும் பொழுதும் கொரோனா பெரிதும் பரவவில்லை.
இதன் முக்கிய காரணம் பர்மியர்களின் முக்கிய விஷயமான வெற்றிலை அல்லது நம் பாஷையில் தாம்பூலம் தரித்தல் என்கின்றது ஆய்வு.
வெற்றிலை மிக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதை என்றோ கண்டவர்கள் நாம் . ஆனால் நாகரீகம் பற்களின் வெண்மை என சொல்லி நம்மை நாமே கெடுத்தும் கொண்டோம்.
வெற்றிலை மெல்லுவது தாம்பூலம் தரித்தல் என தமிழரின் உணவு பழக்கமாய் இருந்தது. தமிழர் ஆண்ட பர்மாவிலும் அது வழக்குக்கு வந்தது. இப்பொழுது தமிழர் அதை விட்டுவிட பர்மியர்கள் தொடர்கின்றார்கள்.
அக்காலத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு கிராம்பு ஏலம் மிளகு கலந்து மெல்வார்களாம். வெள்ளைய வந்து கிராம்பு ஏலம் மிளகு எல்லாம் கடத்தி நமக்கு புகையிலையினை மெல்ல சொல்லி கொல்ல தொடங்கினான். அன்றிலிருந்து அப்பழக்கம் விடுபட்டு போயிற்று
உடல் நலம் காக்கும் அந்த அற்புத வழக்கம். போதை வழக்கமாக்கம் என பழிக்கபட்டு ஒழிக்கபட்டது.
புகையிலை கலந்து வெற்றிலை மெல்ல வைக்கும் விஷகாரியத்தை வெள்ளையன் தொடங்கி வைத்தான். 1980களின் பிற்கால கிழவிகள் கூட புகையிலைதான் பழகினார்கள்.
வெற்றிலை தாம்பூலத்தில் மிளகு சேர்ப்பது 1800களிலே விடைபெற்றது
இன்றும் கிராமங்களில் பாம்புகடிக்கு வெற்றிலையும் மிளகும் கடித்து விழுங்க சொல்லுதல் வழக்கம். ஆம் விஷத்தை முறிக்குமாம். “வெற்றிலையும் 10 மிளமும் இருந்தால் பகைவன் வீட்டுக்கும் உண்ண செல்லலாம்” என்பார்கள்.
வெற்றிலை மிளகு கொரோனாவினை விரட்டும் என சொல்லவில்லை அது நிரூபிக்கபடவில்லை ஆனால் வெற்றிலை பழக்கம் உள்ள இடங்களில் கொரோனா குறைவு.
கொரோனா என்றல்ல பொதுவாகவே தாம்பூலம் தரித்தல் எனும் வெற்றிலை பழக்கம் நல்லது. வெற்றிலை நலம் கொடுக்கும் . பாக்கு துவர்ப்பாய் உடலுக்கு சக்தி கொடுக்கும். சுண்ணாம்பு எலும்புக்கு பலம். இதில் மிளமும் சேர்ந்தால் மிக்க நல்லது.
மிளகில்லாத தாம்பூலம் பலனற்றது.
இதை பழகிகொள்ளுதல் ஒன்றும் தவறல்ல. நாகரீகம் என ஒதுக்கிவிட முடியாத ஆரோக்கியபழக்கம் இது. ஆனால் முதல் இருமுறை துப்பி ஊரெல்லாம் ஒருமாதிரி ஆக்குவதை தடுக்கத்தான் பழக வேண்டும்.
இப்பொழுதெல்லாம் வெற்றிலை மெல்பவர்கள் அரிது. ஒரு பெட்டிகடையிலும் இப்பொழுது வெற்றிலை இல்லை. ஏதோ ஆலய வழிபாடு. திருமண தாம்பூல தட்டு என காட்சியளிக்கின்றது. வெ
ற்றிலை பாக்கு கடைகளெல்லாம் டீ. பெப்சி. சிகரெட் என நிரம்பி வழிவது ஆரோக்கிய கேட்டின் முதல்படி.
நம்மை நாமே கெடுக்கின்றோம்.
முன்னோர் சொன்ன வழி தவறி நாசமாகி சாகின்றோம்.
ஒவ்வொரு நோயும் நம் முன்னோரின் பழகக் வழக்கம் உணவினை நினைவுபடுத்தி செல்வது போல கொரோனா வெற்றிலை வழக்கம். மிளகு ரசம் என சொல்லிகொள்கின்றது. கூடவே சுத்தம் மற்றும் உணவு. முன்பு இந்திய ஆலயங்களிலும் வீடுகளிலும் கடைபிடிக்கபட்ட. அதாவது இந்துமதம் சொன்ன சுத்தமும் உணவும்
எளிதில் அடங்கிவிடும் என எதிர்பார்க்கபட்ட கொரோனா அடங்கவில்லை. விஸ்வரூபமெடுத்து உலகை மிரட்டுகின்றது. மருத்துவர்களையும் அவர்களை தாண்டி இறைவனையும் நோக்கி வணங்கிகொண்டிருக்கின்றது உலகம்..
நம் முன்னோர்களின் பழக்க வழக்கம் மற்றும் ஆரோக்கிய உணவினை தேடுங்கள். அதிலே 90% நோய்தடுப்பு முன் எச்சரிக்கை இருக்கின்றது.
மிக சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்துக்களின் ஆலயங்களிலும் அவர்கள் சம்பிரதாயங்களிலும் எதெல்லாம் உணவு. காணிக்கை. படையல் . சமர்ப்பணம் என வைக்கபடுமோ அதெல்லாமோ நோய்தடுக்கும் விஷயங்கள்.
வெற்றிலை அதில் முதலிடத்தில் இருக்கின்றது. எல்லா கடவுள் முன்பும் வெற்றிலை வைக்கபடுவதும். வெற்றிலை மாலை சாற்றபடுவதும் பிரசாதமாக வெற்றிலை தரபடுவதும் அதனாலே..
ஒவ்வொரு நோயும் மறைந்துவிட்ட நம் பழங்கால நல்ல உணவு பழக்கங்களை. நல்ல உணவினை. நல்ல மூலிகை தரிப்பினை நினைவுபடுத்திகொண்டேதான் இருக்கும்.
அப்படி இந்த கொரோனா வெற்றிலை மற்றும் வேப்பிலையின் மகத்துவத்தை சொல்லவந்தது அன்றி வேறல்ல.
முடிந்தால் முயற்சியுங்கள். தாம்பூலம் தரித்தல் எனும் அந்த வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மிளகு கிராம்பு ஏலம் என கலவையினை மெல்லும் வழக்கம் மேம்படட்டும்.
நிச்சயம் அது கொரோனாவினை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் என்கின்றது ஆய்வு.
ஆம் அதை மெல்லும் பொழுது வாயில் ஊறும் சிகப்பு நிற திரவமே கொரோனாவுக்கான மருந்து என்கின்றது மிக சில ஆய்வுகள். அது மிக விரைவில் சரியானதாக இருந்தால் உலகுக்கே நல்லது
எப்படியாயினு தாம்பூலம் தரித்தல் நல்லது. இந்த பீடா எனும் போதை வஸ்துவுக்கும் முறையான தாம்பூலத்துக்கும் வித்தியாசம் உண்டு. பீடா என்பது தவிர்க்கபட வேண்டியது
அதை தெரிந்து முயற்சி செய்யுங்கள். மிளகும் வெற்றிலையும் வேப்பிலையுமே இப்போதைக்கு பெருமருந்து. வருமுன் காக்கும் அவசியமான மருந்து.