சீனர்களின் அலட்சியம் இங்கிருந்து தான் தொடங்கியது என்பது ஐயமின்றி புலனாகிறது.
சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் ஒரு குகையில் வைரஸ் மாதிரிகளை மாதிரிகள் சேகரிக்கும் போது COVID-19 பாதிக்கப்பட்ட வெளவால்கள் தங்களை கடித்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு வீடியோ, கொரோனா வைரஸ் தொற்றுநோய் வுஹானையும் பின்னர் உலகத்தையும் தாக்கும் முன், வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (WIV) விஞ்ஞானிகள் கையுறைகள் மற்றும் முகமூடிகள் இல்லாமல் ‘நேரடி வைரஸ் ஆய்வுகளில்’ பணியாற்றுவதைக் காட்டுகிறது. இது முழு பாதுகாப்பு கவசம் அணிந்து ஆய்வகங்களில் பணியாற்றவேண்டும் என்கிற உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு விதிகளை சீன விஞ்ஞானிகள் மீறுவதாக இருந்ததைக் காட்டுகிறது.
அந்த வீடியோவில் ஒரு விஞ்ஞானி தனது வெறும் கைகளால் ஒரு வௌவாலைப் பிடிப்பதை காணமுடிந்தது.
ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகையில் ஒரு வவ்வாலின் பற்கள் அவரது ரப்பர் கையுறைகள் வழியாக ‘ஊசி போல’ சென்றன என்று கூறினார்.
இந்த வகையான செயல்பாடுகள் முதலில், விஞ்ஞானிகள் COVID-19 உட்பட ஒரு கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பது ஒரு சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயம் தான். கொரோனா வைரஸ் தொடர்பான சீனர்களின் அலட்சியம் இங்கிருந்து தான் தொடங்கியது என்பது ஐயமின்றி புலனாகிறது.
கோவிட் 19 வைரஸின் ஆரம்பம் எங்கே இருந்து வந்திருக்கக் கூடும் என்று ஆய்வு செயது வரும் உலக சுகாதார நிறுவன புலனாய்வு குழுவுக்கு இந்த செய்தி மேலும் பல ஐயங்களை எழுப்புகிறது.
.
கொரோனா வைரஸின் ஆரம்ப கட்ட தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் வூஹான் என்றாலும், வைரஸ் தோன்றிய இடம் பற்றிய ஆய்வுக்கு எந்த விதமான அவசியமில்லை என்று சீனா பல மாதங்களாக கூறி வருகிறது. COVID-19 நோயை ஏற்படுத்தும் நாவல் கொரோனா வைரஸ் முதன்முதலில் வுஹானில் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.
பலவிதமான தடங்கல்களும், சீனாவின் இடையூறுகளுக்கு மத்தியில் இந்த ஆய்வைத் தொடங்க WHO குழு வுஹானுக்கு வந்துள்ளது,
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? எனினும் ஒரு ஆய்வறிக்கையை தயாரிக்க வேண்டிய அவசியம் உலக சுகாதார நிறுவனத்துக்கு உள்ளது. ஆனால் இந்த வலையில் சிக்க சீனா விரும்பவில்லை என்பது புலனாய்வின் கால தாமதமான ஆய்வு முனைப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.