சென்ற நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர்களுக்கு இது தெரியும்.
தெருவுக்குக் குறைந்தது இரண்டு மூன்று குழந்தைகள் இளம்பிள்ளை வாதத்தால் (polio) பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் . பள்ளிக்குச் செல்ல முடியாது, பணிக்குச் செல்ல முடியாது, இயல்பான வாழ்க்கை வாழ முடியாது.
பெற்றோர்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு இந்தக் குழந்தை இறந்து போய் விடலாம் என்று கூட எண்ணியதுண்டு. இதில் இருந்து தப்பிய குழந்தைகளை எந்த வயதிலும் அம்மை நோய்கள் பிடித்துக் கொள்ளத் தயாராக இருந்தன. காய்ச்சல் கண்டு வாரக்கணக்கில் குணமாகாமல் இறுதி மூச்சை ஒரேயடியாக விட்டு விடுவார்கள். 16 வருடங்கள் வளர்த்த குழந்தையை இறுதியில் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் கொண்டு போய் புதைப்பது எல்லாம் கொடுமை.
இப்படிப்பட்ட நோய்களை நம் நாட்டை விட்டே முற்றொழித்து (eradicate) பெற்றோர்களை நிம்மதியாக மூச்சு விடச் செய்த பெருமை தடுப்பூசிகளையே சாரும்.
வைரஸ்கள் மென்மேலும் பரவுவதற்கு, வளர்வதற்குப் போதுமான host-கள் இல்லாமல் செய்து herd immunity (குழு நோய் எதிர்ப்புத் திறன்) யை உண்டாக்குகின்றன இந்த vaccine-கள். கல்லை எடுக்கும் வரை நாய்கள் குரைக்கும், பயமுறுத்தும், கடிக்கவரும். கல்லை எடுத்து எதிர்க்க ஆரம்பித்தால் வாலைச் சுருட்டிக் கொள்ளும். அப்படித்தான், ‘அதிகமதிகம் பேர் நம்மை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள், இனி நமக்கு வேலை இல்லை, நான் ஒரு வேண்டா விருந்தாளி ‘ என்று வைரஸ்கள் படிப்படியாகப் பின்வாங்கிச் செயலிழந்து விடும்.ஓகே.
Conspiracy தியரிஸ்டுகள், anti vaccine movement-கள் எடுத்து வைக்கும் வாதம் ‘உடலில் தான் ஏற்கனவே இயற்கையான எதிர்ப்புச் சக்தி இருக்கிறதே, எதற்கு வெளியில் இருந்து ஒரு செயற்கையான எதிர்ப்பு சக்தி’ என்பது. (இவர்கள் சொல்லும் autism போன்ற பக்க விளைவுக்கான சாத்தியங்களை இப்போதைக்கு விட்டு விடுவோம்). மேலும் இவர்கள் சொல்வது vaccination என்பது literal ஆக நோய்க் கிருமிகளை விரும்பி உடலுக்குள் செலுத்திக் கொள்வது. (சும்மா போகும் ஓணானை வேட்டிக்குள் எடுத்து விட்டுக் கொள்வது போல).
‘நீயெல்லாம் anti-science, பைத்தியம், குழுவோடு ஒத்துப் போகாதவன்’ என்றெல்லாம் இவர்களைத் திட்டி விட்டுக் கடந்து விடுவது எளிது தான். என்னதான் நம்முடைய ஓட்டு இறுதியில் ‘vaccination’ போட்டுக் கொள்வதற்கே என்ற போதிலும் இவர்களின் இந்த பயம் உண்மையானதா என்று கொஞ்சம் ஆராய வேண்டி இருக்கிறது.
