“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து” என்ற வள்ளுவனின் வரியினை சொல்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீத்தாராமன்
இந்த பட்ஜெட் கொரோனா எனும் கொடுங்காலத்தில் நாட்டில் எவ்வளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அதை தெளிவாக சொல்கின்றது
விவசாயிகள், தொழில் முனைவோர், வியாபாரிகள், கடல் தொழில் இன்னும் பொதுமக்கள் என எல்லா தரப்பும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் தயாரிக்கபட்டுள்ளது, சுகாதாரம் உள்ளிட்ட 6 தூண்களை உள்ளடக்கியது
தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கபட்டிருப்பதால் விலை சற்று குறைய வாய்ப்பு உண்டு குறைந்தபட்சம் விலை மேற்கொண்டு ஏறாது
வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான் இரட்டை வரிமுறை ரத்து செய்யபடுவதால் பல சிக்கல்கள் தீரும்
சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை தீர்த்துவைக்க புதிய குழு அமைக்கப்படும் என்பது நல்ல அறிவிப்பு
74 வயதை கடந்தவர்களுக்கு வருமான வரி இல்லை, வருமானவரி கட்ட அவகாசம் நீட்டிக்கபடும் என்பதெல்லாம் நல்ல அறிவிப்புக்கள்
100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும், 15000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்பதும் *சாலையோர வியாபாரிகளுக்கும் சமூக பாதுகாப்பு திட்டம் கொண்டுவரபடும் என்பதும் நல்ல விஷயங்கள்
எதிர்கால மின்சார திட்டங்கள் பற்றி பல விஷயங்களை கோடிட்டு காட்டியிருகின்றார் நிதி அமைச்சர், இது மின் தட்டுபாடு இல்லா இந்தியாவினை உருவாக்கும்
குழாய் மூலம் எரிவாயு இன்னும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தபடும் என்கின்றது பட்ஜெட், இந்தியா வேகமாக மாறிகொண்டிருப்பதன் சாட்சி இது
உள்கட்டமைப்பினை மிக மேம்படுத்தும் வகையில் திட்டங்களுக்கு முன்னுரிமை இதில் தமிழ்நாட்டுக்கு பல திட்டங்கள் உண்டு
ரயில்வே பட்ஜெட்டும் இப்பொழுது மத்திய பட்ஜெட்டுடன் சேந்து கொள்வதால் புதிய ரயில்திட்டங்கள் அறிவிக்கபட்டிருக்கின்றன இதில் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம், கன்னியாகுமரி மும்பை இணைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் அறிவிக்கபட்டிருக்கின்றன
மொத்ததில் கொரோனா கால முடக்கத்தின் பாதிப்பினை தாண்டி கொரோனாவுக்கான மருந்து உள்ளிட்ட விஷயங்களுடன் நாடு மிக வேகமாக வளர்கின்றது என சொல்கின்றது பட்ஜெட்
எல்லோரும் அஞ்சியது போல கொரோனா இந்திய மக்கள்மேல் மட்டும் அல்ல இந்திய பட்ஜெட்டின் மேலும் ஒரு பாதிப்பும் ஏற்படுத்தவில்லை , தேசம் மிக கம்பீரமாக வெற்றி நடை போடுகின்றது என்பதை உரக்க சொல்லியிருகின்றார் நிதி அமைச்சர்
இது பொதுபடையான பட்ஜெட் என்பதாலும் முதல் முறையாக இந்திய டிஜிட்டல் பட்ஜெட் என்பதாலும் யாரும் இதை தரவிரக்கம் செய்து படித்து கொள்ளலாம், Union Budget App எனும் செயலி அதற்காக அரசால் அறிமுகபடுத்தபட்டிருக்கின்றது.