Yes , உடலுக்கு இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது தான் . மனித உடல் படைக்கப்படும் முன்பே கிருமிகள் படைக்கப் பட்டு விட்டன. எனவே இயற்கை ஒரு தனி specialized ‘immune system’ என்ற பெரிய department-டை உடலில் ஏற்படுத்தி வைத்துள்ளது. சொல்லப் போனால் இவை நம் ரத்தத்துடனும், எலும்புடனும் (literally) ஒன்றிப் போன வெள்ளை அணுக்கள் என்னும் சாமுராய் செல்கள். நம் ரத்தத்தில் பெரும்பாலானவை இந்த ராணுவ அணுக்கள் தான். உடலின் கணிசமான energy budget இவைகளுக்குப் போகிறது. மனித உடலின் selfishness, will to survival வியக்க வைக்கிறது.
‘பகைவனுக்கு அருள்வாய், நன்னெஞ்சே’, ‘எதிரியையும் நேசி’ போன்ற தர்ம போதனைகள் இந்த செல்களுக்குத் தெரியாது. பகைவன் உள் நுழைந்தால் அவனை உண்டு இல்லை என்று ஒருவழி செய்துவிட்டு இறுதியில் தாமே தற்கொலை செய்து கொள்ளும் வரை இவை ஓயா.
பகிர்ந்து கொண்டு பல்லுயிர் ஓம்பும் கம்யூனிசம் எல்லாம் மனித உடலுக்குப் பொருந்தாது. வெள்ளை அணுக்கள் என்பவை ஆக்ரோஷமான கடமை தவறாத கொடுங்கோலன் ஒருவனின் (மூளை?) படை வீரர்கள். ரத்தத்துடன் தாமும் கலந்து ஓடித் தொடர்ந்து, ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்ற slogan-ஐத் தாங்கி ராணுவ உடை தரித்துத் தொடர்ந்த விழிப்புணர்வில் இருப்பவை இவை .
மேலும், தொடர்ந்து தம்மைத் தகவமைத்துக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் தயாராக இருப்பவை. ‘நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நம் எதிரி தான் தீர்மானிக்கிறான்’ என்ற பொன்மொழி வெள்ளை அணுக்களுக்கு மிகவும் பொருந்தும். எப்போது கத்தியெடுக்க வேண்டும், எப்போது துப்பாக்கி, எப்போது எதிரியைக் கடித்தே கொல்ல வேண்டும் என்றெல்லாம் கற்று வைத்திருப்பவை இவை. ஒருவிதத்தில் இவற்றை மூளையுடன் (next to neurons) ஒப்பிடலாம். மற்ற செல்கள் எல்லாம் வெறுமனே லட்சக் கணக்கான ஆண்டுகளாக தங்களுக்கு இட்ட பணியை மட்டும் செய்து வர, வெள்ளை அணுக்கள் இந்த ‘கற்றுக் கொண்டு முன்னேறும்’ திறனை வளர்த்துக் கொண்டுள்ளது நமக்கெல்லாம் ஒரு வரப் பிரசாதம் தான். ஓகே.
நம் உடலில் நுழையும் பெரும்பாலான எதிரிகள் அப்பாவிகள், முட்டாள்கள். சத்தம் போட்டு, போர் முரசு கொட்டி, ‘நான் உன் எதிரி’ என்று யுத்த தர்மத்துடன் அறிவிப்பவை. இப்போது வெள்ளை அணுக்களின் வேலை சுலபம். எங்கே போர் முரசு கொட்டுகிறதோ அங்கே சென்று எதிரியை off செய்து விட வேண்டும் அவ்வளவே. பெரும்பாலான நேரங்களில் இவை எதிரிகளைச் சூழ்ந்து கொண்டு கடித்துத் தின்று விழுங்கி ஏப்பம் விட்டு விடுகின்றன.
ராமாயணத்தில் சில அரக்கர்கள் வருவார்களே, ‘எதுக்கு சும்மா சண்டையெல்லாம் போட்டுக்கொண்டு’ – எதிரியை வெறுமனே விழுங்கி விடு, ஜீரணித்து விடு’ என்னும் strategy.
எல்லாம் முடிந்தது, சுபம் போட்டு விடுவோமா, எதிரிகள் அழிந்தனர், வெற்றி விழா கொண்டாடி விடுவோமா என்றால் இல்லை. போர் என்றால் பெரும்பாலும் எதிரிகளைச் சமாளிப்பதை விட துரோகிகளைச் சமாளிப்பது தானே?வெள்ளை அணுக்களுக்கு இந்த antigen (எதிரிகளின் pattern) களை அடையாளம் கண்டு கொள்வதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. ‘நான் உங்க ஆளுதாம்ப்பா, பாரு உன்னை மாதிரியே சட்டை போட்டிருக்கேன், (black sheep!) உள்ளே விடு’ என்று ஏமாற்றி சில நுண்ணுயிர்கள் உள்ளே புகுந்து விடுகின்றன. அடையாளம் கண்டுகொண்டு விட்டாலும் எதிரிகளைத் தாக்கி அழிப்பதிலும் வெள்ளை அணுக்களுக்குச் சில சிக்கல்கள் உள்ளன.
கொள்ளைக் காரர்கள் உடல் முழுவதும் எண்ணெய் பூசிக்கொண்டு திருடப் போவார்கள். பிடிபட்டால் நழுவி விடலாமே! பல்வேறு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் இப்படிப் பிடிபடாமல் வழுக்கிக் கொண்டு நழுவி ஓடி விடுகின்றன. பிடிபட்டால் தானே தாக்க முடியும், அழிக்க முடியும், விழுங்க முடியும்.இப்போது சில ஸ்பெஷலிஸ்ட் செல்கள் தேவைப்படுகின்றன. ஒற்றர்கள் என்று சொல்லலாம். எதிரிகளின் கோட்டைக்குச் சென்று உள் நுழைந்து, அவர்களின் complex pattern களை ஆராய்ந்து வர வேண்டும். அவர்களின் பூட்டுகளை (lock) படியெடுத்து வர வேண்டும். பூட்டுகளின் இந்த pattern கிடைக்கப் பெற்றதும் சாவிகளைத் தயாரிப்பது மிக எளிது.
மனித உடல் ‘antibody’ எனப்படும் இந்த ப்ரோடீன் சாவிகளை அதிகம் அதிகம் உற்பத்தி செய்கிறது. இந்த சாவிகள் ரத்த ஓட்டத்தில் release செய்யப்பட்டு ஓடிவரும் நுண்ணியிரிகள் மீது சென்று ஒட்டிக்கொண்டு அவற்றை open செய்து நழுவி ஓடி விடாமல் நங்கூரம் இட்டுப் பிடித்து நிறுத்தி.. கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நகர முடியாமல் வில்லன், ‘இன்று போய் நாளை வா’ என்ற கருணை எல்லாம் இல்லை, ஒரே போடு!!
ஒரு புதிய உயிரி உள்ளே வரும்போது உடலுக்கு இந்த anti-body கள் தான் பிரச்சினையே! அந்த குறிப்பிட்ட எதிரிக்கான சாவி உடலில் ஏற்கனவே இருப்பதில்லை. இதிலும் உள்ளே வருவது வைரஸ் என்றால் இன்னும் மோசம். அதைக் கண்டுபிடிப்பதே கடினம். நண்பன் போல் நுழையும் எதிரி! அதைக் கண்டுபிடித்து, அதன் pattern-களைப் படியெடுத்து, தேவையான சாவிகளை (anti body) களை உருவாக்கி, duplicate சாவிகளை கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து, ஒவ்வோர் எதிரியையும் சங்கிலி போட்டுக் கட்டி நிறுத்தி, இதையெல்லாம் செய்வதற்கு நீண்ட நேரம் பிடிக்கிறது. இந்தக் களேபரத்தில் ஏராளமான ஆரோக்கியமான செல்களும் அழிந்து போகின்றன. co morbidities ஏதேனும் இருந்தால் ஆள் காலி!!
Vaccine எனப்படும் தடுப்பூசி செய்வதெல்லாம் இந்தச் சாவி தயாரிப்பிற்கான ‘ஒத்திகையை’ உடலை முதலிலேயே செய்யச் சொல்வது தான். ஒரு rehearsal , ஒரு dummy war! போர்ப் பயிற்சி! செயல் திறன் குறைந்த வைரஸையோ, வைரஸின் genetic material ஐயோ, வைரஸின் ஒரு பாகத்தையோ, அல்லது வைரஸ் போன்ற ஒரு dummy carrier வைரஸையோ தடுப்பூசி உள்ளே அனுப்புகிறது.
நம் சாமுராய் வீரர்கள் இதை dummy என்றெல்லாம் பார்ப்பதில்லை. உடனே விழித்து எழுந்து ஆக்ரோஷமாக இந்த key producing factory யை முடுக்கி விட்டு ஓவர் டைம் பார்த்துத் தேவையான anti body களைத் தயாரிக்கின்றன. (நுண்ணுயிர்களை இன்னும் சுலபமாக அழிக்க உடலின் வெப்பநிலை உயர்கிறது!) இந்த process சின் அழகு என்னவென்றால் இந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் செல்கள் ‘ஞாபகம்’ வைத்துக் கொள்கின்றன. இப்போது trial and error ஆகச் செய்த சமையலுக்கு விரிவாக ஒரு step-by-step ரெசிபி எழுதி வைத்துக் கொள்கின்றன. நிஜ வைரஸ் உள்ளே வரும் போது ‘இது அதுல்ல, I think I know how to handle this’ என்று இந்த ரெசிபியை மட்டும் follow செய்து தாமதமின்றி விரைவாக, மிக விரைவாக நுண்ணுயிர்களைக் கொன்றழித்து நம்மைக் காப்பாற்றி விடுகின்றன.
இருவிதமான performance களை நினைத்துப் பாருங்கள். ஒன்று நடிகர்கள் அப்போது on-the-spot டில் நடிக்கின்ற co-ordination இல்லாத குழப்பமான ஒரு மேடை நாடகம். அது எப்படி இருக்கும்? கண்றாவியாகத் தான் இருக்கும். இரண்டாவது ஏற்கனவே சிலமுறை ஒத்திகை பார்க்கப்பட்ட, co-ordinate செய்யப்பட்ட, இன்னின்ன நேரத்தில் இது இது செய்யவேண்டும், இன்னின்ன பேருக்கு இன்னின்ன role, என்று orchestrate செய்யப்பட்ட ஒரு மேடை நாடகம். இரண்டாவது தான் நமக்கெல்லாம் பிடிக்கும். இரண்டாவது தான் வெற்றி பெரும்!
எனவே, உங்கள் உடல்களுக்கு தடுப்பூசி என்ற ஒத்திகையைத் தைரியமாகக் கொடுங்கள். நீண்ட காலம் நலமாக வாழுங்கள். best of luck!! as always , ‘வதந்திகளை நம்பாதீர்கள்’.தடுப்பூசி என்பது of course தேவலோக மருந்து அல்ல. ஆனால் அதன் பக்க விளைவால் இறப்பவர்கள் விகிதம் மிக மிகக் குறைவு. நோயால் இறப்பவர்களைக் காட்டிலும் மிக மிக மிகக் குறைவு. தடுப்பூசியின் pro’s அதன் cons ஐ விட மிக மிக அதிகம். தடுப்பூசி என்பது விஷமும் அல்ல. பின்னாளில் நம் உடம்பு செய்யப்போகும் செயல்முறைகளை இது கொஞ்சம் சீக்கிரமாகவே தூண்டி விட்டு நம்மைத் தயார்படுத்துகிறது. அதுவும் நிஜ வைரஸின் நீர்த்துப் போன input வீரியத்தில் தான்.
To make it short: Go for vaccines!!!